ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: அடிச்சு கூட கேட்பாங்க பணம் கடனாக கொடுக்காதீங்க.. உஷாரா இருங்க!
சென்னை: கையில் இருந்த பணத்தை கடனாக கொடுத்து விட்டு தங்களின் தேவைக்கு பணமில்லாமல் திண்டாடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். ஒரு சிலரோ ஜாமின் கையெழுத்து போட்டு பணம் கடனாக வாங்கிக்கொடுத்து விட்டு கை கட்டி பதில் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.
ராகு கேது பெயர்ச்சி நிகழ்ந்துள்ள இந்த நேரத்தில் ரிஷப ராசிக்காரர்கள் பண உதவி செய்யப்போய் உபத்திரவத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள் என்று எச்சரிக்கின்றனர் ஜோதிடர்கள்.

ரிஷபம்: ராகு பகவான் ரிஷப ராசிக்கு லாப ஸ்தானமான 11ஆம் வீட்டிற்கு வந்திருப்பது சிறப்பு. கேது பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இதுநாள் வரை தடைபட்டு வந்த காரியங்கள் தடைகள் நீங்கி நடைபெறும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்ய கடன் கிடைக்கும். ஆடை ஆபரண சேர்க்கை கிடைக்கும். தொட்டது பொன்னாகும்.
உயர்பதவிகள் தேடி வரும்: அரசியல்வாதிகளுக்கு பதவிகள் தேடி வரப்போகிறது. ஆலய தரிசனம் செய்வீர்கள். உறவினர்கள் வருகையால் நன்மை அதிகரிக்கும். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். கடன் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள். வேலைக்காக யாருக்கும் சிபாரிசு செய்யாதீர்கள். ஜாமின் கையெழுத்து போட்டு கடன் வாங்கிக் கொடுத்து ஏமாந்து விடாதீர்கள்.
முயற்சிகளில் வெற்றி: மீன ராசியில் அமர்ந்துள்ள ராகுவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போக வாய்ப்பு உள்ளது. பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் மீது ராகுவின் பார்வை விழுகிறது. பாக்ய ஸ்தானத்தின் மீது ராகுவின் பார்வை விழுகிறது. செய்யும் தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். வட்டித் தொழில், ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும்.
குடும்பத்தில் குதூகலம்: கணவன் மனைவி உறவுக்கு இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு தடைகள் நீங்கும். புதிய வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். வீண் செலவுகள் கட்டுப்படும். ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்தில் பயணம் செய்யும் போது பொருளாதார நிலை மேம்படும்.
திடீர் பண வருமானம்: எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவையும் ராகு பகவான் தருவார். போட்டி பொறாமைகளை ஒழிப்பார். அடுத்தவர்களின் சூழ்ச்சியால் நீங்கள் மாட்டிய பிரச்சனைகள் இனி தானாகவே மறைந்து விடும். பாகப் பிரிவினை, சொத்து வழக்குகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடியும். திருமணம் நடைபெற்ற தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அரசு தேர்வு எழுதுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
வெளிநாட்டு பயணம்: இதுநாள்வரை தடைபட்டு வந்த நல்ல காரியங்கள் இனி மளமளவென முடியும். திருமணமாகமல் இருந்தவர்களுக்கு தோஷங்கள் நிவர்த்தியாகி திருமணம் கைகூடி வரும். சிலருக்கு பிள்ளைபாக்கியம் வந்து சேரும். குல தெய்வ பிரார்த்தனைக்காக குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வீர்கள். வேலைக்காகவும், படிப்பிற்காகவும் முயற்சி செய்பவர்களுக்கு வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக அமையும். சொத்து வழக்குகள் முடிவுக்கு வந்து உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வரும்.
கேது தரும் யோகம்: கேது பகவான் 5ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்க்கிறார். பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும். அலுவலகத்தில் இதுநாள்வரை உங்களை அலட்சியப்படுத்தியவர்கள் தேடி வந்து பேசுவார்கள். உயர்பதவி தேடி வரும். சம்பள உயர்வும் கூட வரும். பெண்களுக்கு நினைத்ததெல்லாம் நிறைவேறும் காலம் வந்து விட்டது பொன்மழை பொழியும் நேரம் இது.
வெற்றிகள் தேடி வரும்: எதிர்ப்பை தாண்டி வெற்றி கிடைக்கும். உறவினர்களிடையேயான பிரச்சினை நீங்கும். மகிழ்ச்சியும் மன நிம்மதியும் கிடைக்கும். கர்ப்பிணிகள் கவனம் தேவை. காரணம் பூர்வ புண்ணிய ஸ்தான கேது சில சிக்கல்களை ஏற்படுத்துவார்கள். பிள்ளைகள் வழியால் சில சங்கடங்கள் வரலாம். திடீர் மருத்துவ செலவுகள் வரலாம் கவனம்.
செலவுகள் அதிகரிக்கும்: வரவுக்கு மீறிய செலவுகள் வரும். கேதுவின் பார்வையால் உங்களுக்கு உதவிகள் தேடி வரும். சொந்த வீடு வாங்கும் யோகம் வந்து விட்டது. அதற்கேற்ப வருமானமும் அதிகரிக்கும். எதிர்பாலினத்தவர்களிடம் கவனம் தேவை. புதிய நட்புகளிடம் எச்சரிக்கை தேவை. பிரிந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். அம்மா வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். மாணவர்களுக்கு வெளிநாட்டில் படிக்க வாய்ப்பு கிடைக்கும்.
பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை: பிள்ளைகளின் கல்விக்காக அதிக செலவு செய்யும் நீங்கள் அவர்களின் நலனிலும் அக்கறை காட்டுங்கள். நட்புச்சூழலை கவனிக்கவும். பிள்ளைகளின் உயர்கல்விக்காக கடன் சுமை குறையும். பணத்தால் நண்பர்கள் உற்றார் உறவினர் மூலம் சங்கடங்களை சந்தித்த உங்களுக்கு பகையை மறந்து நட்பு பாராட்டுவார்கள். ஆன்மீக பயணம் செல்வீர்கள். மகான்கள் தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும். புதிய முயற்சிகள் கை கூடும். ராகு கேது பெயர்ச்சி உங்களின் வளர்ச்சியை அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications