சுந்தரகாண்டம் மகிமைகள்... பிரிந்த குடும்பம் ஒன்று சேரும் - நோய்கள் நீங்கும்
வெற்றி வேண்டுமா? சுந்தரகாண்டாத்தை பாராயணம் செய்யுங்கள். சுந்தரகாண்டம் மகிமை வாய்ந்தது. சுந்தரகாண்டத்தை தினசரி பாராயணம் செய்யச் செய்ய தம்பதியர் இடையே ஏற்பட்டிருந்த மனக்கசப்பு நீங்கும் பிரிந்த குடும்பங்
சென்னை: அஞ்சனை மைந்தன் அனுமனை வணங்கினால் தடைகள் நீங்கும் வெற்றிகள் தேடி வரும். அனுமனை சிறப்பிக்கும் சுந்தரகாண்டத்தை தினசரியும் பாராயணம் செய்தால் தம்பதியர் இடையே பிரச்சினைகள் இருந்தாலும் அது நீங்கி ஒற்றுமை ஏற்படும். தீராத நோய்கள் தீரும் நவகிரக தோஷங்கள் நீங்கும். காயத்ரி மந்திரத்திற்கு ஒப்பானது சுந்தரகாண்டம். நாம் சுந்தரகாண்டத்தை படிக்க படிக்க இறைவன் அருள் தேடி வரும்.
டெல்லியில் கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் மாதந்தோறும் முதல் செவ்வாய்கிழமை சுந்தரகாண்டம் பாராயணம் செய்யப்படும் என்று அந்த தொகுதி எம்எல்ஏ கூறியுள்ளார். சுந்தரகாண்டத்தில் அப்படி என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா?. ராமாயணத்தில் சுந்தரகாண்டம் ஐந்தாவது பகுதி. அனுமனின் வீர பராக்கிரமங்களை விளக்குகிறது இந்த சுந்தரகாண்டம். சுந்தரகாண்டம் காயத்ரி மந்திரத்திற்கு ஒப்பானது. நாம் எந்த அளவுக்கு சுந்தரகாண்டம் படிக்கிறோமோ அந்த அளவுக்கு பகவானை நெருங்குகிறோம் என்று அர்த்தம்.
சீதையை பிரிந்து ராமரும் ராமரை பிரிந்து சீதையும் கஷ்டப்பட்ட போது இருவரையும் சேர்த்து வைத்தது சுந்தரன் என்கிற அனுமன்தான். சீதையை பிரிந்து தவித்த ராமருக்கு உதவியவர் அனுமன். கடலை கடந்து இலங்கை சென்று அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை தரிசித்து வந்து 'கண்டேன் சீதையை' என்ற வார்த்தையை சொல்லி ராமரின் கவலை போக்கியவர்.

அனுமனுக்கு பெருமை
அனுமன் சிவ அம்சம். சிவரூபமான இவரை வணங்கினால் சிவனையும் மகாவிஷ்ணுவையும் வழிபட்ட நன்மைகள் கிடைக்கும். அனுமனுக்கு சுந்தரன் என்ற பெயரும் உண்டு. எனவேதான் அனுமனுக்கு பெருமை சேர்க்க ராமாயணத்தில் சுந்தரகாண்டம் என்று ஒரு காண்டத்திற்கு பெயரை வைத்துள்ளார். சுந்தரகாண்டம் படிப்பதால் பலரது கவலைகள் தீரும். பல நன்மைகள் கிடைக்கும்.

மகிமை மிகுந்த சுந்தரகாண்டம்
ராமாயணத்தில் மொத்தம் 24 ஆயிரம் சுலோகங்கள் உள்ளன. இதில் 2885 சுலோகங்கள் சுந்தரகாண்டத்தில் இருக்கிறது. சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும் மந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர். சுந்தரகாண்டத்தை நாம் எந்த அளவுக்கு படிக்கிறோமோ அந்த அளவுக்கு பகவானை நெருங்குகிறோம் என்று அர்த்தம். சுந்தர காண்டத்தை படிப்பதனால் கிடைக்கும் நன்மைகளை ஆயிரம் நாக்குகள் கொண்ட ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது என்கிறார் பரமேஸ்வரன்.

துன்பங்கள் தீர்க்கும் சுந்தரகாண்டம்
சுந்தர காண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால், வாசிக்க, வாசிக்க மன வலிமை உண்டாகும். சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்து வந்தால் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் முடிவுக்கு வந்து விடும். சுந்தரகாண்டம் வாசித்தால் வாழ்வு வளம் பெறும். கஷ்டங்கள் தொலைந்து போகும்.
சுந்தரகாண்டம் படித்து அனுமனை வழிபட்டு வந்தால் அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை, துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம்.

திருமணம் கை கூடி வரும்
சுந்தரகாண்டத்தை முறைப்படி வாசித்தால் தடைபட்ட திருமணம் விரைவில் கைகூடி வரும். கவலைகள் தீரும். சுந்தரகாண்டம் வாசிக்கும் போது பூஜை அறையில் விளக்கேற்றி அனுமனுக்கு வடை, வெண்ணெய் நைவேத்தியம் படைக்க வேண்டும். இதனால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிரச்சினை ஏற்பட்டு பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள்.

கர்ப்பிணிகள் படிங்க
கருவுற்ற பெண்கள் ஐந்து மாதத்தில் இருந்து சுந்தரகாண்டம் படிக்க வேண்டும். ஆரோக்கியமான புத்திசாலியான பிள்ளைகள் பிறப்பார்கள். ஒரு பெண் கருத்தரித்த நாள் முதல் 9 மாதம் வரை நாள் தவறாமல் சுந்தரகாண்டம் படித்து வந்தால் சுகப் பிரசவம் உண்டாகி குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும் என்பது ஐதீகம். கர்ப்பிணிகள் குறைந்த பட்சம் 5வது மாதத்தில் இருந்து சுந்தரகாண்டம் படித்து வந்தால், பிறக்கும் குழந்தை ஆன்மிக சிந்தனை உள்ள அறிவாற்றல் மிக்க குழந்தையாக பிறக்கும்.

பாவங்கள் போக்கும் சுந்தரகாண்டம்
சுந்தரகாண்டத்தை மனமுருகி படித்தால் பாவங்கள் தீரும் தீராத நோய்களும் தீரும். காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு சமயம் ஒருவர் வயிற்று வலியால் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், எந்த டாக்டராலும் அதை குணப்படுத்த இயலவில்லை என்றார். உடனே காஞ்சி பெரியவர் சுந்தரகாண்டத்தை தினமும் சாப்பிடும் முன் படி என்றார். அதன்படி அந்த நபர் பாராயணம் செய்து வர அவருக்கு வயிற்று வலி போய் விட்டது என்று காஞ்சி சங்கரமடத்தை சேர்ந்தவர்கள் சொல்லக் கேட்ட தகவல்.

தோஷங்கள் நீங்கும்
சுந்தரகாண்டத்தை நீண்ட நாட்களாக பாராயணம் செய்பவர்களை விட்டு நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும். சனி திசை சனி புத்தி நடப்பவர்கள், ஏழரை சனி, அஷ்டமத்து சனியால் சிரமப்படுபவர்கள் சுந்தரகாண்டம் படித்து வந்தால் துன்பங்களில் இருந்து விடுதலை கிடைக்கும். சுந்தரகாண்டத்தை முழுமையாக படித்து முடித்ததும் ஆஞ்சநேயரை வழிபட்டு, ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும். வசதியுள்ளவர்கள் சுந்தரகாண்டம் புத்தகத்தை வாங்கி 11 பேருக்க தானமான கொடுக்க அளவில்லாத புண்ணியங்கள் கிடைக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications