Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனிப்பெயர்ச்சி 27 நட்சத்திரங்களுக்கு பலன்கள்: டிச.16,2014 முதல் டிச.16, 2014 முதல் டிச.11, 2017 வரை

Subscribe to Oneindia Tamil

-ஜோதிட பேராசிரியர் கே.ஆர்.சுப்ரமணியன்

நவகிரகங்களில் அதிக காலம் ஒரு ராசியில் தங்கியிருந்து உலக மக்களுக்கு சுக, துக்கங்களை அளித்து வரும் சனி பகவான் வரும் மார்கழி மாதம் 1ம் தேதி 16-12-2014 செவ்வாய் கிழமை மதியம் சுமார் 02-30 மணியளவில் துலாம் ராசியிலிருந்து விருச்சிகம் ராசியிலிருந்து பெயர்ச்சியாகிறார்.

Sani peyarchi Palankal

சனி பகவான் சஞ்சரிக்கும் ராசியின் அடிப்படையில் பொதுவாக பலன்கள் கூறப்பட்டாலும் அந்த ராசியில் சனி பகவான் உலவும் நட்சத்திரத்திற்கேற்ப பலன்கள் வித்தியாசப்படும் விருச்சிக ராசியில் பின் வரும் நட்சத்திர பாதங்கள் இருக்கின்றன.

விசாகம் 4ம் பாதம்

அனுஷம் 1ம் பாதம்
அனுஷம் 2ம் பாதம்
அனுஷம் 3ம் பாதம்
அனுஷம் 4ம் பாதம்

கேட்டை 1ம் பாதம்
கேட்டை 2ம் பாதம்
கேட்டை 3ம் பாதம்
கேட்டை 4ம் பாதம்

இந்த நட்சத்திரங்களில் சனி சஞ்சரிக்கும் பொழுது இருபத்தியேழு நட்சத்திரத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான பலன்களை வழங்குகிறார்.

மார்கழி மாதம் 1ம் தேதி முதல் தை மாதம் 10ம் தேதி வரை விசாகம் நட்சத்திரத்தில் சனி பகவான் உலாவுகிறார். இருபத்தியேழு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் விசாகம் நட்சத்திரத்தில் சனி பகவான் செல்லும் பொழுது அனுபவிக்கவிருக்கும் பலன்களை காண்போம்.

அசுவினி: எதிர்பாராத கஷ்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
துன்பங்களும் துயரங்களும் சூழ்ந்து கொள்ளும். எல்லாருமே உங்களை தவறாக புரிந்து கொள்வார்கள். அவமானப்பட நேரிடும். சொத்தை இழக்க நேரிடும். உங்கள் நட்சத்திர தேவதையான சரஸ்வதியை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

பரணி: திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் ஆகும். திருமணத்திற்க்கு பின் பொருளாதார விருத்தி உண்டாகும். மற்றவர்கள் தங்கள் பணத்தை உங்களிடம் கொடுத்து செலவழிக்க சொல்வார்கள். வழக்கில் வெற்றி பெறுதல் போன்ற சுப பலன்கள் நடைபெறும். உங்கள் நட்சத்திர தேவதையான துர்க்கையை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

கார்த்திகை: குடும்பத்தில் சச்சரவுகள் தோன்றும். தொழில் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். எல்லாவற்றிலும் தோல்வியை சந்திக்க வேண்டியிருக்கும். உங்கள் நட்சத்திர தேவதையான அக்னி பகவானை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

ரோகிணி: கணவரின் அன்பு அதிகரிக்கும். துணைவர் உங்களிடம் உண்மையாக நடந்து கொள்வார். செல்வச் சேர்க்கை அதிகரிக்கும். உங்கள் நட்சத்திர தேவதையான பிரம்மனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

மிருகசீரிஷம்: வழக்கில் தோல்வியை சந்தித்தல், உடல் ஆரோக்கியம் குறைதல், உண்ணும் உணவு செரிக்காமல் அஜீரணத்தினால் பாதிக்கப்படுதல் போன்ற அசுப பலன்கள் நடக்கும். உங்கள் நட்சத்திர தேவதையான சந்திரனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

திருவாதிரை: உடலில் பலம் அதிகரிக்கும். பழைய கடன்கள் வசூலாகும். பணவரவு அதிகரிக்கும். தொழில் உத்தியோகத்தில் மேன்மை உண்டாகும். உங்கள் நட்சத்திர தேவதையான ருத்திரனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

புனர்பூசம்: எல்லாவிதமான வசதிவாய்ப்புகளும் உருவாகும். தொழிலில் உழைப்பு அதிகரிக்கும். கம்பீரம் அதிகரிக்கும். எதிரிகள் தோல்வியடைவார்கள். உங்கள் நட்சத்திர தேவதையான அதிதி (சூரியன்) வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

பூசம்: குழந்தைகளால் சந்தோஷம் உண்டாகும். காதலிப்பவர்களுக்கு திருமணம் கைகூடும். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். உங்கள் நட்சத்திர தேவதையான குரு பகவானை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

ஆயில்யம்: கலை, காவியங்களில் ஆர்வம் அதிகரித்தல், கமிஷன் வியாபாரத்தில் லாபம் அதிகரித்தல், தொழில் நுட்ப வல்லுனர் அல்லது ஆலோசகர் பதவி கிடைத்தல் போன்ற சுப பலன்கள் நடக்கும். உங்கள் நட்சத்திர தேவதையான ஆதிசேஷனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

மகம்: அம்மாவின் ஆரோக்கியம் சீர் கெடும், வாகன போக்குவரத்தில் விபத்துக்களுக்கு வாய்ப்புகள் அதிகம், விவசாயம் பாதிக்கப்படும். உங்கள் நட்சத்திர தேவதையான சுக்கிர பகவானை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

பூரம்: படிப்பில் முன்னேற்றம், புதிய நிலம் அல்லது வீடு வாங்கும் யோகம் உண்டாகும். அம்மாவின் அன்பு ஆசிர்வாதம் கிடைக்கும். உங்கள் நட்சத்திர தேவதையான பார்வதி தேவியை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

உத்திரம்: வீட்டை விட்டு வெளியேறுதல், அலைச்சல் அதிகமாகுதல், சகோதரர்களுடன் விரோதம் உண்டாகும். மரியாதை குறையும். உங்கள் நட்சத்திர தேவதையான சூரியன் பகவானை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

ஹஸ்தம்: நண்பர்கள் சகோதரர்கள் அண்டை வீட்டார் ஆகியோரின் உதவி கிடைக்கும். இரக்க மனப்பான்மை அதிகரிக்கும்.உங்கள் நட்சத்திர தேவதையான சவீதா (சூரியன்) வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

சித்திரை: மன சாட்சியின்மை, பிறர் பொருட்கள் மீது ஆசைப்படுதல், தன்னைப்பற்றி சுய விளம்பரம் செய்து கொள்ளுதல், வதந்தியை பரப்புதல் போன்ற பலன்கள் நடைபெறும். உங்கள் நட்சத்திர தேவதையான துவஷ்டா (சூரியன்) வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

சுவாதி: எடுத்த காரியத்தில் எல்லாம் வெற்றி கிடைக்கும், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், பண வரவு அதிகரிக்கும், பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். உங்கள் நட்சத்திர தேவதையான வாயு பகவானை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

விசாகம்: தங்கு தடையற்ற பேச்சு, வங்கி சேமிப்பு அதிகரித்தல், அதிர்ஷ்டம் அதிகரிக்கும், வருமானம் அதிகரிக்கும், உங்கள் நட்சத்திர தேவதையான முருகனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

அனுஷம்: நேர்மை, உண்மை, புகழ் அதிகரித்தல், உடல் ஆரோக்கியம் அதிகரித்தல், பொருளாதாரத்தில் திருப்தியான மன நிலை. சுப பலன்கள் அதிகம் நடைபெறும். உங்கள் நட்சத்திர தேவதையான மகாலட்சுமியை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

கேட்டை: உடல் பருமனாகுதல், சந்தோஷமான வாழ்க்கை, அரசியல் பதவி கிடைத்தல், செல்வாக்கு அதிகரித்தல் போன்ற பலன்கள் நடைபெறும். உங்கள் நட்சத்திர தேவதையான இந்திரனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

மூலம்: மண்ணீரலில் நோய் தோன்றுதல், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுதல், குழந்தைகளும் நோயினால் பாதிப்படைதல் போன்ற பலன்கள் நடைபெறும். உங்கள் நட்சத்திர தேவதையான ஆஞ்சநேயரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

பூராடம்: சட்டத்துறை, மருத்துவத் துறை போன்றவற்றில் புகழ் பெறுதல், ஆசிரமங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்றவற்றை நிர்மாணித்தல் போன்ற பலன்கள் நடைபெறும். உங்கள் நட்சத்திர தேவதையான வருணனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

உத்திராடம்: நினைப்பவைக்கு மாறாக நடத்தல், மூத்த சகோதரத்துடன் விரோதம் உண்டாகுதல், வசதிகள் குறைதல் போன்ற பலன்கள் நடைபெறும். உங்கள் நட்சத்திர தேவதையான விநாயகரை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

திருவோணம்: நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள், வாழ்க்கையில் நல்ல ஸ்தானத்தை அடையலாம், பிரபலமடைவீர்கள், மன ஆசைகள் எல்லாம் நிறைவேறும். உங்கள் நட்சத்திர தேவதையான மஹாவிஷ்ணுவை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

அவிட்டம்: சமூகத்தில் கெட்ட பெயர், பொருளாதாரத்தில் மந்தநிலையை அடைதல், வேலையை இழக்கும் சூழ்நிலை உருவாகுதல் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள், வாழ்க்கையில் நல்ல ஸ்தானத்தை அடையலாம், பிரபலமடைவீர்கள், மன ஆசைகள் எல்லாம் நிறைவேறும். போன்ற பலன்கள் நடைபெறும். உங்கள் நட்சத்திர தேவதையான வசுக்கள் (சூரியன்) வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

சதயம்: எப்பொழுதும் நன்மையே நடக்கும் என்ற உடன்பாட்டு நேர்மறையான எண்ணம், தொழிலில் வெற்றி, புதுமையான வகையில் சிந்தித்தல் போன்ற பலன்கள் நடைபெறும். உங்கள் நட்சத்திர தேவதையான யமனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

பூரட்டாதி: உத்தம குணம் கொண்ட குழந்தைகள் பிறத்தல், சரியான காலத்தில் தாமதமில்லாமல் பதவி உயர்வு கிடைத்தல், உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைத்தல் போன்ற பலன்கள் நடைபெறும். உங்கள் நட்சத்திர தேவதையான குபேரனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

உத்திரட்டாதி: சமுதாயத்தில் புகழ் பெறும் நிலை, கருணை குணம் அதிகரித்தல், வெளிநாட்டு தொடர்பு போன்ற பலன்கள் நடைபெறும். உங்கள் நட்சத்திர தேவதையான காமதேனுவை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

ரேவதி: சிந்தனையில் தெளிவடைதல், உள்ளுணர்வு அதிகரித்தல், ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரித்தல் போன்ற பலன்கள் நடைபெறும். உங்கள் நட்சத்திர தேவதையான சனீஸ்வரனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் பெருக்கிக் கொள்ளலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+