சனி பெயர்ச்சி 2022: ஏழரை சனி என்றால் என்ன? விரைய சனி, ஜென்ம சனி, பாத சனியால் யாருக்கு பாதிப்பு

சனியால் கிடைக்கும் பலன்கள் எந்த அளவிற்கு அதிகமானதோ அதே போல பாதிப்புகளும் அதிகம் இருக்கும் என்பதால்தான் பலரும் பயப்படுகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏழரை சனி காலம் என்றாலே எல்லோருக்கும் பயம்தான். இப்போது தனுசு, மகரம், கும்பம் ராசிக்கு ஏழரை சனி நடைபெறுகிறது. இன்னும் சில மாதங்களில் தனுசு ராசிக்கு ஏழரை சனி முடிகிறது மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலம் தொடங்குகிறது. ஏழரை சனி என்றால் என்ன அதனால் என்ன பாதிப்பு வரும் என்னென்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

வேலையில் பிரச்சினை, குடும்பத்தில் பிரச்சினை என்றாலே என்னடா ஒரே ஏழரையா இருக்கு என்று பலரும் சலித்துக்கொள்வார்கள். ஒருவருக்கு ஏழரை சனி காலம் வரப்போகிறது என்பதை சில அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

சனிபகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டு காலம் பயணம் செய்வார். ராசிக்கு 12ஆம் வீடு, ஜென்ம ராசி, இரண்டாம் வீடுகளில் சனிபகவான் கோச்சார ரீதியாக அமரும் காலங்கள் ஏழரை சனி. ஒருவர் பிறக்கும் போதே ஏழரை சனி காலத்தில் பிறந்திருப்பார்கள்.

கும்பத்திற்கு அதிசார பயணம்

கும்பத்திற்கு அதிசார பயணம்

இப்போது மகர ராசியில் சனிபகவான் ஆட்சிபெற்று அமர்ந்திருக்கிறார். தனுசு ராசிக்காரர்களுக்கு பாத சனியாகவும், மகர ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனியாகவும் கும்ப ராசிக்காரர்களுக்கு விரைய சனியாகவும் உள்ளது.

ஏப்ரல் மாதம் 29ஆம் தேதியன்று சனி பகவான் மகரத்திலிருந்து, கும்ப ராசிக்கு அதிசாரமாக பெயர்ச்சியாக உள்ளார்.
கும்ப ராசியும் சனிபகவானின் வீடுதான்.ஜூலை 12ஆம் தேதியன்று சனி பகவான் கும்ப ராசியில் இருந்து வக்ர கதியில் பயணிப்பார். அக்டோபர் 23ஆம் தேதியன்று மகர ராசியில் இருந்து மீண்டும் நேர்கதியாக பயணம் செய்வார்.

கும்ப ராசிக்கு ஜென்ம சனி

கும்ப ராசிக்கு ஜென்ம சனி

கும்ப ராசி சனிபகவானின் ஆட்சி வீடுதான். 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் ஆட்சி பெற்று ஜென்ம அமரப்போகும் சனிபகவான் அங்கிருந்து மேஷம், சிம்மம், விருச்சிக ராசிகளைப் பார்வையிடுகிறார். இந்த இடப்பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களுக்கு விரைய சனியாகவும் மகர ராசிக்காரர்களுக்கு பாத சனி காலமாகவும் மாறுகிறது. தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் தாக்கத்தில் இருந்து நிம்மதி பெருமூச்சு விடலாம்.

அஷ்டம சனி கண்டச்சனி

அஷ்டம சனி கண்டச்சனி

கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகும் சனியால் கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி ஆரம்பமாகிறது. சிம்ம ராசிக்காரர்களுக்கு கண்டச்சனி காலம் ஆரம்பமாகிறது. இந்த இரண்டு ராசிக்காரர்களும் இரண்டரை ஆண்டு காலம் கவனமாகவும் வேலை செய்யும் இடங்களில் விழிப்புணர்வோடும் இருப்பது அவசியம். வேலை மாறுவது, இடம் மாறுவது தொழில் முதலீடு செய்வது போன்றவற்றை தவிர்க்கவும். விருச்சிக ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி காலம் ஆரம்பமாகிறது.

கன்னி ராசிக்காரர்களுக்கு யோகம்

கன்னி ராசிக்காரர்களுக்கு யோகம்

மேஷ ராசிக்காரர்களுக்கு லாப சனியாகவும், ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் சனி பெயர்ச்சியாகவும் மாறுகிறது. மிதுன ராசிக்காரர்கள் கடந்த 5 ஆண்டு காலம் பட்ட கஷ்டங்கள் முடியப்போகிறது. கன்னி ராசிக்காரர்களுக்கு ருண ரோக சத்ரு ஸ்தான சனியாக மாறி நன்மை செய்யப்போகிறார். அதே நேரத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு பூர்வ புண்ணிய சனியாக மாறி அமர்கிறார்.

என்ன பரிகாரம் செய்யலாம்

என்ன பரிகாரம் செய்யலாம்

இந்த சனிப்பெயர்ச்சியால் மகரம், கும்பம், மீனம், மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம் ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும். விநாயகர் கோவிலுக்கு சென்று அருகம்புல் சாற்றி வழிபடலாம். அனுமன் கோவிலுக்கு சென்று வெண்ணெய் சாற்றியும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். வீட்டு வாசலில் பச்சரிசி கோலம் போட ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டம சனியால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+