சனி பெயர்ச்சி பரிகார கோவில்கள்- 12 ராசிக்காரர்களும் இங்கே போயிட்டு வாங்க
சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன், எந்த ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன் என்று பார்க்கலாம். பரிகாரக்கோவில்களையும் பார்க்கலாம்.
மதுரை: விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன், எந்த ராசிக்காரர்களுக்கு சுமாரான பலன் என்று பார்க்கலாம். பரிகாரக்கோவில்களையும் பார்க்கலாம்.
இந்த சனிப்பெயர்ச்சியால் மேஷம் தொழில் சனி, ரிஷபம் பாக்ய சனி, சிம்மம் ருண ரோக சத்ரு சனி, கன்னி புண்ணிய சனி, விருச்சிகம் தைரிய சனி, மீனம் லாப சனி வருவதால் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடலாம். அவ்வப்போது சனிபகவானை பார்த்து நல்லது நடப்பதற்கு நன்றி சொல்லி விட்டு வாருங்கள்.
தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை தொடங்குகிறது. துலாம் ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி, மிதுனம் ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி. கடகம் ராசிக்காரர்களுக்கு கண்டச்சனி. இந்த சனிப்பெயர்ச்சி காலமான 30 மாதமும் பாதிப்புகள் குறைய துலாம், மிதுனம், கடகம், தனுசு, மகரம், கும்பம், ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும். சனி சாந்தி பூஜை செய்ய வேண்டும்.

மேஷம்
தொழில் சனி காலம் தொடங்கும் காலம் என்பதால் வாலாஜாபேட்டையில் அருள்பாலிக்கும் பாதாள சனீஸ்வரரை வணங்கலாம். திருச்சி மாவட்டம், லால்குடி அருகே இடையாற்று மங்கலத்தில் இருக்கும் லட்சுமி நாராயணனை வணங்கி வந்தால், மேலும் சிறப்பானப் பலன்களைப் பெறலாம். சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றலாம்.

ரிஷபம்
பாக்யசனி காலம் என்பதால் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோவிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆதிகேசவப் பெருமாளையும், ஸ்ரீராமானுஜரையும் வழிபட்டு வர, சனிப்பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கையில் நன்மைகள் அதிகரிக்கும். மேலும் ஸ்ரீ விநாயகரை வணங்கலாம். உங்களின் குல தெய்வத்தை விடாமல் கும்பிடுங்கள். வாலாஜாபேட்டையில் எழுந்தருளும் லட்சுமி வராகப்பெருமாளை வணங்க மேலும் நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்
அஷ்டமத்து சனி ஆரம்பிக்க உள்ளது. விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகாவில் இருக்கும் பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டால் மிகுதியான நன்மைகளைப் பெறலாம். திங்கட்கிழமைகளில் சிவ ஆலயம் சென்று வரலாம். குச்சனூரில் அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவானை வழிபட்டு வருவது நல்லது.

கடகம்
கண்டச்சனி காலம் என்று கவலை வேண்டாம். வாலாஜாபேட்டையில் அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரை வணங்கினால் நன்மைகள் நடைபெறும். காரமடை அருகே இருக்கும் இருளர்பதி என்னும் ஊரில் அருள்பாலிக்கும் சுயம்பு பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபட்டால், நல்ல பலன்களைப் பெறலாம். புதன்கிழமைகளில் பெருமாள், மஹாலட்சுமி, சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவான், பைரவரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

சிம்மம்
ருண ரோக சத்ரு ஸ்தான சனி என்பதால் திருக்கொள்ளிக்காடு ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் சனீஸ்வர பகவானையும், சிவபெருமானையும், அம்பாளையும் வணங்கி வந்தால் மேலும் சிறப்பான பலன்களைப் பெறலாம். மேலும் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

கன்னி
புண்ணிய சனி காலம் என்பதால் விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகாவில் இருக்கும் பரிக்கல் லட்சுமி நரசிம்மர் ஆலயத்திற்குச் சென்று வழிபட்டால் மிகுதியான நன்மைகளைப் பெறலாம். திருவண்ணாமலை கிரிவலம் சென்று வந்தால் வாழ்க்கை மேன்மையுறும். மேலும் ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ துர்கை ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

துலாம்
அர்த்தாட்ஷடம சனி என்பதால் வாலாஜாபேட்டை பாதாள சொர்ண சனீஸ்வரரை வணங்க நன்மைகள் நடைபெறும். வேலூர் மாவட்டம், பெரிய மணலியில் இருக்கும் நாகரத்தினசுவாமி திருக்கோவிலுக்குச்சென்று நாகேஸ்வரசுவாமியை வழிபட்டால், நல்ல பலன்களைப் பெறலாம். மேலும் ஸ்ரீ பெருமாள், ஸ்ரீ பைரவர், ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

விருச்சிகம்
உங்களுக்கு ஏழரை சனி முடிகிறது. பெரம்பலூர் மாவட்டம், வெங்கனூரில் அமைந்திருக்கும், அருள்மிகு விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரரை வணங்கி வரலாம். திருக்கொள்ளிக்காடு ஸ்ரீஅக்னீஸ்வரர் ஆலயத்தில் இருக்கும் சனீஸ்வர பகவானையும், சிவபெருமானையும், அம்பாளையும் வணங்கி வந்தால் மேலும் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

தனுசு
பாதசனி காலம் என்பதால் வாலாஜாபேட்டையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரை வழிபடலாம். சனி சாந்தி பரிகார ஹோமம் செய்யலாம். திருக்கடையூர் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரரையும், அபிராமியையும் வணங்கி வர சிறப்பான பலன்களைப் பெறலாம். சனீஸ்வர பகவான், சிவன் பார்வதியை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

மகரம்
ஜென்மசனி காலம் என்பதால் தேனி மாவட்டம், சின்னமனுர் அருகேயிருக்கும் குச்சனூரில் சுயம்புவாக அருள்பாலிக்கும் சனீஸ்வரரை வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம். மேலும் ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ சனீஸ்வர பகவானை தினசரி வழிபட நன்மைகள் நடைபெறும். வாலாஜாபேட்டையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரை வழிபடலாம். சனி சாந்தி பரிகார ஹோமம் செய்யலாம்.

கும்பம்
ஏழரை சனி தொடங்குவதால் வாலாஜாபேட்டையில் அருள்பாலிக்கும் பாதாள சொர்ணசனீஸ்வரரை வணங்கலாம்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் இருக்கும் வாலீஸ்வரரை வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம். மேலும் ஸ்ரீ நவக்கிரகம், ஸ்ரீ ஐயப்பன் ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

மீனம்
லாப சனி காலம் என்பதால் திருநெல்வேலி மாவட்டம் கள்ளிடைக்குறிச்சியில் இருக்கும் ஸ்ரீபூமாதேவி சமேத ஆதிவராகப் பெருமாளை வழிபட்டால், மேலும் சிறப்பான பலன்களைப் பெறலாம். மேலும் ஸ்ரீ சிவன், ஸ்ரீ பார்வதி ஆகியோரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications