பாவத்தின் சம்பளம் விடாது விரட்டும் வியாதிகள் - தொடரும் கர்மவினை நீங்க பரிகாரங்கள்
சென்னை: எனக்கு மட்டும் ஏன் இப்படி கஷ்டங்களும் நோய்களும் வருகிறது என்று கேட்பார்கள். எல்லாம் கர்மவினைதான். நாம் நம் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளான குழப்பங்கள், எதிர்ப்புகள், நஷ்டங்கள், விரயங்கள், கடன்கள், பிரிவினைகள், விபத்துகள், முடக்கங்கள், நோய்கள், கஷ்டங்கள், துன்ப துயரங்களுக்கு காரணம் கர்மாதான். அதேபோல சந்தோசங்களும், இன்பமும், செல்வமும், நல்ல தொழிலும், ஆரோக்கியமும், நல்வாழ்வும் மனைவி மக்களும் நல்லவையாக அமைவதும் கர்மவினைகளின் பலன்கள்தான். எந்த பாவம் செய்தால் என்ன நோய் வரும் என்று கருடபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
"ஒருவன் எப்படி செயல்படுகிறானோ அவனும் அதைப்போலவே ஆகின்றான்" நியூட்டனின் மூன்றாம் விதிப்படி ஆங்கிலத்தில் "To Every Action There is an Equal and Opposite Reaction" என்று சொல்வார்கள். நம் நம்பிக்கைகளிலும் நாம் செய்த வினைகளைக் குறிக்க கர்மா என்ற சொல் பயன்படுத்தபடுகிறது. கர்மவினை என்றும் வினைப்பயன் என்றும் நாம் புழக்கத்தில் சொல்வது இந்த நியூட்டனின் மூன்றாம் விதியைத்தான்.
கால புருஷ தத்துவப்படி 12 இராசிகளும் தர்ம, கர்ம, காம மற்றும் மோட்ச இராசிகளென வகை படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நாம் செய்த பாவ புண்ணியங்களை எந்த வகையில் யாருக்கு செய்தோம் அதன் விளைவாக இப்பிறப்பில் நாம் என்னென்ன யோகங்களை அல்லது தோஷங்களை அனுபவிக்கிறோம் என்பதை எல்லாம் இந்த கால புருஷ தத்துவ இராசிகளை கொண்டு நாம் கணித்து அறிய முடியும். கர்மவினை பலன்களை கொடுக்கும் பணியை நவ கிரகங்கள் செய்கின்றன.

எந்த கிரகம் பாதிப்பு என்ன நோய்
சூரியன் பாதிக்கப்பட்டால் இதய நோய்கள், ரத்த அழுத்தம், கண் பார்வை, மலச்சிக்கல், பல், வாய், உஷ்ண உபாதைகள் ஏற்படும். சந்திரன் பாதிக்கப்பட்டால் மார்பகங்கள், கழுத்து, நுரையீரல், குறைந்த ரத்த அழுத்தம், காச நோய், ரத்த சோகை, மனநோய், சர்க்கரை, மூக்கு, குடல் நோய் ஏற்படும். செவ்வாய் பாதிக்கப்பட்டால் பித்தப்பை, சிறுநீர்ப்பை, மூலம், ரத்த நோய்கள், டென்ஷன், காயங்கள், விபத்துக்கள், அறுவை சிகிச்சை, மாதவிடாய் கோளாறுகள் ஏற்படும். புதன் பாதிக்கப்பட்டால் நரம்புத்தளர்ச்சி, பாலின கோளாறுகள், நாக்கு, உணர்ச்சி, பேச்சு, நரம்பு மண்டலம், கைகால் வலிப்பு, ஆண்மைக் குறைவு, புத்தி பாதிக்கப்படும். குரு பாதிக்கப்பட்டால் தைராய்டு, முடக்கு வாதம், வயிறு குடல், சர்க்கரை, காது, தொடைகள், மஞ்சள் காமாலை நோய் வரும். சுக்கிரன் பாதிக்கப்பட்டால் கண், காது, மூக்கு, தொண்டை, சர்க்கரை, சுக்கிலம், சுரோணிதம், பாலியல் வியாதிகள் வரும். சனி பாதிக்கப்பட்டால் மூட்டு வீக்கம், வாதம், பித்தம், பிடிப்பு, புட்டங்கள், ஆண்குறி, மனசஞ்சலம், நரம்பு சிலந்தி ஏற்படும். ராகு பாதிக்கப்பட்டால் தோல், பல், நோய்கள், மூலம், ஜீரண கோளாறு, தலைபாரம், தொழுநோய், புற்றுநோய் ஏற்படும். கேது பாதிக்கப்பட்டால் மனநோய், பிதற்றல், புற்றுநோய், தோல் அரிப்பு, அலர்ஜி, கர்ப்ப சம்பந்தமான கட்டிகள் ஏற்படும்.

யாரை வழிபடுவது
நவ கிரங்களையும் இயக்கும் அதிதெய்வங்கள் உண்டு, நவ கிரகங்களை வழிபடுவதால் எந்த பலனையும் நவ கிரகங்கள் தாமாக மாற்றிவிட இயலாது, நவ கிரகங்களை இயக்கும் அதிதெய்வங்கள் மட்டுமே உங்கள் கர்ம பலனை மற்ற இயலும். சூரியனுக்கு சிவன்,
சந்திரனுக்கு பார்வதி, செவ்வாய்க்கு சுப்பிரமணியர், புதனுக்கு மகாவிஷ்ணு, வியாழனுக்கு பிரம்மா, சுக்கிரனுக்கு மஹாலட்சுமி, சனிக்கு எமன், ராகுவிற்கு பத்ரகாளி, கேதுவிற்கு இந்திரன் ஆகியோரை வழிபட வேண்டும்.

யாருக்கு நோய் வரும்
கர்மவினைக்கு ஏற்ப என்ன நோய் வரும் என்று கருடபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. யார் மற்றவர்களை ஏளனம் செய்பவர்கள். சத்தியத்தை தவறவிட்டவர்கள், எதற்காவது காக்க வைத்தவர். மன அழுத்த நோயால் துன்புறுவர், மன நோயாளியாக இருப்பார். எலி பொந்துக்களை, பாம்பு பொந்துக்களை அடைப்பவர், மீன்களை பிடிப்பவர்களுக்கு நுரையீரல் மற்றும் சுவாச கோளாறுகளினால் பாதிக்கப்படுவார்.

பாம்பு யாரை கடிக்கும் தெரியுமா
விஷம் கலந்து யாரையும் கொலை செய்தால் தேள் கடி மற்றும் பாம்பு கடியால் துன்பப்படுவார். கருமியாகவும், அதிக வட்டி வசூலிப்பவர், பிறரது பொருளை அபகரிப்பவர்களுக்கு சுயரோகத்தால் துன்பப்படுவார். விபச்சாரத்தில் ஈடுபடுபவர்கள், சிறுமிகளை பலாத்காரம் செய்பவர் தொழு நோயால் துன்பப்படுவார். தனது உடம்பைக் காட்டி பயமுறுத்துபவர், வீண் சண்டைக்கு இழுப்பவர் கால், கை வலிப்பு, இழுப்பு நோயால் துன்பப்படுவார். பெண்ணை கெட்ட எண்ணத்துடன் பார்ப்பவர், மற்றவர் பொருள்களையும் பார்த்து பொறாமைப்படுபவர் நிரந்தர கண் நோயுடன் அவதிப்படுவார்.

சொரி சிரங்கு வரும்
மற்றவர் வீட்டை தீயினால் எரித்தவர் உடலில் கொப்புளங்களுடனும் உடல் எரிச்சலுடன் அவதியுறுவார். பொருள்களில் கலப்படம் செய்தவர்கள் வாய்வு தொல்லையால் அவதிப்படுவார். மற்றவர்களை தொடர்ந்து உதாசினப்படுத்தப்படுபவர், கொடுரமான செயல்களை குழந்தைக்கு செய்தவர் சொரி, சிரங்கு மற்றும் தோல் நோயால் கஷ்டப்படுவார். ஆபாச நடனங்களை பார்க்கிறவர்கள், ஆபாச பாடல்களை கேட்பவர்க்கு காதில் சீழ் வடிதல், காது இரைச்சல், காது கேளாண்மை நோய்க்கு ஆட்படுபவர்.

கொடிய நோய்கள்
பெற்றோர் பேச்சை கேட்காதவர், பெற்றோரை நீதிமன்றத்துக்கு அழைத்து அவமானப்படுத்துபவர் பார்வை குறைவு நோய்க்கு ஆளாவர், வெண்குஷ்டத்தினால் துன்புறுவர். வழக்கறிஞர்கள் உண்மைக்கு மாறான கருத்துக்களை கூறி தண்டனை பெற்றுக் கொடுத்தால் நிற குறைபாடு நோய், கண்புரை நோய், ஞாபக சக்தி குறைவு நோய்க்குள்ளாவார்கள். இரக்கமற்ற முறையில் மனிதர்களை கொள்வதற்காக அணு ஆயுதங்களை கண்டுபிடிப்பவர்கள் பலவித கொடிய நோய்க்கு ஆளாவார்கள். மரமாக பிறந்தால் கூட மரத்தில் துளையிட்டு பூச்சிகள் குடியிருந்து மனிதனுக்கு பயன்படாமல் வெட்டப்பட்டு, எரிக்கப்பட்டு சாம்பலாக மறு பிறவி எடுப்பார்.

