புத்தாண்டு 2025: பட்ட கஷ்டங்கள் எல்லாம் வெற்றியாக மாறும்.. கும்பம் ராசி பெறப்போகும் பலன்கள் என்ன?
சென்னை: 2025 புத்தாண்டை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ராசிகளில் கும்ப ராசி முக்கியமானது. ஜென்ம சனி அவர்களை படாத பாடு படுத்தியிருக்கும். 2025 வருடத்திலாவது வாழ்வில் ஒளி பிறக்குமா, வழி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் இருப்பார்கள். கும்ப ராசிக்கான 2025 புத்தாண்டு பலனை இங்கு விரிவாக காணலாம்... (new year rasi palan for Kumbam)
ஏழரை சனி ஆரம்பித்ததில் இருந்து வாழ்க்கையில் பல நெருக்கடிகள் வந்திருக்கும். குரு சாதகமான இடத்தில் இல்லாத காரணத்தால் நிலையான எண்ணங்கள் இருந்திருக்காது. முடிவு எடுப்பதில் தடுமாற்றம் இருந்திருக்கும். ஜென்ம சனி விலகுவதால் 2025 அவர்களுக்கு சிறப்பான வருடமாக இருக்கும். ஏழரை சனி தொடர்ந்தாலும் மே மாதத்துக்கு பிறகு குரு பகவான் ஐந்தாவது இடத்துக்கு செல்கிறார். அதனால் ஏழரை நாட்டு சனியின் தாக்கம் குறையும்.

கடந்த காலங்களில் எதை இழந்தார்களோ அது உங்களை வந்து சேரும். மே மாதத்துக்குப் பிறகு இறங்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். உடல் நலம், மனநலத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஜாதகப்படி 12 வருடங்களுக்குப் பிறகு ஐந்தாவது இடத்தில் குரு வருவதால் தடைகள் நீங்கும். இதை பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று சொல்வார்கள். சேர்த்து வைத்த பலன்கள் எல்லாம் புண்ணிய பலன்களாக மாறும். குடும்ப வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் தீரும். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் தேடி வருவார்கள். (Puthandu rasi palan for Kumbam)
வாக்கில் இருந்த தடுமாற்றம் விலகி, உங்கள் வாக்கு ஸ்தானம் பலமடையும். பணம் சார்ந்த விஷயங்களில் இருந்த சிக்கல்கள் மறைந்து பணவரவு அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்னைகளும் விலகி அன்யோன்யம் அதிகரிக்கும். பிரிந்த கணவன் - மனைவி இணைவார்கள். புதிய முயற்சிகளில் துணிவுடன் இறங்கி வெற்றி பெறுவீர்கள். காத்திருப்பில் உள்ள பணிகளை எல்லாம் அடுத்தடுத்து செய்து முடிப்பீர்கள். தன்னம்பிக்கை பல மடங்கு அதிகரிக்கும்.
புத்திர பாக்கியத்துக்காக தவம் இருக்கும் தம்பதிக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். ஜென்ம சனி ஏழாவது இடத்தில் இருந்ததாலும், ராகு கேது சர்ப்ப தோஷத்தாலும் திருமணத்தில் தடை இருந்திருக்கும். இந்தாண்டு திருமண பாக்கியம் கைக்கூடும். காதலர்களுக்குள் இருந்த பிரச்னையும் தீர்ந்துவிடும். கடன் சுமைகள், கொடுக்கல் வாங்கல், வழக்குகளில் சாதகமான அம்சம் உங்களுக்கு உருவாகும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். (2025 Sanipeyarchi for Kumbam)
பாத சனி பண வரவை அதிகரிக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் தேடி வரும். திரைத்துறை, ஊடகத்துறையினருக்கு இந்த வருடம் சிறப்பானதாக இருக்கும். ரியல் எஸ்டேட், விவசாயம் ஆகிய துறையைச் சேர்ந்தவர்களுக்கும் நல்ல முன்னேற்றம் கிடைக்கக் கூடிய வருடமாக இருக்கும். இந்த துறைகளில் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றியை தரும்.
கவனம்: அடுத்த மூன்று வருடங்களுக்கு புதிதாக யாரையும் நம்ப வேண்டாம். அதீத பற்று, அதீத காதல் ஆறாத வடுவாக மாறும். இரண்டில் இருந்த ராகு ஜென்மத்துக்கு வருகிறார், அஷ்டத்தில் இருந்த கேது ஏழாவது இடத்துக்கு மாறுகிறார். அதனால் ஆண் - பெண் உறவு விவகாரத்தில் இரு பாலரும் சற்று கவனமாக இருக்க வேண்டும். நம்பிக்கை துரோகம், பழி ஆகியவை ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளிலும் கவனமாக இருக்க வேண்டும்.
மாணவர்கள்: ஜென்மத்தில் ராகு, வாக்கில் சனி வருவதால் இடையூறுகள் இருக்கும். அதனால் சற்று கூடுதல் கவனத்துடன் படிக்க வேண்டும். சிந்தனைகளில் தடுமாற்றம் ஏற்படும். குரு சாதகமாக இருப்பதால் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும். இருப்பினும் அதற்கு கடுமையான முயற்சியை செய்வது அவசியம். மே மாதத்துக்கு பிறகு கல்வியில் நல்ல முன்னேற்றம் நிச்சயம் கிடைக்கும்.
பெண்கள்: பெண்களுக்கு சுய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும். கடந்த காலங்களில் தொழில் செய்வதற்கான எடுத்த முயற்சி பெரிதாக கைக்கொடுத்திருக்காது. இந்த வருடம் தொழிலில் எடுக்கும் முயற்சி வெற்றியை கொடுக்கும். ஏற்கனவே தொழில் இருந்தால் அதை விரிவுப்படுவதற்கான சூழலும் உருவாகும். திருமணத்துக்கு காத்திருக்கும் பெண்களுக்கு திருமண வாய்ப்பு அமையும்.
பரிகாரம்: ராசியில் ராகு வருவதால் நாக அம்மன் கோயில், லட்சுமி நரசிம்மர், காளிகாம்பாள், வாராகி உள்ளிட்ட உக்கிரமான கடவுள்களை வணங்குவதால் தடைகள் விலகும். சிவன் கோயிலில் செய்யும் பௌர்ணமி வழிபாட்டிலும் தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications