சனியும் குருவும் எந்த ராசிக்கார அரசியல்வாதிகளை சனி பாடாய் படுத்தப்போகிறார்கள்..பரிகாரம் என்ன?
சென்னை: சனிபகவான் நீதிமான் என்பதால் அவர் சோதனைதான் கொடுப்பார். தண்டனை என்ற பெயரில் புத்தி புகட்டுவார். சிலருக்கு கோடி கோடியாக கொடுப்பார். விபரீத ராஜயோகத்தையும் தருவார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் சனிபகவானால் சிலருக்கு பாதிப்பு ஏற்படும். அதே போல குரு பெயர்ச்சியும் சில நாட்களில் நிகழப்போகிறது. குரு பெயர்ச்சியாலும், சனி பெயர்ச்சியாலும் எந்த ராசிக்கார அரசியல்வாதிகளுக்கு என்னமாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
சனி பகவான் மந்தன். மெதுவாக நகரும் கிரகம் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் தங்கும் சனிபகவான் 12 ராசிகளையும் சுற்றி வர 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்கிறார் எனவேதான் 30 ஆண்டுகள் வாழ்ந்தாரும் இல்லை தாழ்ந்தாரும் இல்லை என்கின்றனர். சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 3,5,6,9,10,11 ஆகிய இடங்களில் கோச்சார ரீதியாக சஞ்சரிக்கும் கால கட்டத்தில் சங்கடங்கள் இல்லாத சந்தோஷங்களைத் தருவார். ஏழரை சனி காலத்தில் சனிபகவான் விரையசனி, ஜென்மசனி, பாதசனி என படிப்பினைகள் கொடுப்பார். அர்தாஷ்டம சனி, கண்டச்சனி, அஷ்டம சனி, என கஷ்டப்பட்டாலும் கடைசியில் நல்ல விசயங்களை கற்றுக்கொடுப்பார்.

சனிபகவான் கும்ப ராசியான தனது சொந்த வீட்டில் பயணம் செய்கிறார். இந்த சனி பெயர்ச்சியால் ஏழரைச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனியால் அவதிப்படபோகும் அரசியல்வாதிகள் யார் யார் என்று பார்க்கலாம். அதே நேரத்தில் கோடீஸ்வர யோகம், விபரீத ராஜயோகம் பெறும் ராசிக்காரர்கள் யார் யார் என்றும் பார்க்கலாம். அதே போல சுப கிரகமான குரு பகவானும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மேஷ ராசிக்கு வருகிறார். இது கோச்சார ரீதியாக சில ராசிக்காரர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும்.
மேஷம்: மேஷம் ராசிக்காரர்களுக்கு இது லாப சனி காலமாகும். செய்யும் தொழிலில் லாபமும், அபரிமிதமான வருமானமும் கிடைக்கும். சனிபகவான் பார்வை உங்க ராசியில் விழுவதும் கூடுதல் பலம். அரசியல்வாதிகளுக்கு சொல்வாக்கு உயரும். சிலர் விமானம் ஏறி வெளிநாடு செல்வீர்கள். அரசியல்வாதிகள் நினைத்த பதவி தேடி வரும். உங்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரும். அதே நேரத்தில் ஜென்ம ராசியில் ராகு உடன் குரு இணையப்போவதால் உங்களின் செயல்பாடுகளில் கவனம் தேவை. பொதுக்கூட்டங்களில் பேசும் வார்த்தைகளில் நிதானம் அவசியம்.

ரிஷபம்: சனி பகவான் ரிஷப ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். ஆட்சி பெற்ற சனியால் சச யோகம் செயல்படும். இந்த ராசிக்கார அரசியல்வாதிகளுக்கு புது பதவி கிடைக்கும். சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது. புதிய கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். கோடீஸ்வர யோகம் வரப்போகிறது. விரைய குரு உங்களுக்கு சுப விரைய செலவுகளை ஏற்படுத்துவார். எனவே தேவையற்ற செலவுகளை குறைத்து சனிபகவான் கொடுப்பதை பத்திரமாக பாதுகாத்து தான தர்மங்கள் செய்யுங்கள்.

மிதுனம்: சனியால் கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக படாத பாடு பட்டிருப்பீர்கள். அஷ்டம சனி முடிந்து பாக்கிய சனி தொடங்குகிறது. சனியால் யோகங்கள் அதிகம் கிடைக்கும். ஏனெனில் இது தர்ம சனி காலம். பதவியில் உயர்வு புரமோசன் கிடைக்கும். லாப குருவும் உங்களுக்கு அற்புதங்களை நிகழ்த்தப்போகிறது. தொட்டது பொன்னாகும். நினத்தது நிறைவேறும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த இந்த ராசிக்கார அரசியல்வாதிகளுக்கு அமைச்சர் பதவியும் கிடைக்க வாய்ப்புள்ளது. நிறைய தான தர்மங்களை செய்யுங்கள்.

கடகம்: சனிபகவான் இதுநாள் வரை கண்டச்சனியாக இருந்து கஷ்டங்களைக் கொடுத்தார். இனி எட்டாம் வீட்டில் அஷ்டம சனியாக பயணம் செய்கிறார். அஷ்டம சனியால் சில அரசியல்வாதிகள் கஷ்டத்தை அனுபவிக்கப்போகிறார்கள். அதே நேரத்தில் எட்டாம் வீட்டு அதிபதி சனி எட்டில் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோக காலமாகும். குரு பகவான் தொழில் குருவாக பயணம் செய்யப்போகிறார். பத்தில் குரு பதவியை பறிப்பார் என்று சொல்வார்கள் இந்த கால கட்டத்தில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அவை உங்களுக்கு சாதகமாகவே முடியும். திடீர் பணவரவு கிடைக்கும். மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய நற்காரியங்களை செய்யுங்கள்.

சிம்மம்: சிம்மம் ராசிக்கார அரசியல்வாதிகளே சனிபகவான் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் கண்டச்சனியாக பயணம் செய்கிறார் சனியால் மிகப்பெரிய சச யோகம் தேடி வரப்போகிறது. சிம்ம ராசிக்கார அரசியல்வாதிகளுக்கு புகழ், செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். சனிபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைகிறது. அதே போல பாக்ய ஸ்தானமான9ஆம் வீட்டில் பயணம் செய்யும் குரு பகவான் உங்கள் ராசியை பார்வையிடுவது சிறப்பு. ஆட்சி அதிகார பதவியில் மிகப்பெரிய ராஜயோகம் கிடைக்கப்போகிறது.

கன்னி:சனி பகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து முழு ராஜயோகத்தையும் தரப்போகிறார். உங்கள் ராசி அதிபதிக்கு எதிரியாகவே இருந்தாலும் சனி ஆறாம் வீட்டு அதிபதி ஆறில் ஆட்சி பெற்று அமர்ந்து விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். கன்னி ராசியில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு இனி இரண்டரை ஆண்டு காலம் ராஜயோக காலம் செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். அதே நேரத்தில் குரு பகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்வதால் ஒவ்வொரு செயல்களையும் கவனமாகவும் நிதானமாகவும் எடுத்து வைப்பது அவசியம்.

துலாம்: அர்தாஷ்டம சனியால் கஷ்டங்களையும் நோய்களையும் அனுபவித்த நீங்கள், விபத்துக்களை சந்தித்த உங்களுக்கு துன்பங்களில் இருந்த விடிவுகாலம் பிறந்து விட்டது. பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமரும் சனிகவான் உங்களுக்கு பல நன்மைகளையும் யோகங்களையும் தரப்போகிறார். பணவரவு அதிகமாகவே இருக்கும். அரசியல்வாதிகளுக்கு இனி வளர்ச்சிதான். ஏற்றம் தரும் சனி பெயர்ச்சியாக அமைந்துள்ளது. குரு பெயர்ச்சியும் உங்களுக்கு நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது. குரு பகவானின் நேரடி பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. குரு பலன் உங்களுக்கு புதிய பதவியை தேடி கொடுக்கும். அமைச்சர் பதவியும் தேடி வரும். அனுபவிக்கத் தயாராகுங்கள்.

விருச்சிகம்:விருச்சிக ராசிக்காரர்களே... உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டு அதிபதி நான்கில் ஆட்சி பெற்று பயணம் செய்வதால் சச யோகம் தேடி வரப்போகிறது. இனி உங்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறப்போகிறது. ஆசைகளை குறிக்கோள்களை சனி பகவான் நிறைவேற்றுவார். விருச்சிக ராசியில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு பதவிகளும் பட்டங்களும் தேடி வரப்போகிறது. குரு பகவான் ஆறாம் வீட்டில் பயணம் செய்வதால் எதிரிகள் தொல்லையும் ஒழியும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் எதிரிகளை காணவில்லை என்று சொல்லும் அளவிற்கு எதிரிகள் மறைந்து போவார்கள்.

தனசு: தனுசு ராசி அரசியல்வாதிகளே..ஏழரை சனி உங்கள் ராசியை விட்டு விலகி விட்டது. இனிதான் உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத சம்பவங்கள் நடைபெறப்போகிறது. உங்கள் ராசிக்கு இருந்த பிரச்சினைகள் சிக்கல்கள் நீங்கப்போகிறது. காரியங்கள் வெற்றியை கொடுக்கும். இந்த ராசிக்கார அரசியல்வாதிகளுக்கு இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனி இனி லாபங்களைத் தருவார். குருபகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார். கட்சித்தலைமையில் பார்வை உங்கள் மீது விழப்போகிறது. நல்ல பதவியும் தேடி வந்து உங்களை மகிழ்ச்சியடையச் செய்யப்போகிறது.

மகரம்: மகர ராசிக்காரர்களே ஏழரை சனியில் உங்களை பிடித்திருந்த ஜென்ம சனி விலகி விட்டது. பாத சனி உங்களை லேசாக பதம் பார்க்கும். சனியின் கடைசி இரண்டரை ஆண்டு காலம் பாத சனியாக தொடர்வதால் கொஞ்சம் கவனம் தேவை. இரண்டரை ஆண்டு காலங்கள் கஷ்டங்களைக் கடந்து விடுவீர்கள். எவ்வளவோ பாத்துட்டோம் இதையும் ஒரு கை பார்த்துடுவோமே என்ற தெம்பு வந்து விடும். உங்களின் புதிய பயணங்களால் நன்மைகள் அதிகரிக்கும். குரு பகவான் நான்காம் வீட்டில் சுக ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். சுகமான நாட்களாக இனி வரும் நாட்கள் அமையப்போகிறது. ராஜயோகம்தான் புதிய பதவி கிடைப்பதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றம் ஏற்படப்போகிறது.

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு இரண்டரை ஆண்டு காலம் ஜென்மசனி காலமாகும். சனி பகவான் தன்னுடைய ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். அரசியல்வாதிகளுக்கு பொறுப்பு அதிகரிக்கும். குருவின் பயணம் சாதகமாக இருப்பதால் நன்மைகள் அதிகம் நடைபெறும். உழைப்புக்கு முக்கியத்துவம் தருவீர்கள். கட்சி தலைமையின் ஆதரவு கிடைக்கும். புதிய பதவிக்காக செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி ஆரம்பம் என்பதால் அதன் பலனை அனுபவிக்க ஆரம்பித்திருப்பீர்கள். முதல் இரண்டரை ஆண்டுகள் விரைய சனி. இந்த கால கட்டத்தில் சனிபகவான் விபரீத ராஜயோகத்தையும் தருகிறார். மீன ராசியில் பிறந்த அரசியல்வாதிகளுக்கு சனிபகவானின் சஞ்சாரம் சாதகமான பலன்களைத் தரப்போகிறது என்றாலும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. தலைமையில் எதிர்ப்பை சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது. குரு பகவான் இரண்டாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைகிறார் வார்த்தைகளில் கவனமும் நிதானமும் தேவை.

-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications