மேஷத்திற்கு பெயர்ச்சியான ராகு... துலாமிற்கு பெயர்ச்சியான கேது: பரிகார தலங்களில் சிறப்பு பூஜைகள்
இன்று ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு ராகு பரிகார தலமான திருநாகேஸ்வரம் நாகநாதர் சுவாமி கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். கீழப்பெரும்பள்ளம் கேது பரிகார ஆலயத்திலும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சென்னை: வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று மார்ச் 21ஆம் தேதி திங்கட்கிழமை ரிஷப ராசியிலிருந்து மேஷ ராசிக்கு ராகு இடப்பெயர்ச்சி அடைந்தார். கேதுபகவான் விருச்சிக ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார். ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு ராகு பரிகார தலமான திருநாகேஸ்வரம் நாகநாதர் சுவாமி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாலபிஷேகம் செய்து தரிசித்தனர். கீழப்பெரும்பள்ளம் கேது பரிகார ஆலயத்திலும் பக்தர்கள் பரிகார யாகங்களில் பங்கேற்றனர்.
பொருளாதாரத்தில் அதல பாதாளத்தில் இருப்பவரைத் திடீரென கோடீஸ்வரர் ஆக்குபவரும் ராகு. குறைகளையும் நிறைகளையும் வஞ்சகம் இல்லாமல் அள்ளித் தரும் மா வள்ளல் ராகு பகவான். கேது ஞானகாரகன். ஞானம் அருள்பவர். புகழ், பதவி, அதிகாரம் போன்றவற்றைத் தருபவர். கல்வி அறிவு, கேள்வி ஞானம் அருள்பவர்.
ராகு கேது எந்த ராசியில் இருக்கிறார்களோ, எந்தக் கோள்களினால் பார்க்கப்படுகின்றரோ, எந்தக் கோள்களின் சேர்க்கை பெற்றுள்ளனரோ, அதற்கு தக்கவாறு பலன்களை முழுமையாகத் தருவார்கள். இன்று ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு பரிகாரத்தலங்களில் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.

ராகு கேது பெயர்ச்சி
குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சியைப் போலவே ராகு - கேது பெயர்ச்சியும் இன்றைய காலகட்டத்தில் முக்கியமானதாக இருக்கிறது. ராகுவும் கேதுவும் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குச் செல்லும் காலகட்டத்தைதான் நாம் ராகு - கேது பெயர்ச்சி என்கிறோம். வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று மார்ச் 21ஆம் தேதி திங்கட்கிழமை ரிஷப ராசியிலிருந்து இருந்து மேஷ ராசிக்கு ராகு இடப்பெயர்ச்சி அடைந்தார். கேதுபகவான் விருச்சிக ராசியிலிருந்து துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார்.

திருநாகேஸ்வரத்தில் அபிஷேகம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரத்தில் நவக்கிரகங்களான ராகு, பகவானிற்கு நாகநாதசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. சுசீல முனிவரின் குழந்தையை அரவாகிய ராகு தீண்டியதால் ராகுவிற்கு சாபம் ஏற்பட்டது. இதையடுத்து நான்கு தலங்களில் வழிபட்டு, இக்கோயிலின் நாகநாத சுவாமியை மகா சிவராத்திரி நாளில் வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றார். திருநாகேஸ்வரத்தில் மட்டுமே நாகவல்லி, நாகக்கன்னி என இரு தேவியருடன் தனிக்கோயில் கொண்டு மங்கள ராகுபகவான் ஆக அருள்பாலிக்கின்றார்.

ராகுவிற்கு மகா அபிஷேகம்
ராகு பரிகார தலமான இக்கோவிலில் கடந்த வாரம் முதல் லட்சார்ச்சனை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை முதல் கால யாக பூஜையுடன் தொடங்கி, இரண்டாம் காலம், மூன்றாம் காலம் என தொடர்ந்து காலை, மாலை நடை பெற்று இன்று நான்காம் கால யாக பூஜைகள் மஹா பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ராகு பகவானுக்கு பல்வேறு வகையான அபிஷேகம் நடைபெற்றது. ராகு பெயர்ச்சியான போது பிற்பகல் 3 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

கேது பரிகார தலம்
கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கேது ஆலயத்தில் சிறப்பு பரிகார பூஜைகள் நடைபெற்றன. கேது பகவான் ஞானத்துக்கும், மோட்சத்துக்கும் அதிபதியானவர். இன்று கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார். அதனை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கேது பகவானை ஞாயிற்றுக் கிழமைகளில் எமகண்டத்தில் வழிபட்டால் மிகவும் சிறப்பானது. நாகநாதசுவாமி ஆலயத்தில் சிறப்பு பரிகார பூஜைகள் செய்யப்பட்டன. மகாதீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பரிகாரம் செய்தனர்.

தன்வந்திரி பீடத்தில் பரிகார யாகம்
ராகு கேது பெயர்ச்சியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் சிறப்பு ராகுகேது யாகமும் சிறப்பு அபிஷேகமும், விமரிசையாக இன்று மாலை 3 மணி முதல் நடைபெற்றது. இந்த யாகத்தில் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, தனுசு மகரம், மீனம் மற்றும் ராகு தசை, ராகு புக்தி கேது தசை கேது புக்தி, நடப்பவர்களும் பரிகாரங்கள் செய்தனர். இந்த ஹோமத்தில் திருமணத் தடை, உத்தியோகம் இன்மை, அயல்நாட்டுப் பயணம் தடைபடுதல், குழந்தைபேரின்மை, தம்பதிக்குள் ஒற்றுமை மிகுதல், வழக்கு விவகாரங்களில் வெற்றி பெறுதல் போன்ற பல்வேறு பிரார்த்தனைகள் அகல கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது.

ஸ்ரீதேவ துர்க்கை அம்மன்
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த தே ஊரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீதேவ துர்க்கை அம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ குரு மங்கள ராகு கேதுவிற்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. புனித நீர் அடங்கிய கடம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கேது பகவானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. முன்னதாக கேது பகவானுக்கு பால் பன்னீர் இளநீர் சந்தனம் திரவிய பொடி மாப்பொடி மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான பொருட்கள் கொண்டு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. அதனையடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அஷ்டோத்திர சதநாம அர்ச்சனை நடைபெற்றது. ராகு கேது பெயர்ச்சி அடைந்த 3 மணி 13 நிமிடத்திற்கு மகா தீபாராதனை செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications