சனிப்பெயர்ச்சி 2020: திருநள்ளாறு நளன் தீர்த்த குளத்தில் நீராட தடை - தரிசனம் மட்டுமே
திருநள்ளாறு நளன் குளத்தில் பக்தர்கள் குளிக்க மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். சனிபகவானை தரிசனம் செய்ய மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் வரும் 27ஆம் தேதியன்று சனிப்பெயர்ச்சி விமரிசையாக நடைப்பெற உள்ளது. பக்தர்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் நளன் குளத்தில் பக்தர்கள் குளிக்க தடை விதித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு வரும் 19ம் தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே கோயிலில் வழிபடவும், பூஜைகள், அபிஷேக நிகழ்வுகளில் கலந்து கொள்ள அர்ச்சனை செய்ய அனுமதியில்லை என்று அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர்.

திருநள்ளாறு சனிபகவான் நவகிரக தலங்களில் மிக முக்கியமான தலமாகும். சனீஸ்வர பகவன் தனி சன்னதியில் பொங்குசனியாக அருள்பாலிக்கிறார். தன்னை வேண்டி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை பக்தர்களை துன்பங்களிலிருந்து விடுவிக்கிறார்.
சனிபகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டலை ஆண்டுகள் சஞ்சரிப்பார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆவார். வாக்கிய பஞ்சாங்கப்படி சர்வாரி தமிழ் ஆண்டு வரும் மார்கழி 12, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 05.22 மணிக்கு தனுசு ராசியில் உள்ள உத்திராடம் நட்சத்திரம் 1ம் பாதத்திலிருந்து, மகர ராசியில் உள்ள உத்திராடம் நட்சத்திரம் 2ம் பாதத்திற்கு இடப்பெயர்சி அடைகிறார்.
சனி பகவானுக்கு உரிய ஸ்தலமாக திருநள்ளாறுவில் உள்ள ஸ்ரீ தர்ப்பனேஸ்வரர் கோயிலில் சனி பெயர்ச்சி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்த சனி பெயர்ச்சி திருவிழாவின் போது, ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு பூஜை மற்றும் வழிபாடு செலுத்த விரும்பும் பக்தர்கள் கோயிலுக்கு வருகை தரவோ அல்லது தேவஸ்தானத்தின் இ-சேவா சேவைகளைப் பெறவோ அழைக்கப்படுகிறார்கள். இ-சேவைகளுக்கான பிரசாதங்கள் தபால் மூலம் அனுப்பப்படும். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே சனிபகவானை தரிசனம் செய்ய முடியும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications