Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனிப்பெயர்ச்சி 2017 பலன்கள்: விருச்சிகராசிக்காரர்களுக்கு இன்னல்கள் விலகும்!

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஜென்மசனி இனி பாதசனியாக சஞ்சரிக்கப்போகிறார். விசாகம் 4ம் பாதம், அனுஷம்,கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு பலன்களை பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சனிப்பெயர்ச்சி 2017 பலன்கள்: விருச்சிகராசிக்காரர்களுக்கு இன்னல்கள் விலகும்!- வீடியோ

    சென்னை: ஜென்ம சனியாக இருந்தவர் இனி இரண்டரை ஆண்டுகாலம் பாத சனியாக மாறுகிறார். ஜென்மசனி கால கட்டத்தில் பல்வேறு இன்னல்களை அனுபவித்து விட்டீர்கள். இனி எல்லாம் விலகும்.

    டிசம்பர் 19ஆம் நாள் காலையில் 9 மணிக்கு மேல் சனிபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்ச்சியடைகிறார். சனீஸ்வர பகாவன் 19.12.17 முதல் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யப்போகிறார்.

    விருச்சிக ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் சனிபகவான் சஞ்சரிக்கப் போகிறார். விருச்சிகத்தில் உள்ள விசாகம் 4ம் பாதம், அனுஷம்,கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு சனிப்பெயர்ச்சி எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பலன்களை பார்க்கலாம்.

    நன்மைகளே நடக்கும்

    நன்மைகளே நடக்கும்

    ஜென்ம சனியாக இருந்தவர் இனி இரண்டரை ஆண்டுகாலம் பாத சனியாக மாறுகிறார்.

    ஏழரை சனியின் கடைசி கட்டத்தில் இருக்கும் உங்களுக்கு இனி பாத சனியாக இரண்டரை ஆண்டுகள் பயணிக்கப் போகிறார். போக்குச்சனியாக இருப்பதால் நன்மைகள் கிடைக்கும்.

    ஏழரை முடியும் போது பலவித நல்ல பலன்களை கொடுத்து விட்டு செல்வார் சனிபகவான்.

    கவலை வேண்டாம்

    கவலை வேண்டாம்

    ஜென்மசனியில் பாடாய் படுத்தி விட்டார் சனி பகவான். சனிபகவான் உங்கள் ராசிக்கு இரண்டாவது ராசிக்குப் போகிறார். உங்கள் ராசிக்கு 3ம் வீட்டிற்கும் 4ம் வீட்டிற்கு அதிபதியான சனி பகவான் 2ம் வீட்டில் சஞ்சரிப்பதால் குடும்பசனியால் குடும்பத்திற்கு ஆகாது. என்றே கூறுவர். அதை பற்றிய கவலைகளை தூக்கி எறிந்து விடவும். துன்பங்கள் குறையும், நன்மைகள் கிடைக்கும்.

    விட்டுக்கொடுங்கள்

    விட்டுக்கொடுங்கள்

    சனிபகவான் 2ஆம் இடத்தில் சஞ்சரிப்பதால் சகோதர சகோதரிகளால் எதிர்பாராத பண வரவும், பொருள் வரவும் கிட்டும். உறவினர்களால் பொருள் வரவு அல்லது சகாயம் ஏற்படும். புதிய விஷயங்களைக் கற்க ஆர்வம் ஏற்படும். குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்த பகை நீங்கும். சின்னச் சின்ன பிரச்சினைக்கெல்லாம் சண்டை வேண்டாம் உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை.

    கடன் வாங்க வேண்டாம்

    கடன் வாங்க வேண்டாம்

    தன ஸ்தானத்திற்கு வரும் சனியால் செலவுகள் அதிகரிக்கும். சுப செலவுகளாக மாற்றிக்கொள்ளலாம். விரையத்தில் குரு இருப்பதால் செலவுகளை சேமிப்பாக மாற்றுங்கள்.

    அதே நேரத்தில் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து மட்டும் போட வேண்டாம். கடன் வாங்கி பணம் தர வேண்டாம்.

    மாணவர்கள் கவனம்

    மாணவர்கள் கவனம்

    மாணவர்கள் படிப்பில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். சனிபகவான் உங்கள் ராசிக்கு 4வது ஸ்தானத்தை பார்ப்பதால் படிப்பில் கவனம் தேவை. மறதி என்பதை மறைந்து உற்சாகமாக இருக்கப் பழகுங்கள். தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் படிப்பை ஒழுங்காக படித்தல் அவசியம். கல்வி கடன்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். எதிர்பார்த்த பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்க சற்றும் போரட வேண்டி வரும். மாணவர்கள் அகிலாண்டேஸ்வரியை வணங்கலாம்.

    பணப்புழக்கம் அதிகரிக்கும்

    பணப்புழக்கம் அதிகரிக்கும்

    ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதால் வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. வார்த்தைகளில் கவனம் தேவை. விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். ராசிக்கு 11வது இடத்தை சனிபகவான் பார்ப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். இல்லத்தரசிகளுக்கும், பணிக்கு செல்லும் பெண்களும் பொறுமையாக இருப்பது அவசியம்.

    அனுமனை சரணடையுங்கள்

    அனுமனை சரணடையுங்கள்

    உடம்பில் தேமல், சொறி, சிரங்கு இவைகள் வராமல் அல்லது பரவாமம் பார்த்துக் கொள்ளல் அவசியம். சர்க்கரை நோய் இருப்பின் அதை கட்டுக்குள் வைத்து பழகவும். தலை, முகம் அடி வயிறு போன்ற உடல் உறுப்புகளில் பிரச்சனை, கால், பாதம் இவற்றில் நோய் வராமல் மற்றும் பரவாமல் பார்த்துக் கொள்ளவும். நாமக்கல் ஆஞ்சநேயரை வழிபடலாம். ஸ்ரீரெங்கநாதரையும், ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயரையும் பவுர்ணமி நாட்களில் வழிபடலாம்.

    விசாகம் நட்சத்திரம்

    விசாகம் நட்சத்திரம்

    விசாகம் நட்சத்திரத்திரகாரர்களுக்கு குடும்பசனியால் சுபகாரியம் நடக்கும்.

    யாருக்கும் தேவை இல்லாமல் பணம் கடன் கொடுத்தல் கூடாது. பாஸ்போர்ட், விசா இவற்றில் இருந்த தடைகள் நீங்கும். வேலையில் மாற்றம் ஏற்படும். வெளியூர், வெளிநாடு செல்வதில் இருந்த தடைகள் நீங்கும். நரசிம்மரை வணங்கினால் நன்மை நடக்குமா?

    அனுஷம் நட்சத்திரம்

    அனுஷம் நட்சத்திரம்

    அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இடமாற்றம் மனை மாற்றம் ஒரு சிலருகு ஊர் மாற்றமும் அமையும். பணப்புழக்கங்கள் தாரளமாக இருந்து வரும். புதிய தொழில் தொடங்குவதில் அதிக கவனம் தேவை. தாயாரால் எதிர்பாரத நன்மைகள் ஏற்படும்.

    திருக்கொள்ளிக்காடு சனிபகவானை வணங்கவும்.

    கேட்டை நட்சத்திரம்

    கேட்டை நட்சத்திரம்

    கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இதுவரை வராமல் இருந்த வந்த பணம், பொருள் வந்து சேரும். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வம் கூடும். உடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கு சுபகாரியங்கள் நடந்தேறும். அவர்களுக்கு வேலை திருமணம் போன்ற சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். கணவன் மனைவி உறவு சாதகமாக இருந்து வரும்.

    பட்டீஸ்வரம் தலத்திற்கு சென்று துர்க்கையை வணங்கவும்.

    [ மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம்]

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+