சனிப்பெயர்ச்சி 2025.. சிம்ம ராசிக்கு அஷ்டம சனியால் பிரச்னைகள் வரும்.. ஆனா.. அந்த ஒரு முக்கிய வாய்ப்பு
சென்னை: சிம்ம ராசிக்காரர்கள் பரபரப்புடனும், பரந்து விரிந்த மனப்பான்மையும் கொண்டவர்கள். 2025 ஆம் ஆண்டு குறித்து பலருக்கும் பலவித எதிர்பார்ப்புகள் இருக்கும். 2025 சனிப்பெயர்ச்சியில் சிம்ம ராசிக்கு அஷ்டம சனி தொடங்குகிறது. இது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும், என்னென்ன குழப்பங்கள் நிலவும், சனிப்பெயர்ச்சியால் சிம்ம ராசிக்கு வரவுள்ள நன்மை, தீமைகள் இதோ...
சிம்ம ராசிக்கு இத்தனை நாள் சனி பகவான் ஏழாம் இடத்தில் அமர்ந்திருந்தார். ஏழாம் இடம் என்பது களத்திர ஸ்தானம். சிம்மத்துக்கு அதிபதி சூரியன். ஏழாம் இடம் சனி பகவான். சூரியனும், சனியும் சத்துரு கிரகங்கள். ஏழாம் இடம் திருமண வாழ்வை குறிக்கும். இதுநாள் வரை அவர்களுக்கு திருமண வாழ்வு பிரச்னையாக இருந்திருக்கும். சிம்மத்துக்கு அஷ்டம சனி தொடங்குகிறது.

இதனால் சனி பகவான் எட்டாம் இடத்துக்கு வரப்போகிறார். சனி பகவான் இருக்கும் இடத்தில் பிரச்னை தொடங்கும். ஏழரை சனியில் பாதி தாக்கம் அஷ்டம சனியில் இருக்கும். குழந்தைகள் சம்மந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகள் விஷயத்தில் புதிய முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. திருமண வரன் சம்மந்தப்பட்ட விவகாரத்தில் சங்கடங்கள் வந்து செல்லும். அதனால் எதையும் நன்கு திட்டமிட்டு செய்வது நல்லது.
லாப ஸ்தானத்தில் குரு அமர்வதால் எவ்வளவு பிரச்னை வந்தாலும் அதை சமாளிக்கும் ஆற்றலும் கிடைக்கும். ஆறாம் அதிபதி எட்டாம் இடத்தில் வருவதால் சில யோகங்கள் வரலாம். நீண்டகால பகைகள் விலகும். குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகும். ராசியில் கேது இருப்பதால் ஞானம் கிடைக்கும்.
சனியால் வேலை உள்ளிட்டவற்றில் மிகப்பெரிய மாற்றங்கள் கிடைப்பதற்கும் வாய்ப்புள்ளது. அது கடினமாக இருந்தாலும் கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும். தேடி வரும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். பிரிந்த கணவன் - மனைவி சேர்வதற்கும் வாய்ப்புள்ளது. பணியில் வெளிநாடு வாய்ப்புகள் உருவாகும். வாழ்க்கை துணையால் சொத்து சேரலாம்.
கவனமாக இருக்க வேண்டியவை: சனி பகவானின் புதனின் நட்சத்தில் சஞ்சாரம் செய்வதால், சில நேரம் உங்கள் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத நிலையும் உருவாகும். சட்டம், வழக்கு விஷயத்தில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். எதிர்பாராத பிரச்னைகள் வரலாம். கடன் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். கவனமாக இல்லாவிடின் அவமானங்கள், தோல்விகள் சந்திக்க நேரிடும். கோபத்தை தவிர்க்க வேண்டும்.
கணவன் - மனைவி இடையே பிரச்னைகள் வந்து செல்லும். வேலைப்பளு அதிகரிக்கும். வாகனத்தில் கவனமாக செல்ல வேண்டும். இரவு நேரப் பயணத்தைத் தவிர்க்கலாம். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பெரிய முதலீடு, தொழில் தொடங்குவது சிக்கலை ஏற்படுத்தலாம். தந்தை உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
மாணவர்கள்: எட்டாம் இடத்தில் உள்ள சனி பகவான், இரண்டாம் இடத்தை பார்ப்பதால் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். கடன் வாங்கக் கூடாது. மாணவர்கள் படிப்பில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டிய காலகட்டம். ராசிக்கு 12வது இடத்தில் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால், பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
பெண்கள்: முக்கியமாக பெண்கள் கால் பாதம் பகுதியில் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. நரம்பு சம்மந்தப்பட்ட விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். கணவர் உறவினரிடம் யோசித்து பேச வேண்டும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் நிதானமாக செயல்படுவது நன்மை தரும்.
பரிகாரங்கள்: எளியவர்களுக்கு தானம் செய்வது, மாற்றுத்திறனாளிகளுக்கு அன்னதானம் செய்வது, வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி திதிகளில் பைரவர் வழிபாடு, சனிக்கிழமை சிவாலயங்களில் வழிபடுவது, திருநள்ளாறு சென்று நீராடி சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து பரிகாரம் செய்யலாம்.












Click it and Unblock the Notifications