Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017: துலாம் ராசிக்காரர்களே தொட்டது துலங்கும்!

துலாம் ராசியில் சித்திரை, சுவாதி, விசாகம் பிறந்தவர்களுக்கு சனிப்பெயர்ச்சி பலன்களையும், பரிகாரங்களையும் அறிந்து கொள்வோம்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சனிப்பெயர்ச்சி பலன்கள் 2017: துலாம் ராசிக்காரர்களே தொட்டது துலங்கும்!- வீடியோ

    சென்னை: சனிபகவான் இதுநாள்வரை துலாம் ராசிக்கு 2வது இடமான விருச்சிகத்தில் அமர்ந்திருந்தார் இனி 3 ஆவது இடமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்வது சிறப்பாகும்.

    துலாம் ராசியில் சித்திரை, சுவாதி, விசாகம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சனிப்பெயர்ச்சி பலன்களையும், பரிகாரங்களையும் அறிந்து கொள்வோம்.

    டிசம்பர் 19ஆம் நாள் காலையில் 9 மணிக்கு மேல் சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ச்சியடைகிறார். சனீஸ்வர பகாவன் 19.12.17 முதல் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யப்போகிறார். சனிபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 12வது இடம், 5வது இடம் 9வது இடங்களின் மீது விழுகிறது.

    இனி எல்லாம் நலமே

    இனி எல்லாம் நலமே

    இதுவரை உங்கள் ராசிக்கு 2ம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரித்த சனிபகவான் சொல்ல முடியாத வகையில் துயரங்கள், வேதனைகள், வீண் விரயங்கள் மற்றும் பிரச்சனைகளை கொடுத்து வந்தார். அவர் இப்பொழுது உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் சஞ்சாரம் செய்வது சிறப்பு ஆகும். இதுவரை பட்ட கஷ்டத்திற்கு ஒரு விடிவு காலமாகும்.

    நண்பர்கள் அதிகரிப்பார்கள்

    நண்பர்கள் அதிகரிப்பார்கள்

    சனி பெயர்ச்சி மாபெரும் அதிர்ஷ்டம் கிடைக்கும். 3வது இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். துலாம் ராசிக்காரர்கள் ஏழரை சனியின் பிடியில் இருந்து விடுபடுகிறார்கள். இனி எல்லாம் இன்ப மயம்தான். பகைவர்களாக இருந்தவர்கள் நண்பர்களாக மாறுவார்கள்.

    சோம்பலை கைவிடவும்

    சோம்பலை கைவிடவும்

    படிப்பில் அதிகக் கவனம் தேவை. 3ம் இடத்தில் சனி சஞ்சாரம் ஞாபக சக்தி குறைவு ஏற்படும் என்பதால் சோம்பலை விட்டு சுறுசுறுப்பாக இருக்கவும்.தேவையற்ற விஷயங்களில் கவனத்தை திருப்ப வேண்டாம். விரும்பிய பள்ளி கல்லூரிகளில் சேர்வதில் நிறைய தடைகள் ஏற்பட்டு விலகும்.பலர் வேறு ஊருக்கு படிப்புக்காக செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

    முன்னோர்களின் ஆசி கிடைக்கும்

    முன்னோர்களின் ஆசி கிடைக்கும்


    சனிபகவான் தனது 3வது பார்வையாக உங்களின் ராசிக்கு 5வது இடத்தை பார்க்கிறார்.
    7ஆம் பார்வையாக ராசிக்கு 9வது இடத்தை பார்க்கிறார். 10ஆம் பார்வையாக ராசிக்கு 12வது இடத்தைப் பார்க்கிறார். பித்ருகளின் ஆசி கிடைக்கும். தந்தையினாலும் நன்மைகள் கிடைக்கும். சனி பகவான் 7ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 9ம் இடத்தை பார்வை செய்வதால் உயர்கல்வி பயிலுவதில் இதுவரை இருந்து வந்த தடைகளை நிவர்த்தி செய்வார். வெளிநாட்டு பயணங்கள் ஏற்படும். சனியின் பார்வை பஞ்சம ஸ்தானத்தில் விழுவதால் குழந்தைகளுக்கு வெற்றி கிடைக்கும்.

    காதல் கைகூடும்

    காதல் கைகூடும்

    துலாம் ராசியில் ஜென்ம குரு அமாந்துள்ளார். வேலை தொடர்பான உயர்படிப்புகளை படிப்பீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலைகள் கிடைக்கும். குரு உங்களின் ஏழாம் இடத்தைப் பார்ப்பதால் காதல் கை கூடும். கணவன் மனைவி உறவிற்குள் உற்சாகம் ஏற்படும்.

    சனிபகவானை சரணடையவும்

    சனிபகவானை சரணடையவும்

    தாயார் உடல் நலத்தின் மீது அதிக அக்கறை தேவை. சுவாச உறுப்புகளில் அலர்ஜி ஏற்படும். ரத்த அழுத்தம், ஜீரண உறுப்புகளில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்யவும். ஸ்ரீவைகுண்டம் கைலாச நாதர் கோவிலில் எழுந்தருளியுள்ள ஈசன் சனிபகவானின் அம்சமாக திகழ்கிறார். அவரை வணங்கலாம்.

    சித்திரை நட்சத்திரம்

    சித்திரை நட்சத்திரம்

    சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எப்பொழுதும் சுறுசுறுப்பும் உற்சாகமும் அதிகரிக்கும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சியாக அமையும். கணவன் மனைவி உறவு சீராக இருந்து வரும். சகோதர சகோதரிகளுக்கு சுப காரியங்கள் இனிதே நடந்தேறும். பயணங்களில் எதிர்பாராத தடையேற்பட்டுப் பின் பயணம் தொடரும். வேலையில் மாற்றங்கள் ஏற்படும். ஸ்ரீ ரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்யவும். தயிர்சாதம் தானம் அளிக்கவும்.

    சுவாதி நட்சத்திரம்

    சுவாதி நட்சத்திரம்

    மூத்த சகோதர சகோதரிகளின் அன்பும் ஆதரவும் இருந்து வரும். உயர்கல்வி பயில சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையும். புதிய தொழில்கள் தொடங்க சந்தர்ப்பம் அமையும். வேலையில் முன்னேற்றமும் எதிர்பார்த்த ஊதியம் வந்து சேரும். நண்பர்களிடம் இதுவரை இருந்து வந்த பிணக்குகள் நீங்கி நட்பு பாராட்ட வாய்ப்பு அமையும். ஜென்ம குரு உங்களின் ஏழாம் இடத்தை பார்ப்பதால் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் ஒரு சிலருக்கு திருமணத்தில் முடியும்.

    சங்கரன்கோவில் சங்கரநாராயணரையும், கோமதி அம்பாளையும் வணங்கி வரவும்.

    விசாக நட்சத்திரம்

    விசாக நட்சத்திரம்


    விசாக நட்சத்திரத்தில் பிறந்த உங்களுக்கு எதிர்பார்த்த ஊதியத்துடன் வேலை கிடைக்கும். தேவையான பணப்புழக்கம் இருக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கச் செய்வார். புதுத் தொழிலில் தொடங்குவதில் அதிக கவனம் தேவை. குழந்தைகளின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கச் செய்வார். வெளிநாடு செல்வதில் இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கும். வருமானம் அதிகரிக்கும்.

    நரசிம்மர் தரிசனம் நன்மையில் முடியும்.பரிக்கல்,சிங்கர்குடி தல நரசிம்மர்களை வணங்கவும்.

    [ மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம்]

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+