For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சனி பெயர்ச்சி பலன் 2023: சனி மகாதிசை..19 ஆண்டுகள் அள்ளிக்கொடுக்கப்போகும் சனி..யாருக்கு தெரியுமா?

சனி மாகதிசை 19 ஆண்டுகள் நடைபெறும். சனிபகவான் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் சனிமகாதிசையில் பல நன்மைகள் நடைபெறும்.

Google Oneindia Tamil News

சென்னை: ஒருவருக்கு எதிரிகள் யார் நண்பர்கள் யார் என்று சனிதிசையில் புரியவைப்பார் சனிபகவான். வாழ்க்கையில் ஞானத்தை உணரவைப்பார் சனிபகவான். நல்லது எது கெட்டது எது என்று புரிய வைப்பார். உளவியல் ரீதியாக ஞானத்தையும், பொருளாதார ரீதியாக நெருக்கடிகளையும் தருவார் சனிபகவான். காதல் விசயங்களில் பலருக்கு தோல்வியை தருவார் எனவே சனி திசை நடக்கும் போது வாழ்க்கைத்துணையை தேர்வு செய்வதில் கவனம் தேவை.

நவகிரகங்களில் சனிபகவான் உழைப்பால் உயரவைப்பார். ஒருவருக்கு கேது தொடங்கி புதன் வரை 27 நட்சத்திரங்களில் அடிப்படையில் ஒன்பது தசைகள் வரிசையாக நடக்கின்றன. ஆயுளை பொறுத்து ஒருவருக்கு ஒன்பது தசைகள் 120 ஆண்டுகள் நடந்தால் அவர்கள் அதிர்ஷ்டசாலி. இதில் சனி மகாதிசை 19 ஆண்டுகள் நடைபெறும். அந்த ஜாதகரை 19 வருடங்கள் தனது பிடியில் வைத்திருப்பார் சனிபகவான்.

சனிபகவான் ஒருவரின் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் சனிமகாதிசையில் பல நன்மைகள் நடைபெறும். ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய ஆறு லக்னங்களுக்கு சனி பகவான் யோகம் தருவார். அதே நேரத்தில் மேஷம், விருச்சிகம், கடகம், சிம்மம்,தனுசு, மீனம் ஆகிய லக்னகாரர்களுக்கு இருக்கும் இடத்தைப் பொருத்து சனிபகவான் நன்மை தீமை கலந்த பலனைத் தருவார்.

Sani peyarchi Palan 2023: Shani maha Dasha good and bad lagnas and Remedies

ஒருவருக்கு எதிரிகள் யார் நண்பர்கள் யார் என்று சனிதிசையில் புரியவைப்பார் சனிபகவான். வாழ்க்கையில் ஞானத்தை உணரவைப்பார் சனிபகவான். நல்லது எது கெட்டது எது என்று புரிய வைப்பார். உளவியல் ரீதியாக ஞானத்தையும், பொருளாதார ரீதியாக நெருக்கடிகளைத் தருவார் சனிபகவான். காதல் விசயங்களில் பலருக்கு தோல்வியை தருவார் எனவே சனி திசை நடக்கும் போது வாழ்க்கைத்துணையை தேர்வு செய்வதில் கவனம் தேவை.

சனிபகவான் நன்றாக இருந்தால் அவரின் ஆயுள் நன்றாக இருக்கும் தொழில் நன்றாக இருக்கும். தீர்க்க ஆயுள் நல்ல நண்பர்கள், நிறைய உறவினர்கள் இருப்பார்கள். நன்றாக பழகுவார்கள். அனைவரும் சமமே என்று பழகுவார்கள். உழைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். சனி ஒரு ஜாதகத்தில் பாதிப்பாக இருந்தால் மந்தமாக சோம்பேறியாக இருப்பார். சனி கால் பகுதி. பூர்வீக கர்மா, தொழில் பலத்தை குறிக்கும். ஆயுளை குறிக்கும்.
சனி எந்த லக்னகாரர்களுக்கு யோககாரராக இருப்பார் என்று பார்க்கலாம்.

மேஷத்தில் நீசமடையும் சனி மேஷத்திற்கு பாதகாதிபதியாகவும் செயல்படுவார் என்றாலும் பிறந்த ஜாதகத்தில் 11வது இடத்தில் இருந்தால் நன்மைகளையே செய்வார். மேஷம், விருச்சிகம், கடகம், சிம்மம் ஆகிய லக்னகாரர்களுக்கு சனிபகவான் அதிகம் நன்மை செய்ய மாட்டார். அதே நேரத்தில் சனி 3, 10, 11, ஆகிய இடங்களில் நின்றிருந்தால் சனி நல்லது செய்வார்.

ராகு கேது பெயர்ச்சி பலன்: 18 ஆண்டுகளுக்குப் பின் மீன ராசியில் அமரும் ராகு..குபேர யோகம் பெறுவது யார் ராகு கேது பெயர்ச்சி பலன்: 18 ஆண்டுகளுக்குப் பின் மீன ராசியில் அமரும் ராகு..குபேர யோகம் பெறுவது யார்

ரிஷபம் சனிக்கு நட்பு வீடு காரணம் லக்னாதிபதி சுக்கிரன் நண்பர். சனி ரிஷபத்திற்கு பாக்யாதிபதி, தொழில் ஸ்தான அதிபதி சனி நட்பின் அடிப்படையில் நன்மைகளையே செய்வார். துலாம் லக்னகாரர்களுக்கு சனி சுபமானயோகங்களை செய்வார். காரணம் அங்குதான் உச்சமடைகிறார். மிதுனம் அஷ்டமாதிபதி, பாக்ய ஸ்தான அதிபதி. சனிபகவான் ஆயுள் பலத்தை கொடுப்பதோடு நல்ல கன்னி லக்னகாரர்களுக்கு சனிபகவான் ஆறு மற்றும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி. நன்மையும் தீமையும் கலந்தே வரும்.

சந்திரன் சனி பகை என்பதால் தீய பலன்கள் சனிதசையில் அதிகமாகவே இருக்கும். கடக லக்னகாரர்களுக்கு 11ஆம் வீட்டிற்கு வரும் போது நன்மை செய்வார். அவர் யோகாதிபதியில்லை என்பதால் தடை தாமதங்களுடன் எதையும் செய்வார். சிம்ம லக்னத்திற்கு பூர்வ புண்ணியாதிபதி, ருண ரோக சத்ரு ஸ்தான அதிபதி என்பதால் நோய் தொந்தரவுகள் வரும். கடன்கள் அதிகம் ஏற்படும். எனவே கடகம், சிம்மம் லக்னகாரர்கள் சனிதிசை சனி புத்தி காலத்தில் கவனமாகே இருப்பது அவசியம்.

தனுசு லக்னகாரர்களுக்கு சனி நட்பானவர் என்பதால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. அதே போல மீன லக்னகாரர்களுக்கு சனி லாப ஸ்தான அதிபதி 12ஆம் வீட்டிற்கு சனி அதிபதி என்பதால் நிறைய நிம்மதியையும், இடமாற்றங்களையும் தருவார். பணத்தையும் தருவார். சனி தசை நடக்கும் போது தொழில் தொடங்க வைப்பார்.

Sani peyarchi Palan 2023: Shani maha Dasha good and bad lagnas and Remedies

மகரம் கும்பம் ராசிகளில் ஆட்சி பெறும் சனி அந்த லக்னகாரர்களுக்கு சனி பகவான் அதிக நன்மைகளை மட்டுமே செய்வார். துலாம் ராசியில் உச்சமடையும் சனி அங்கேயும் அந்த லக்னகாரர்களுக்கு தனது தசாபுத்தியில் நன்மைகளை அதிகம் செய்வார். அதே நேரத்தில் தன்னுடைய வீடாக இருந்தாலும் சில பாதிப்புகள் வரும். கும்ப லக்னகாரர்களுக்கு சனிபகவான் வேலையில் சில பிரச்சினைகளை ஏற்படுத்துவார். இடமாற்றங்களை ஏற்படுத்துவார்.

ஒருவரின் ஜாதகத்தில் சனி 3, 6,10,11ஆம் இடங்களில் இருப்பது அதிர்ஷ்டம். நல்ல பலன்களைக் கொடுப்பார். சனிபகவான் உச்சம் பெற்றிருந்தால் அதன் மீது குரு பார்வை விழுவது நன்மையை தரும். சனிதசை நடக்கும் போது உழைப்பு கூடும். சோதனைகள் அதிகரிக்கும். தர்மநெறியோடு நடந்து கொள்ள வைப்பார். சனி நீதிக்கு அதிபதி. நீங்கள் செய்த நன்மை தீமையின் அடிப்படையில் உங்களுக்கு நன்மைகளும் தீமைகளும் நடக்கும். சனிபகவான் ஜாதகத்தில் யோகம் பெற்ற நட்சத்திரங்களில் இருந்தாலோ, நல்ல நிலையில் இருந்தாலோ நன்மைகள் நடைபெறும்.

ஒருவருக்கு அருளும் பொருளும் கிடைக்க சனியின் அருள் கிடைக்க வேண்டும். சனிபகவான் நீதிமான். எப்படி நீதிபதியானவர். ஒருவன் செய்த குற்றங்களுக்குத் தக்கப்படி தண்டனை அளிக்கிறாரோ அதே மாதிரி சனிபகவானும் அவரவர் முற்பிறவியில் செய்த கர்மாக்களுக்குத் தக்கவாறு தண்டனை வழங்குகிறார். சனி திசையில் பாதிப்புகள் குறைய நிறைய மரம் நட வேண்டும். அதேபோல மரங்களுக்கு தண்ணீர் விட்டு பராமரிக்கலாம். ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யலாம். தர்ம சிந்தனையோடு ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் வறியவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு சனி
பகவான் நன்மைகளை மட்டுமே செய்வார்.

English summary
Sani Peyarchi palan 2023: Saturn Mahadasha good or bad Effects and time period. When Sani is bad, it controls life in all major aspects of materialism such as loss of prosperity, illness or bed ridden condition or even imprisonment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X