சனி பெயர்ச்சி 2020: சொர்ண சனீஸ்வரருக்கு யாகம் - பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள்
வாலாஜாபேட்டை ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரர் ஆலயத்தில் சனி பெயர்ச்சி மஹா யாகம் வருகிற 24.01.2020 வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
சென்னை: சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். தனுசு, மகரம், கும்பம், துலாம், மிதுனம், கடகம் ராசிக்கரர்கள், சனி திசை, சனி புக்தி நடப்பவர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வருகிற 24.01.2020 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை சனிப்பெயர்ச்சி மஹா யாகத்துடன் ஸ்ரீ பாதாள சொர்ண சனீஸ்வரருக்கும், ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது.
மங்களகரமான விகாரி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் தை மாதம் 10ஆம் (24.01.2020) தேதியன்று அமாவாசை திதியில், பிரகாச மூர்த்தியான சூரியனின் நக்ஷத்திரமான உத்திராட நக்ஷத்திரத்தில் வெள்ளிக்கிழமை காலை 09.57 மணிக்கு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
ஜோதிட சாஸ்திரத்தில் நீதிமான், தர்மவான் என்று போற்றப்படுகிறார் சனீஸ்வரர். ஏழை, பணக்காரன், உயர்ந்தவர், தாழ்ந்தவர், மந்திரி, தொழிலதிபர், பிச்சை எடுப்போர் என எந்த பாகுபாடும் இவருக்கு கிடையாது. இவரை பொருத்தவரை எல்லோரும் சமம். அவரவர் பூர்வ ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலாபலன்களை வழங்கி வருகிறார். வாரி வழங்குவதில் இவருக்கு நிகர் இவரே. அதேபோல் கஷ்ட, நஷ்டங்களை கொடுப்பதிலும் தயவு தாட்சண்யமின்றி செயல்படுவார். அதனால்தான் சனியை போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை என்று கூறுவார்கள்.

நீதிமான் சனிபகவான்
சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் கால கட்டத்தில் சங்கடங்கள் இல்லாத சந்தோஷங்களைத் தருவார். ஏழரை சனி காலத்தில் சனிபகவான் விரையசனி, ஜென்மசனி, பாதசனி என படிப்பினைகள் கொடுப்பார். அர்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி, என கஷ்டப்பட்டாலும் கடைசியில் நல்ல விசயங்களை கற்றுக்கொடுப்பார். சனிபகவான் நீதிமான் என்பதால் அவர் சோதனைதான் கொடுப்பார். தண்டனை என்ற பெயரில் புத்தி புகட்டுவார். சிலருக்கு கோடி கோடியாக கொடுப்பார். விபரீத ராஜயோகத்தையும் தருவார்.

சனி பெயர்ச்சி பரிகாரம்
சனி பகவான் மந்தன். மெதுவாக நகரும் கிரகம். ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் தங்கும் சனிபகவான் 12 ராசிகளையும் சுற்றி வர 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்கிறார். எனவேதான் 30 ஆண்டுகள் வாழ்ந்தாரும் இல்லை தாழ்ந்தாரும் இல்லை என்கின்றனர். நிகழ இருக்கும் சனிப்பெயர்ச்சியால் ஏழரைச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனியால் ஏற்படும் தோஷங்கள் குறைய சனிப்பெயர்ச்சி யாகத்தில் தனுசு, மகரம், கும்பம், துலாம், மிதுனம், கடகம் ராசிக்கரர்கள், சனி திசை, சனி புக்தி நடப்பவர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

சனியால் சங்கடம்
சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசியான தனது சொந்த வீட்டிற்குச் செல்கிறார். சனியின் சஞ்சாரம், பார்வையால் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு மேஷம், ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் அதிக பலன்களையும், லாபங்களையும், வளர்ச்சியும் ராஜயோகத்தையும் பெறப்போகின்றனர். அதே நேரத்தில் தனுசு, மகரம், கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியும், துலாம் ராசிக்கு அர்தாஷ்டம சனியும் நடைபெறப்போகிறது. மிதுனம் ராசிக்கு அஷ்டம சனியும், கடகம் ராசிக்கு கண்டச்சனி காலமும் தொடங்கப்போகிறது.

ஆற்றல் தரும் சொர்ண சனீஸ்வரர்
சனீஸ்வர பகவான் பொதுவாக மற்ற கோயில்களில் நவக்கிரகங்களுடன் தனி சன்னதி அமைந்திருக்கும். வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஈசான்ய மூலையில் 20 அடி அகலம் 27 அடி நீளம் 10 அடி உயரத்தில் பாதாளத்தில் மேற்கு நோக்கி சொர்ண சனீஸ்வரராக தனி ஆலயம் அமைத்து கொண்டு சனிபகவான் பக்தர்களுக்கு தரிசனம் மற்றும் அனுக்கிரகம் செய்து வருகிறார். தீராத வியாதிகளுக்கு முன் ஜென்ம பாவங்களே காரணம். முன் ஜென்ம பாவங்களை தீர்க்கும் ஒரே கடவுள் சனீஸ்வரர்தான்.

நோய்கள் தீரும்
இந்த சனீஸ்வரரை வணங்குவதால் அனைத்து வித ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் ஜன்ம சனி, ஏழரை சனி, அர்த்தமசனி, அர்த்தாஷ்டமசனி, அஷ்டமசனி, மற்றும் சனி திசை ஆகிய அனைத்து விதமான தோஷங்களும் ஆயுள் கண்ட பிரச்னைகள் நீங்கி நன்மைகள் ஏற்படும். ஆயுள் கண்டம், இதய நோய், வலிப்பு நோய், தலை சம்பந்தப்பட்ட நோய்கள், எலும்பு, நரம்பு நோய்கள் நீங்க மன அமைதி கிடைக்கவும், கல்வியில் சிறப்பிடம் பெறவும் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகவும், தீராத நோய்கள் விரைவில் திருமணத்தடை நீங்கவும் தன்வந்திரி பீடத்தில் மேற்கண்ட தேதியில் 2020-2023 ஆண்டுக்கான நடைபெறும் சனி பெயர்ச்சி யாகத்தில் பங்கேற்று சொர்ண சனீஸ்வரரை வழிபட்டு நர்பலன்களை பெறலாம் என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

ஜெயமங்கள சனீஸ்வரர்
இச்சனிப்பெயர்ச்சியால் ஏற்படும் தீய பலன்கள் குறையவும், நல்ல பலன்களை அடையவும் சனிப்பெயர்ச்சியாகமும், பாதாள சொர்ண சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், புஷ்பாஞ்சலியும், ஜெய மங்கள சனீஸ்வரருக்கு தைலாபிஷேகமும் நடைபெறுகிறது. பக்தர்கள் அனைவரும் இதில் பங்கேற்று இறையருளுடன் குருவருள் பெற்று ஆரோக்யம், ஆனந்தம், ஐஸ்வர்யத்துடன் நல்வாழ்வு வாழ அன்புடன் அழைக்கின்றோம்.

இந்த ராசிக்காரர்களுக்கு பரிகாரம்
இந்த சனி பெயர்ச்சியால் தனுசு, மகரம், கும்பம், துலாம், மிதுனம், கடகம் ராசிக்கரர்கள், சனி திசை, சனி புக்தி நடப்பவர்கள் பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். விவரங்களுக்கு கீழ்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளவும், ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513. தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications