2025 இல் வீடு, நிலம், தொழில் தொடங்கும் யோகம் யாருக்கு தெரியுமா?.. அதிர்ஷ்ட மழை கொட்டப்போகுது
புத்தாண்டு பலன் 2025: 2025 புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளது. இந்த ஆண்டில் வீடு, நிலம் வாங்கும் யோகம் யாருக்கு இருக்கிறது. புதிய தொழில் தொடங்கும் அதிர்ஷ்டம் யாருக்கு உள்ளது. 6 முதல் 9 ஆம் தேதியில் பிறந்தவர்கள், கூட்டுத் தொகை 6 முதல் 9 எண்ணில் வருவர்களுக்கு என்னென்ன பலன் பெறப்போகிறார்கள் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்...
01-01-2025 புத்தாண்டு வரவுள்ளது. புத்தாண்டு நன்மை பயக்கும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதுதான் அனைவருடைய எண்ணமாக இருக்கும். இந்த ஆண்டின் பிறவி எண் 1 ஆம் தேதியாக இருந்தாலும், கூட்டு எண் இரண்டாக வருகிறது. சூரியனும், சந்திரனும் கலந்த வருடம் இந்த 2025. வருடத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் 2025 என்பது 9 எண்ணாக வருகிறது. 9 என்பது செவ்வாய் ஆதிக்கத்தில் இந்த ஆண்டு பிறக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள், அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள், நில புலன் சம்பந்தமான விஷயங்கள், தொழில் முறையில் நல்லது நடக்குமா என்பது குறித்து முடிவெடுப்பது செவ்வாய்தான்.

செவ்வாய் என்பது பூமிக்காரகன். இந்த பூமியில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் இந்தப் புத்தாண்டு இனிய புத்தாண்டாக அமையும். 9 எண் நெருப்பு கிரகம். எனவே, 2025 புத்தாண்டில் தங்களுக்குத்தானே புத்துணர்ச்சி, அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த ஆண்டை நன்மை பயக்கும் ஆண்டாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. விஞ்ஞானம் வளர வளர அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த ஆண்டு உணர்த்தும்.
2025 ஒன்பதாம் ஆம் எண்ணில் வருகிறது. மேஷம், விருச்சிக ராசிக்கு 9 ஆம் எண் வரும். மேஷ ராசி என்பது நெருப்பு கிரகம். விருச்சிக ராசி நீர் கிரகம். நெருப்பு அதிகமாக இருந்து நீர் ஊற்றினால் அணைந்துவிடும். சில இடங்களில் போர்க் குணம் கொண்ட கிரகம் செவ்வாயை அடக்குவது விருச்சிக ராசியாக இருக்கும். எட்டாம் இடத்துக்கு விருச்சிகம் வருவதால் மேஷ ராசியை அடக்குவது விருச்சிக ராசியாக இருக்கும்.
2025 ஆம் ஆண்டுக்கான வீடு, நிலம், தொழில் தொடங்கும் யோகம் யாருக்கும் உள்ளது. பொதுப் பலன்கள். 6 முதல் 9 ஆம் தேதி வரை பிறந்தவர்களுக்கான பலன்கள் குறித்து பார்க்கலாம். பிறந்த தேதி, மாதம் தெரியாதவர்கள் தங்களுடைய பெயரை கூட்டிப் பார்த்து பலன்களை தெரிந்து கொள்ளலாம்...
6, 15, 24 எண்ணில் பிறந்தவர்களுக்கான பலன்கள்: 6 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் சுக்கிரனுடைய ஆதிக்கம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். ஆடம்பரமான வாழ்க்கை, தெளிவான சிந்தனையுடன் செயல்பட கூடியவர்களாக இருப்பார்கள். சுக்கிரனுக்கு இயற்கையாகவே ஒரு கண் தெரியாது. சுக்கிரன் வாழ்வது போன்ற இன்பகரமான வாழ்க்கையே கிடையாது. சுக்கிரன் கலத்திரக்காரகன். சுக்கிரனின் உதவி இருந்தால்தான் திருமணமே நடக்கும். சுக்கிரன் கெட்டுப் போயிருந்தால் ராஜவாக இருப்பார்கள்.