நரம்பு தளர்ச்சி
நோயாளியிடம் கடுஞ்சொற்களை பயன்படுத்தும் மருத்துவர், உபயோகமில்லாத மருந்துகளுக்கு அதிக விலை நிர்ணயம் செய்பவர், அதிக கட்டணம் வசூலிப்பவர் பெண்ணாக பிறப்பெடுப்பார், கருவறையிலே நோயுடன் ஜனிக்கிறார், பிரசவ காலத்தில் மிகவும் துன்பப்படுபவர், பெரும்பாலும் குழந்தை அழிந்துவிடும். சிறையில் உள்ளவர்களை துன்புறுத்துபவர் வாதம் மற்றும் நரம்புத் தளர்ச்சி நோயால் பீடிக்கப்படுவார். தெய்வ நம்பிக்கை இல்லாதவர், சாதுக்களையும் இதிகாசங்களையும் புறம் பேசுபவர் ஊமையாக பிறக்கிறார், தொண்டையில் புற்று நோய் உள்ளவராகிறார். சாதுவான பிராணிகளை துன்புறுத்துபவர் அனைத்து பற்களை இழந்தவராகவும், தொண்டைப்புண் உடையவராகவும் பிறப்பார்.

ஆஸ்துமா பாதிப்பு
ஏழை எளிய மக்களின் பொருள்களை வழிப்பறி செய்பவர் சாப்பிட்ட உணவே விஷமாக மாறும் இதன் மூலம் உயிரழப்பு கூட ஏற்படலாம். புராதன சின்னங்களை அளிப்பவர், புத்தகங்களை நெருப்பிலிட்டு எரிப்பவர் வாய்வுத் தொல்லை மற்றும் புற்று நோயால் அவதிப்படவார். உடன் பிறந்த சகோதரர் சகோதரிகளை மிரட்டுபவர் மலட்டுத் தன்மைடன் பிறக்கிறார். வேலை அதிகம் வாங்கி குறைந்த ஊதியம் கொடுப்பவர் ஆஸ்துமா, மூளைக்காய்ச்சல், தலைச்சுருட்டி வாதம் ஏற்படும்.

யானைக்கால் வியாதி
காய்கறிகள் மற்றும் பழங்களை திருடுபவர்கள், கெட்டுப்போன தானியங்களை புதுப்பிப்பவர்கள் பற்கள் விகாரமாகவும், கண்புரை நோயுடனும் பிறப்பார். கொள்ளை லாபம் சம்பாதிப்பவர், கள்ள சந்தைக்காரர் உடல் பருமன், வயிறு கோளாறு மற்றும் யானைக்கால் வியாதியால் பிடிக்கப்படுவர்.
பசியோடு வந்த விருந்தினருக்கு வசதியிருந்தும் உணவளிக்க மறுப்பவர் வயிற்றுப்புண் மற்றும் வயிறு உபாதையால் துன்புறுவர். தனக்கு கீழ்படிந்துள்ள பணியாளர்களை கேவலமான வேலை செய்ய சொல்வது, தேவையில்லாமல் தண்டிப்பது போன்ற செயல்களை செய்பவர் தலைவலி, உயர் ரத்த அழுத்தம், அடிக்கடி மயக்கமடைவது போன்ற நோய்க்கு ஆளாவார்.

தொற்று நோய் பாதிப்பு
பொதுமக்கள் சொத்துக்களை சுயநலத்திற்கு பயன்படுத்துபவர், தவறான கணக்குகளை அளிப்பவர்கள் தொற்று நோய்க்குள்ளாவார்கள். காரணமில்லாமல் மனைவியை அடிக்கும் கணவர், குழந்தைகளை அடிக்கும் பெற்றோர் நெஞ்சுவலி, பல்வலிக்கு உள்ளாவார்கள். ஆன்மீக வாழ்க்கை வாழ விரும்பும் குழந்தையை உலக வாழ்க்கை வாழ கட்டாயப்படுத்தும் பெற்றோர் சுவாசக் கோளாறுகளால் பீடிக்கப்படுவார்கள். சந்நியாசம் அடைந்த பின் மக்களை ஏமாற்றுபவர் மலட்டு தன்மையுடன் பிறந்து, சந்தோசமில்லா வாழ்க்கையை அடைந்து, மனக்குறையுடன் பிறப்பார்
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications