சனி பெயர்ச்சி பலன் 2023: விரைய சனி.. ஏழரை சனியில் விபரீத ராஜயோகம் பெறும் ராசிக்காரர் யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனி பகவான் கும்ப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். மகரம், கும்பம், மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். திருநள்ளாறு சனிபகவான் ஆலயத்தில் டிசம்பர் 20ஆம் தேதி சனி பெயர்ச்சி நிகழ உள்ள நிலையில் ஏழரை சனி காலத்தில் மீன ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது. விரைய சனி காலத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு விரைய சனி காலமாகும். ஏழரை சனி ஆரம்பித்து விட்டதே என்று பதற்றமாக இருக்கிறார்கள். ஏழரை சனியால் பயமோ அச்சமோ தேவையில்லை. உங்களின் தசாபுத்திக்கு ஏற்பதான் சனிபகவான் பலன்களைத் தருவார். யோக காலமாக இருந்தால் உங்களுக்கு சனி பகவான் நல்லதே செய்வார். பண விசயங்களில் கவனம் தேவை. லாப சனி காலத்தில் அள்ளிக்கொடுத்ததை விரைய சனி காலத்தில் வீணாக செலவு செய்து விடக்கூடாது.

Sani peyarchi palan 2023: Meenam Rasi Sani Peyarchi Palan and Parikaram

கோபம் வேண்டாம்: பொறுமையும் நிதானமும் தேவை. கோபத்தை கட்டுப்படுத்துங்கள். வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றம் உண்டு. புரமோசன் கிடைக்கும். வேலையில் இருந்த எதிர்ப்புகள் விலகும். உயரதிகாரிகள் அன்போடு பேசுவார்கள். கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். சிலருக்கு புரமோசனும் கிடைக்கும்.

சனி பார்வை: சனி பகவான் மீன ராசிக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாவது வீட்டினை பார்வையிடுகிறார். அதே போல ருண ரோக சத்ரு ஸ்தானமான ஆறாவது வீட்டினை பார்வையிடுகிறார். அதே போல உங்களுடைய ராசிக்கு 9ஆவது வீடான பாக்ய ஸ்தானத்தை பார்வையிடுகிறார். உங்களுக்கு தேவையில்லாத விசயங்களில் தலையிடாதீர்கள்.

பேச்சில் கவனம்: குடும்பத்தில் குதூகலமாக இருக்கவேண்டும். வாழ்க்கை துணையிடம் அன்பாக பேசுங்கள். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் குறை சொல்லி பேச வேண்டாம். அதுவே உங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். கோபமான பேச்சுக்களை கட்டுப்படுத்துங்கள். ஆத்திரத்தோடு கோபத்தோடு எழுபவன் நஷ்டத்தோடு அமருவான் என்று சொல்வார்கள். பேச்சில் பொறுமையும் நிதானமும் அவசியம்.

பண விசயத்தில் கவனம்: சனிபகவான் பார்வை உங்களுடைய ராசிக்கு ஆறாவது வீட்டின் மீது விழுகிறது. தொழில் வியாபாரத்திற்கு வாங்கிய கடனை அடைப்பதற்கான நேரம் வந்து விட்டது. வருமானம் பல மடங்காக உயரும். உல்லாச பயணம் செல்வீர்கள். வெளியூர் வெளிநாடு பயணங்கள் செல்வீர்கள். யாருக்கும் பணம் கடனாக தரவேண்டாம். ஜாமின் கையெழுத்து போட்டு சிக்கிக்கொள்ளாதீர்கள் பணத்திற்கு நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும்.

வீடு கட்டும் யோகம்: சனிபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்தின் மீது விழுகிறது. தந்தையாருக்கு திடீர் மருத்துவ செலவுகள் வரும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பூர்வீக சொத்துக்களை விற்பனை செய்யும் வகையில் லாபம் அதிகரிக்கும். விரைய சனி காலம் என்பதால் வீட்டில் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். சொந்த வீடு கட்டுவீர்கள். இந்த இரண்டரை ஆண்டு காலத்திற்குள் வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள்.

பேராசை வேண்டாம்: தொழில் வியாபாரத்தில் கவனமாக இருக்கவேண்டும். கூட்டுத்தொழில் ஆரம்பிக்க வேண்டாம். கூட்டாளியை நம்பி பணத்தை கொடுத்து ஏமாந்து விடாதீர்கள். செய்யும் முதலீடுகளில் கவனம் தேவை அகலக்கால் வைத்து ஆபத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள். புதிய தொழிலை தொடங்கி மாட்டிக்கொள்ளாதீர்கள்.

பரிகாரம் என்ன: அங்கீகாரம் இல்லாத நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து மாட்டிக்கொள்ளாதீர்கள். பேராசை பெருநஷ்டமாகிவிடும். பாதிப்புகள் குறைய ஒருமுறை திருநாள்ளாறு சென்று தர்பாரண்யேஸ்வரரை வணங்கி வருவது நல்லது. ஏழைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு நீங்கள் உதவி செய்யும். தூய்மை பணியாளர்களுக்கு ஆடைகளை வாங்கிக்கொடுங்கள் அற்புதங்கள் நடைபெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+