அலங்காரப் பிரியர் சுக்கிரன். தன்னைத் தானே மெருகேற்றிக் கொள்பவர்களாக இருப்பார்கள். 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டில் கடன் பிரச்னையில் இருந்து வெளியில் வந்துவிடுவீர்கள். திடீர் பண வரவு உண்டாகும். கன்னிப் பெண்கள் காதல் வயப்படுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது. நோய் வாய்ப்பட்டிருப்பவர்களுக்கு உடல் ஆரோக்கியம் சுகமடையும். குடும்பத்துக்கு தெரியாமல் எந்தவொரு செயலையும் செய்யாதீர்கள். இந்த 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு அற்புதமான ஆண்டாக இருக்கும்.
7, 16, 25 எண்ணில் பிறந்தவர்களுக்கான பலன்கள்: 7 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் கேது மோட்ச கிரகத்தின் ஆதிக்கம் பெற்றவர்களாக இருப்பார்கள். பெருமைப்படக்கூடிய வாழ்க்கை வாழ்வார்கள். கேது ஞானக்காரகன். வனவாச வாழ்க்கை வாழ்வார்கள். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை போன்றே வாழ்க்கை இருக்கும். 7 ஆம் எண்ணில் உள்ளவர்கள் நிழலைப் பார்த்து பயந்து கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள். ஆனால், அப்படி ஒன்றுவே இல்லவே இல்லை என்பது இந்த ஆண்டு உணர்த்தும்.
சாதிக்கக்கூடிய வல்லமை படைத்தவர்கள், சாதித்த பின்பு அமைதியாக இருப்பார்கள். அமைதியாகவும், தான் உண்டு தன் வேலையுண்டு என்றும் இருப்பார்கள். 7, 16, 25 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு மிகப்பெரிய கடகசேரி யோகம் போன்ற வாய்ப்பு ஏற்படும். சினிமா, அரசியல் துறைகளில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் ஆண்டாக 2025 ஆம் ஆண்டு அமையும். ஜன வசியம், பண வசியம், பேச்சு வசியம் உள்ளவர்களாக இருப்பீர்கள். வீடு வாங்கும் வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்வில் நிம்மதி உண்டாகும்.
8, 17, 26 எண்ணில் பிறந்தவர்களுக்கான பலன்கள்: 8 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் ஏறுமுகம், பாசிட்டிவ் சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள். தனக்கு எதிரில் இருப்பவர்கள், யார் என்னு பார்க்காமல் நீதிமானாக இருப்பார்கள். சனீஸ்வரனின் ஆதிக்கம் பெற்ற இவர்கள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஏறுமுகமும் இருக்கும், சட்டென்று இறங்கவும் வாய்ப்புள்ளது. எனவே, போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து எனும் வகையில் இருப்பது நல்லது.
8, 17, 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கை 2025 ஆம் ஆண்டில் மிகவும் வித்தியாசமாக இருக்கும். விசித்திரமான யோகங்கள் கிடைக்கும். நினைப்பது நடக்கும். சச யோகம் உண்டாகும். தாய் சொல்லை கேட்பவர்களாக இருக்கும் நீங்கள் இந்த ஆண்டும் தாய் சொல்லை கேட்டு நடப்பதே நல்லது. மண், மனை யோகம் உள்ளது. சொத்துகளை பங்கு போட்டு கொடுக்க வேண்டும். மொத்தத்தில் பொற்காலமாக இந்த ஆண்டு உங்களுக்கு அமையும்.
9, 18, 27 எண்ணில் பிறந்தவர்களுக்கான பலன்கள்: 2025 ஆம் ஆண்டு பரபரப்பாக இருக்கும் யோகம் உண்டாகும். கிரகமாலிகா யோகம் உண்டாகும். செவ்வாய் ஆதிக்கம் பெற்ற உங்களுக்கு வீடுகள் மூலம் வருமானம் உண்டாகும். நில, புலன்கள் வாங்கும் யோகம், வெளிநாட்டு பிராயணம், தொழில் ரீதியான ஒப்பந்தம் போடுவது, மனைவி பேரில் தொழில் தொடங்குவது போன்ற அமைப்பு உள்ளது.
உங்களுடைய எண்ணங்கள் லாபகரமாக முடியும். சொந்தபந்தங்களுடன் சண்டை சச்சரவுகள் இல்லாமல் இருந்தாலே எந்தவொரு பிரச்னையும் இருக்காது. குழந்தைகளுடைய வாழ்க்கையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். அதிகாரத்துடனே இருந்தால் குடும்பத்தில் மனத் தாங்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனைத் தவிர்ப்பது நல்லது. அருமையான ஆண்டாக இந்த ஆண்டு அமையும்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications