நீங்க சனிக்கிழமை பிறந்தவங்களா? இந்த குணங்கள் உங்களுக்கு இருக்கா?
சனிக்கிழமை பிறந்தவர்கள் பொறுமையானவர்கள், சகிப்பு தன்மையுள்ளவர்கள், தன்னை யார் ஏமாற்றினாலும், ஏளனம் செய்தாலும் கலங்காமல் முன்னேற்ற வழியில் தொடர்ந்து நடப்பவர்கள்.
சென்னை: வாரத்தின் ஏழாவது நாளான சனிக்கிழமையன்று பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி என்று பார்க்கலாம். சனிபகவான் நீதிமான். சனிகிரகத்தின் ஆதிக்கம் கொண்ட இவர்கள் நீதிமான்களாகவும், தனித்தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
சிறந்த உழைப்பாளிகளாகவும், விசுவாசமானவர்களாவும், பொறுமைசாலிகளாகவும், சகிப்புத்தன்மை கொண்டவர்களாகவும் முன்னேற்றத்தில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள்.

சனிக்கு மந்தன் என்ற பெயரும் உண்டு எனவேதான் இந்த கிழமைகளில் பிறந்தவர்கள் சற்றே மந்தத்தன்மையுடன் இருப்பார்கள். பிற நாட்களில் பிறந்தவர்களிடம் இருந்து சற்றே வேறுபட்டு இருப்பார்கள். சோம்பேறிகள் போல தெரிந்தாலும் காரியம் என்று வந்து விட்டால் வீரியத்துடன் செயல்பட்டு செய்து முடிப்பீர்கள்.
இடியே விழுந்தாலும் கலங்காத குணம் கொண்டவங்கள் நீங்கதாங்க. உளி செதுக்க செதுக்க அதை தாங்கி பொறுமையோடு இருக்கும் கல்தான் சிற்பமாகும் என்பதை உணர்ந்தவங்க நீங்க. கட்டளையிடும் குணம் இயல்பாகவே உங்களுக்கு வந்து விடும்.
குறுக்குப்புத்தி கொண்டவர்கள் என்றாலும் உங்களின் சகிப்புத்தன்மையே பலருக்கும் பிடித்துப்போகும். பலாப்பழம் போல கரடு முரடாக காட்சியளித்தாலும் அதில் உள்ள சுளை போல இனிப்பானவங்க நீங்க என்று உங்களிடம் பழகிப்பார்த்தவர்களுக்கு நிச்சயம் தெரியும்.
உங்களுக்கு நிரந்தர பகைவர்களும் இல்லை... நிரந்தர நண்பர்களும் இருக்க மாட்டார்கள். சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்க மாட்டீர்கள். பொறுமை குணம் அதிகம் கொண்ட நீங்கள் சகிப்புத்தன்மையும் கொண்டவர்கள். சனிக்கிழமையன்று சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடலாம். ஆஞ்சநேயரையும், விநாயகப்பெருமானையும் விளக்கேற்றி வணங்கலாம்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications