Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடன் பிரச்சனையால் அவதியா? வருகிறது ருணவிமோசன பிரதோஷம்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    09-07-2018 | இன்றைய ராசி பலன்| Astrology Tamil | Oneindia Tamil

    சென்னை: நாளை (10/7/2018) செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷத்தை ருணவிமோசன பிரதோஷமாக அனுஷ்டிக்கப்படுகிறது. பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். ஸர்ப தோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும். சிவனை தேவர்கள், மூவர்கள் வழிபடுவது ஒரு பிரதோஷ காலம். உலகை காப்பதற்க்காக ஆலகால விஷத்தை அருந்திய காலம். நந்தி பகவான் அன்றைய தினத்தில் தனது தவத்தை துறந்துவிட்டு மக்களுக்காக எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். அதனால்தான் பிரதோஷம் அன்று சிலர் நந்தியினுடைய காதில் தங்கள் ப்ரார்தனைகளை ரகசியமாக சொல்வார்கள்.

    பொதுவாக பிரதோஷம் அன்று கறந்த பசும்பால் கொடுத்து வழிபட்டால் நல்லது. ஏனென்றால் சிவன் அபிஷேகப் பிரியன். அதனால் கறந்த பசும்பால் கொடுக்கலாம். இல்லையென்றால் இளநீர் வாங்கித் தரலாம். ஏனென்றால் சிவனை அபிஷேகப் பொருளாலும், அர்ச்சனைப் பொருளாலும் வணங்க வேண்டும். இறைவன் எப்பொழுதுமே இயற்கையை விரும்பக்கூடியவன். இயற்கையான வில்வ இல்லை. அதற்கடுத்து பசும்பால். இது எல்லாவற்றையும் விட தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் கடைபிடித்தால் எல்லா வகைகளிலும் சிறப்பாக இருக்கும்.

    செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷம் ருண விமோசன பிரதோஷம் ஆகும். ருணம் என்பது கடனை குறிக்க கூடியது. வேறு விதமாக கூறினால் தோஷங்களை குறிக்கும் எனலாம். பணமாக பெறப்படும் கடன் மட்டுமல்ல. தேவ, பூத,பித்ரு,ஆசார்ய, மனுஷ்ய தோஷம் என்ற வகைப்படும் இவைகளை களைய, இந்நாளில் நந்தியெம்பெருமானை வேண்டி வணங்கி அருகம்புல் மாலைசாற்றி, நெய் தீபம் ஏற்றி,பின் பிரதோஷ வேளையில் சிவபெருமானை பிரதோஷ மூர்த்தியாய் தரிசிப்பது மேற்கூறிய அனைத்து தோஷங்களில் இருந்தும் விடுதலை பெறலாம். கிடைத்தற்கரிய நாள் இது.


    சிவனுக்கு மட்டுமல்ல. ஸ்ரீ மஹா விஷ்னுவிற்கும் உகந்த காலம்தான். பிரஹலாதனின் பக்தியை மெய்பிக்கவும் ஹிரன்ய கசிபுவை வதம் செய்து உலகை காக்கவும் தூணிலிருந்து நர நாராயண ரூபமாய் உக்ர நரசிம்ம மூர்த்தியாக வெளிவந்த காலம் இந்த பிரதோஷ காலம்தான். எப்படி ஈசனுக்கு சனிப் பிரதோஷம் மிகவும் மகிமை வாய்ந்ததோ அதே போல நரசிம்மருக்கு செவ்வாய் கிழமைகளிலும், சுவாதி நட்சத்திரத்திலும் வரும் பிரதோஷங்கள் மிகவும் விசேஷமானவை.


    இந்த நேரத்தில் நரசிம்மரை வணங்கி விருதமிருந்தால் நினைத்த காரியம் கைகூடும், எதிரிபயம் தீரும், தீவினைகள் விலகும், கடன்கள் தீரும், குடும்பத்தில் அமைதி நிலவும் என்பது ஐதிகம். எனவே துயரத்தின் பிடியில் சிக்கிய மனிதர்கள் சிவனயும் ஸ்ரீ நரசிம்மரையும் வழிபடுவதற்கான காலம்தான் பிரதோஷம் காலம். மேலும் துயரத்தின் பிடியில் இருப்பவர்க்கு ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் அருள் இருந்தால்தான் துயரத்தின் தன்மை குறையும். பிரதோஷ காலம் என்பது கோதூளி லக்ன காலம் என்பதால் சிவனையும் விஷ்னுவையும் வணங்குபவர்களுக்கு ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் அருளும் சேர்ந்தே கிடைத்திடும்.


    கடன் தொல்லை:

    கடன் தொல்லை:

    இன்று கடன் பிரச்சனை என்பது இல்லாத நபர்களே இல்லை எனும் அளவுக்கு கிரெடிட் கார்ட் கலாச்சாரம் ஆதிக்கம் செலுத்துகிறது. அதனால் கையில் பணம் இல்லாவிட்டாலும் தகுதிக்கு மீறி பொருட்களை வாங்கி அவஸ்தை படுவது பலருக்கு சர்வ சாதாரணமாகிவிட்டது. கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என கம்பர் ராமாயணத்தில் கடன் தொல்லையை உவமையாக சொல்லியிருக்கிறார். கடன் தொல்லையை காலைச் சுற்றிய பாம்பு என்பர். அந்நிய கலாசாரத்தின் மோகத்தால் தகுதிக்கு மீறிய வாழ்க்கை முறை பலரை கடனாளியாக்கி நடுத்தெருவிற்க்கு கொண்டுவந்து நிறுத்திவிடுகிறது. நிம்மதியாக சென்றுகொண்டிருக்கும் வாழ்கையில் பணத்தேவையால் வரும் துன்பங்களில் கடன் தொல்லைதான் மிகபெரிய பிரச்சனையாக அமையக்கூடியது.

    தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில், நிறைய பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கல்வி கடனாக பெரிய தொகையை வாங்கியிருப்பார்கள். அவ்வாரு வாங்கியவர்களுக்கு படிப்பு முடிந்தவுடன் வேலை கிடைத்துவிட்டால் பரவாயில்லை. இல்லையென்றால் கடன் கட்டுவதற்க்குள் நிம்மதியே போய்விடும்.

     ஜோதிட ரீதியாக கடனாளியாகும் அமைப்பு யாருக்கு?

    ஜோதிட ரீதியாக கடனாளியாகும் அமைப்பு யாருக்கு?

    ஒருவர் எப்போதும் கடனாளியாக இருப்பதில்லை. சூழ்நிலை கடனாளியாக்கிவிடுகிறது. அந்த சூழ்நிலை ஜோதிடத்தில் எப்படி அமைகிறது என பார்ப்போம். ஜோதிடத்தில் ஆறாம் பாவத்தை கடன் பற்றி கூறும் பாவகமாக கூறப்பட்டிருக்கிறது. காலபுருஷனுக்கு ஆறாமிடமாக கன்னி அமைந்துள்ளதால் கன்னி ராசியில் அமர்ந்த கிரகமும் புதனோடு சேர்ந்த கிரகமும் புதனின் வீட்டில் நிற்க்கும் கிரகமும் கடனின் தன்மையை பற்றி கூறும் அமைப்பாகும்.

    ஜாதகப்படி லக்னாதிபதி 6ம் இடத்தில் பகைபெற்றோ தீயகிரகங்களின் சேர்க்கை/பார்வை பெற்றோ அல்லது தனித்தோ அமர்ந்து திசை/புத்தி நடைபெற்றால் அவருக்கு அந்த காலகட்டம் முழுவதும் வம்பு/வழக்கு கடன் தொல்லைகள் ஏற்பட்டு வாழ்கையில் நிம்மதி சீர்குலையும்.வாழ்கையில் போராட்டங்கள் இருந்துகொண்டே இருக்கும்.

    லக்னாதிபதி 6ம் வீட்டிலும் 6ம் வீட்டின் அதிபதி லக்னத்திலும் பரிவர்த்தனை பெற்று அமர்ந்தாலும் அவர்களுக்கு கடன் பிரச்சனைகள் வாழ்நாள் முழுவதும் இருந்துகொண்டே இருக்கும்.

    ஜெனன ஜாதகத்தில் இரண்டாம் பாவாதிபதி ஆறாம் வீட்டில் நின்றால் அவருடைய வாழ்க்கை கடனிலேயே கழியும். ஆறாம் பாவாதிதி லக்னத்தில் நின்றால் ஜாதகர் கேட்காமலே கடனை கொடுத்து கடனாளியாக்கிடுவர்.

    லக்னாதிபதி பலமற்ற நிலையில் இரண்டாம் வீட்டின் அதிபதி குருபகவான் பார்வையின்றி 6ம் இடத்தில் அமர்ந்து திசை நடைபெற்றால் அவர் சம்பாத்தியம் முழுவதும் கடன்/வட்டி கட்டியே வீணாகும்.இவர் யாருக்கும் கடன் ஜாமீன் போடகூடாது.மீறி வாக்குறுதி கொடுத்தால் அந்த கடன் இவர் தலையில் வந்துதான் விடியும்.

    ஜெனன ஜாதகத்தில் லக்னாதிபதி பலமற்று இரண்டாம் வீட்டின் அதிபதி குருபகவான் பார்வையின்றி பன்னிரெண்டாம் பாவத்தில் அமர்ந்து திசை நடைபெற்றால் அவர் சம்பாத்தியம் முழுவதும் கடன்/வட்டி கட்டியே வீணாகும்.சம்பாதிக்கும் எதுவும் மிஞ்சாது.

    லக்னாதிபதி பலமாக இருந்து ஜெனன ஜாதக ஆறாம் பாவாதிபதி தசா புத்தி நடைபெற்றால் திருமணம் போன்ற ஏதோ ஒரு காரணத்திற்க்காக கடன் வாங்கி திரும்ப அடைத்திடுவார்.

    ஆனால் லக்னாதிபதி பலமற்ற நிலையில் ஆறாம்பாவாதிபதி தசாபுக்தி நடைபெறும்போது கடன் வாங்கினால் திரும்ப அடைக்க மிகவும் கஷ்டபடுவர். ஆறாம்பாவத்தோடு தொடர்பு கொள்ளும் கிரகங்களையும் ஆறாம் பாவாதிபதி நிற்கும் வீட்டினையும் கொண்டு ஒருவர் எந்தகாரணத்திற்க்காக கடன் வாங்குகிறார்கள் என்பதை அறியமுடியும்.

    ஒருவர் ஜெனன ஜாதகத்தில் உள்ள சனைச்சரனை கோச்சாரக சனி கடக்கும்போது வாழ்க்கை நிலையில் மாற்றம் ஏற்படும். பல தோல்விகள், வருமானம் இழப்பு, கடன் வாங்கும் சூழல் ஏற்படும்.

    ஒருவர் ஜாதகத்தில் சனி கேது எந்த விதத்தில் இணைவு பெற்றாலும் அது வாழ்க்கையில் வருமானமற்ற நிலையை ஏற்படுத்தும். மேலும் மிகபெரிய கடனை ஏற்படுத்தி வாழ்க்கையில் விரக்தி நிலையை ஏற்படுத்தும். கோச்சாரக சனியும் கேதுவும் ஜெனன சனி மற்றும் கேதுவை கடக்கும்போது இதன் தாக்கத்தை உணரமுடியும்.

     எப்போது கடன் வாங்க கூடாது?

    ஒருவர் ஜாதகத்தில் குரு கால புருஷனுக்கு ஆறாம் பாவமான கன்னியில் அல்லது ஜாதக ஆறாம் பாவத்தில் கோச்சார ரீதியாக பயணம் செய்யும்போது கடன் வாங்க கூடாது. குரு தான் இருக்கும் வீட்டை வளர்ப்பார். எனவே ஆறாம் பாவத்தில் நிற்க்கும் போது கடனை வளர்த்திடுவார்.

    குரு ஸர்ப கிரகங்களுடன் சேர்ந்து நிற்க்கும் போது புதிய கடன்கள் வாங்கவோ அல்லது கடன அடைக்கவோ முயற்சி செய்ய கூடாது.

    ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவை நடைபெறும்போது கடன் வாங்க முயற்சி செய்ய கூடாது. சந்திரபலமற்ற நாளில் கடன் வாங்கும் முயற்சியில் இறங்க கூடாது.

    முக்கியமாக செவ்வாய் கிழமையில் கடன் வாங்கவே கூடாது. மாற்றாக கடன் அடைப்பது சிறந்ததாகும்.

     கடன் பிரச்னையில் இருந்து தீர்வு:

    கடன் பிரச்னையில் இருந்து தீர்வு:

    ஓருவருக்கு திடீர் என மிகப்பெரிய அளவில் ஏற்பட்டால் உடனே அவர்கள் குல தெய்வ வழிபாடு, பித்ரு கடன் ஆகியவை ஒழுங்காக செய்கிறார்களா என ஆராய்ந்தாலே தெரியும். குல தெய்வ வழிபாட்டை மறந்தவர்கள், பித்ருக்களுக்கான தர்பனம், திவசம் ஆகியவற்றை செய்ய மறந்தவர்கள் மற்றும் கடனே என்று செய்பவர்கள் இவர்களுக்கெல்லாம் திடீரேன கடன் ஏற்பட்டு அல்லல் படுவார்கள்.

    கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திருவாரூர் வழியில் அமைந்துள்ளது திருச்சேறை உடையார் கோவில். இங்கு தனி சந்நதியில் ருண விமோச்சனராய் அருள்பாளிக்கிறார் பரமேஸ்வரன். இது கடன் நிவர்த்தி ஆகும் திருத்தலம் ஆகும். வறுமையை நீக்கி செம்மையான வாழ்வளிக்கும் இறைவன், கடன் நிவர்த்தீஸ்வரர் ( ருண விமோசன லிங்கேஸ்வரர் ) என்று அழைக்கப்படுகிறார். இந்த ருணவிமோசனரை பிரதோஷம் அன்று வழிபடுவது சிறப்பு. அதிலும் ருணவிமோசன பிரதோஷத்தில் வழிபட தீராத கடன்களும் தீரும்.

    எந்த காரணத்திற்க்காக கடன் வாங்கினாலும் அது அடைய சனைஸ்வர பகவானின் அருள் தேவை. அவர் அனுக்ரகம் செய்தால்தான் கடன் அடைக்கமுடியும். சனைஸ்வர பகவான் கன்னியில் அமர்ந்துவிட்டால் மலச்சிக்கல் நோய் ஏற்பட்டு "காலைகடனை" கூட அடைக்க முடியாத நிலை ஏற்படும். கடனிலிருந்து விடுபட தொடர்ந்து சனைஸ்வர பகவானை வழிபடுவது அவசியமாகும். அவ்வப்போது திருநள்ளாறு, குச்சனூர், சனிசிங்கனாபூர், சென்னை பொழிச்சலூரில் உள்ள வடதிருநள்ளாறு எனும் ஸ்தலம் ஆகிய ஒன்றிற்கு அவ்வபோது சென்று வரவேண்டும். மேலும் சனைஸ்வர பகவானுக்கு பிரியமான பித்ரு காரியங்களை சரிவர செய்யவேண்டும். சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள பொழிச்சலூரில் உள்ளது அகஸ்தீஸ்வரர் ஆலயம். சென்னையில் உள்ள நவக்கிரகக் கோவில்களுள் சனிபகவான் அம்சத்துக்குரிய கோவிலாக விளங்குகிறது. அகஸ்தியர் பல வருடங்கள் பூஜித்த லிங்கம் இத்தலத்தில் உள்ளது.

    ருணம் எனில் கடன் என்று பொருள். லட்சுமி நரசிம்மரைக் குறித்த ருண விமோசன ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்து வந்தால் எல்லாவித கடன்களும் அடைபடும். லட்சுமி நரசிம்மரின் திருவருள் கிட்டும். ஸ்வாதி நக்ஷத்திரத்திலும் செவ்வாய் கிழமைகளிலும் வரும் பிரதோஷம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு ஏற்ற காலம் ஆகும். செவ்வாயின் உக்ர ரூபத்தை கொண்ட ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு பாணக நிவேதனம் செய்வித்தாலும் கடன் விரைவில் அடையும். சென்னை வேளச்சேரி, திருவல்லிக்கேணி, அரக்கோணம் அருகில் உள்ள சோளிங்கர், சிங்ககிரி, செங்கல்பட்டு அருகில் சிங்கபெருமாள் கோயில், பரிக்கல், திருச்சி ஸ்ரீ ரங்கம் காட்டழகிய சிங்கர் ஆகிய ஊர்களில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம மூர்த்தியை வழிபட அனைத்து கடன்களும் தீரும்.

    ருத்ர மூர்த்தியும் நரசிம்மரும் சேர்ந்த உருவமான ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியை பிரதோஷ காலத்தில் முக்கியமாக ருண விமோசன பிரதோஷ காலத்தில் வழிபட தீராத கடன் தீரும்.

    மேலும் கடன் தீர்ப்பதில் கேது பகவானும் செவ்வாய் பகவானும் மிகவும் பெருபங்காற்றுகின்றனர். கேதுவின் அதிதேவதை வினாயகரை வணங்குவது, செவ்வாயின் அதிதேவதை முருகனை வணங்குவது, கேது செவ்வாய் சேர்க்கை பெற்ற மைத்ர முகூர்த்தத்தில் கடன் அடைப்பது விரைவில் கடன் அடைய சிறந்த வழிகளாகும்.

    ஜாதகத்தில் எந்த விதத்தில் சனி-கேது இணைவு பெற்றும் அதனால கடன் தொல்லையில் சிக்கியவர்கள் சென்னை திருவொற்றியூர் பட்டினத்தார் கோயிலுக்கு வியாழக்கிழமைகளில் சென்று தரிசித்துவர கடன் தொல்லைகள் விரைவில் தீரும்.

    மேற்கண்ட பரிகாரங்களை கடன் வாங்கியவர்கள் மட்டுமல்லாது, கடன் கொடுத்து ஏமாளியானவர்களும் செய்துவர நமக்கு சேரவேண்டிய ஞாயமான கடன் தொகை வசூலாகும்.

    - அஸ்ட்ரோ சுந்தரராஜன்

    9498098786

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+