ராகு கேது பெயர்ச்சி 2023: பத்தில் ஒரு பாவி.. ராகு தரும் திடீர் ஜாக்பாட்.. சுகம் தரும் கேது யாருக்கு?
சென்னை: நவ கிரகங்களில் ராகுவும் கேதுவும் மிக வலிமையான கிரகங்கள். குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி போல ராகு கேதுவிற்கும் முக்கியத்துவம் தருகின்றனர். வரும் ஐப்பசி மாதம் 13ஆம் தேதி அக்டோபர் 30ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. ராகு பகவான் மீனம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். கேது பகவான் கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். மிதுனம் ராசியில் பிறந்தவர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
மிதுனம்: ராகு கேது பெயர்ச்சி மிதுனம் ராசிக்காரர்களுக்கு வெற்றி மீது வெற்றிகள் தேடி வரப்போகிறது. சோதனைகளை சாதனைகளாக மாற்றும் சக்தி படைத்தவர்கள். எத்தனையோ சிக்கல்களை கடந்து வந்திருப்பீர்கள். வருவது வரட்டும் ஒரு கை பார்க்கலாம் என்று எதிர்கொள்வீர்கள். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு அற்புதமான கால கட்டம். தொழில் ஸ்தானத்தில் ராகு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். எதிலும் தனித்துவமாக திகழ்வீர்கள். கேது நான்காம் வீட்டில் வரப்போவது சிறப்பான கால கட்டம்.

ராஜயோக காலம்: ராஜ யோகங்களை தரப்போகிற ராகு கேது பெயர்ச்சியாக உள்ளது. ராகு பகவான் 3,6,11ஆம் இடத்தில் வந்தால் ராகு அற்புத யோகத்தை தரப்போகிறது. ராகுவும் கேதுவும் மிக வலிமையான கிரகங்கள் என்பதால் அதற்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். மிதுன ராசிக்காரர்களுக்கு தற்போது ராகு 11ஆம் வீட்டில் இருக்கிறார் அதுவும் செவ்வாயின் வீட்டில் குரு உடன் பயணம் செய்கிறார் ராகு பகவான் உங்களுக்கு பண வருமானம் தேடி வந்து கொண்டிருக்கிறது.
பண மழை பொழியும்: அஷ்டமத்து சனி உங்களுக்கு அடிமேல் அடி அடித்தது. தொட்டது எல்லாம் தோல்வியாக முடிந்தது. அவமானங்கள், சமூகத்தில் மதிப்பு குறைவு, வேலையிழப்பு என எத்தனையோ சிக்கல்களை சந்தித்தீர்கள். கடந்த சில மாதங்களாகத்தான் சிரிக்கத் தொடங்கியிருக்கிறீர்கள். குரு பகவான் லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் இந்த கால கட்டத்தில் ராகுவும் தற்போது பயணம் செய்கிறார் பண வரவு அற்புதமாக இருக்கும். ராகு கேதுவின் இடப்பெயர்ச்சி உங்களுக்கு நன்மைகளைத் தரப்போகிறது.
தொட்டது துலங்கும்: பத்தில் ஒரு பாவி இருக்க வேண்டும் என்பது ஜோதிட விதி. வாழ்க்கையில் வெற்றிகள் தேடி வரும். சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். வேலை தொழிலில் உங்களுக்கு நல்ல மாற்றம் உண்டாகும். மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கப்போகிறது. மிகப்பெரிய ஏற்றத்தை தரப்போகிறது. அஷ்டமத்து சனியால் ஏற்பட்ட சோதனைகள் முடிவுக்கு வந்து விட்டது. இனி உங்களுக்கு தொட்டது துலங்கும். ஐப்பசி மாதம் முதல் உங்களுக்கு அடை மழை போல பண வருமானம் வரும். புரமோசனுடன் கூடிய இடம் மாற்றம் உண்டாகும்.
ஜாக்பாட் அடிக்கும்: வெளியூர், வெளிநாடு செல்வதற்கான யோகம் தேடி வரப்போகிறது. மிகப்பெரிய நிறுவனங்களில் உங்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. முயற்சிகளை செய்தால் கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். கேது பகவான் 4ஆம் வீட்டில் பயணம் செய்வதால் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். மாணவர்களுக்கு கல்வியில் தடைகள் வந்து நீங்கும். புதன்கிழமை லட்சுமி ஹயக்ரீவரை வழிபட தடைகள் நீங்கி வெற்றிகள் உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வீடு கட்டும் யோகம் தேடி வரும். வங்கிக்கடன் கிடைக்கும். சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல நீங்கள் வாழ்க்கை நடத்தி வெற்றி பெறுவீர்கள். திருமணமாகி குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். உங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது. தடைகள் விலகி பூர்வ புண்ணிய பலன்கள் மூலம் புத்திர பாக்கியம் கிடைக்கப்போகிறது.
பரிகாரம்: உங்கள் வாழ்க்கையில் ராகு கேது பெயர்ச்சியினால் ஏற்படும் சின்ன சின்ன பாதிப்புகளும் நீங்கி சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் காளஹஸ்தி சென்று வணங்கி வருவது அற்புதத்தை ஏற்படுத்தும். சங்கரன்கோவில் சென்று கோமதி அம்மன் சங்கர நாராயணர் கோவிலுக்கு சென்று வணங்கலாம். ராகுவிற்கு பரிகாரம் செய்பவர்கள் வியாழக்கிழமையிலும் கேதுவிற்கு பரிகாரம் செய்பவர்கள் புதன்கிழமையிலும் பரிகாரம் செய்ய வேண்டும். விநாயகரை புதன்கிழமை வழிபட பாதிப்புகள் குறையும். செவ்வாய்கிழமையில் காலபைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.
-
ஆனி மாத பலன்: கன்னி ராசிக்கு குரு சுக்கிரன் தரப்போகும் சர்ப்ரைஸ்.. 2 விஷயத்தில் ரொம்ப கவனம் -
மகரம், கும்பம், மீன ராசிக்கு அதிர்ஷ்ட வாரம்... பணம், பதவி, முன்னேற்றம் காத்திருக்கிறது! -
7 நாட்களில் வரும் குட்நியூஸ்.. துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு இந்த வாரம் எப்படி இருக்கும்? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications