சனி பெயர்ச்சி.. கும்ப ராசியில் உதயமான சனி.. குரோதி ஆண்டில் திடீர் ஜாக்பாட் பெறும் ராசிக்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கும்ப ராசியில் அஸ்தமனமான நிலையில் இருந்த சனி பகவான் மார்ச் 16ஆம் தேதி முதல் உதயமாகியிருக்கிறார். கும்ப ராசியில் உதயமான சனியுடன் செவ்வாய், சுக்கிரன் கூட்டணி சேர்ந்துள்ளனர். சனிபகவான் உதயத்தால் சில ராசிக்காரர்கள் உச்சம் தொடப்போகிறார்கள். குரோதி தமிழ் புத்தாண்டில் சனிபகவானின் உண்மையான சக்தியை துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் உணரப்போகின்றனர்.

துலாம் : சனி உங்களுடைய ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானஅதிபதி என்பதால் நிறைய புண்ணியங்கள் கிடைக்கப்போகிறது. கஷ்டங்களையும் நோய்களையும் அனுபவித்த துலாம் ராசிக்காரர்களுக்கு இனி நல்லது அதிகம் நடக்கும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். திருமண தடைகள் நீங்கும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். சிலருக்கு நன்மை தரும் இடமாற்றம் நடைபெறும். இந்த சனி உதயத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளும் யோகங்களும் கிடைக்கப்போகிறது. பணவரவு அதிகமாகவே இருக்கும். செய்யும் தொழில் வளர்ச்சி பெறும்.

Sani peyarchi palan Sani udhayam in Kumbam Rasi effects and Remedies for Thulam to Meenam

விருச்சிகம்: சனிபகவான் நான்காம் வீட்டு அதிபதி நான்கில் ஆட்சி பெற்று அமர்வதால் யோகங்கள் கிடைக்கும். உதயமான சனி பகவானின் பத்தாவது பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஆசைகளை குறிக்கோள்களை சனி நிறைவேற்றுவார். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். பணவரவும் தனவரவும் அதிகரிக்கும். வீடு, கார் என வாங்குவீர்கள். அர்த்தாஷ்டம சனி காலம் என்பதால் சற்றே கவனமாக இருப்பது அவசியம்.

தனுசு: ஏழரை ஆண்டுகாலமாக தனுசு ராசிக்காரர்களை சனி ஆட்டி படைத்தது. ஏழரை சனி விலகி விட்டதால் இனி நன்மைகள் தேடி வரும் காலம். வராத பணம் தேடி வரும் முன்னேற்றத்திற்கு வழி கிடைக்கும். கும்ப ராசியில் உதயமான சனியால் உங்களின் துன்பங்கள், நீங்கும் காலம் வந்து விட்டது. பயணங்கள் வெற்றியை கொடுக்கும். மன நிம்மதி கொடுக்கும். உடல் நலத்தினால் கஷ்டப்பட்டவர்களுக்கு பாதிப்புகள் குறையும். நீண்ட நாட்களுக்கு முன்பு கடனாக கொடுத்த பணம் வசூலாகும். கடன் பிரச்சினை நீங்கும்.

மகரம்: கடந்த 5 ஆண்டு காலமாக ஏழரை சனியால் அதிகம் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் மகர ராசிக்காரர்களுக்கு இரண்டரை ஆண்டு காலம் பாத சனியாக தொடரப்போகிறது. இன்னும் கொஞ்சம் கவனம் தேவை. ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்து வைக்க வேண்டும். இரண்டாம் வீட்டில் சனி செவ்வாய் கூடியுள்ளதால் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. தன வருமானமும் தொழில் வியாபாரத்தில் லாபமும் கிடைக்கும். விநாயகர் வழிபாடு, அனுமன் வழிபாடு சனியால் ஏற்படும் சங்கடத்தை போக்கும்.

கும்பம்: ஏழரை சனியில் ஜென்மசனி நடைபெறுகிறது. படிப்பினைகளால் கும்ப ராசிக்காரர்களை பக்குவப்படுத்துவார். சனி பகவான் தன்னுடைய ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்வதால் வேலை செய்யும் இடத்தில் நிம்மதியை தருவார். சனி பகவான் உங்கள் ராசிநாதன் என்பதால் அதிக சிரமங்கள் இருக்காது என்றாலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யுங்கள். முதியோர்களுக்கு தானம் கொடுப்பது பாதிப்பை குறைக்கும்.

மீனம்: ஏழரை சனி மீன ராசிக்கு தொடங்கியுள்ளது. விரைய சனி காலம் என்றாலும் முழு விபரீத ராஜயோகத்தையும் தரப்போகிறார் சனி பகவான். காரணம் சனி பகவான் 12ஆம் வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்வதால் இந்த கால கட்டத்தில் பணத்தை பணமாக வைத்திருக்காமல் சொத்துக்களில் முதலீடு செய்யலாம். சுப விரையத்திற்கு செலவு செய்வது நல்லது. ஏழரை சனி காலம் என்பதால் ஏழைகளுக்கும் முதியோர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி செய்யுங்கள். சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சனி பகவானை வழிபட பாதிப்புகள் குறைந்து நன்மைகள் அதிகம் நடைபெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+