திருமண தடை நீக்கும் சுயம்வரகலா பார்வதி யாகம்
திருமண தடை நீங்க சுயம்வரகலா பார்வதி யாகமும் கந்தர்வ ராஜ ஹோமமும், குழந்தை பாக்கியம் தரும் சந்தானகோபால யாகமும் நடைபெற உள்ளது.
சென்னை: திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் அமைய வேண்டியும் தை பூச திருநாள், பவுர்ணமியை முன்னிட்டு சுயம்வரகலா பார்வதி யாகமும் கந்தர்வ ராஜ ஹோமமும், குழந்தை பாக்கியம் தரும் சந்தானகோபால யாகமும் பவுர்ணமி நாளில் நடைபெற உள்ளது.
பல குடும்பத்தினரும் தங்கள் வீட்டுப் பையனுக்கு மணமகள் தேடித் தேடிச் சலித்துப் போய் விடுகிறார்கள். ஒன்று இருந்தால், இன்னொன்று அமைய மாட்டேன் என்கிறது. அதைபோன்று குழந்தை பாக்யம் இல்லாமையும் ஆகும்.
ஒருவரது ஜாதக ரீதியாக ராகு கேது தோஷம், செவ்வாய் தோஷம் களத்திர தோஷம், சர்ப தோஷம், குரு பலன் இல்லை இதுபோன்ற காரணங்களால் திருமணம் தடை ஏற்படும்.
ருது தோஷம் என்பது ஒரு பெண் வயதுக்கு வந்த நேரத்தை வைத்து ஜாதகத்தில் ஏதேனும் தோஷம் இருந்தால் திருமணம் செய்ய தாமதம் ஆகும்.

செவ்வாய் தோஷம்
பொதுவாக ஒருவருக்கு திருமணம் தாமதமானால், திருமண தாமதத்திற்கு முதல் காரணமாக ராகு கேது தோஷம் என்பதாக இருக்கிறது, இரண்டாவது காரணம் செவ்வாய் தோஷம் என்பதாகவும், மூன்றாவதாக களத்திர தோஷம் என்பதாகவும், நான்காவதாக குரு பலன் இல்லை என்பதாகவும் ஜோதிடர்களால் கூறப்படுகிறது. ஜாதகருக்கு திருமண வயது வரும் பொழுது நடைபெறும் திசை மற்றும் புத்தி பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் திருமணம் தாமதம் ஆக வாய்ப்பு உண்டு

யாகங்கள் செய்யலாம்
அவர்களின் ஜாதகம் எந்த திசையில் நடைபெறுகிறது என்பதை அறிந்து பரிகாரம் செய்ய வேண்டும். தோஷ பரிகாரங்களில் மிகவும் சிறந்தவைகளாக விளங்குபவை ஹோமங்கள் ஆகும். புராண காலத்தில் தெய்வங்களும், சித்தர்களும், யோகிகளும், ஞானிகளும், அரசர்களும் தாங்கள் விரும்பிய காரியங்கள் வெற்றி அடைய ஹோமங்கள் செய்து தமது இஷ்ட காரியங்கள் மற்றும் வரங்களையும் பெற்றுள்ளனர்.

திருமண தடை நீக்கும் யாகங்கள்
சுயம்வர கலா பார்வதி ஹோமம் நடத்தினால் பெண்களுக்கு திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமம் நடத்தினால் ஆண்களுக்கு திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.

குழந்தை பேறு தரும் ஹோமம்
வாலாஜாபேட்டையில் உள்ள ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் திருமணம் ஆக வேண்டிய நிலையில் உள்ள ஆண் ,பெண் ஆகியோரை அழைத்து வந்து இங்கு ஹோமம் செய்து பலன் பெறுகிறார்கள் பல பெற்றோர்கள். பலரது வாழ்க்கையிலும் கெட்டிமேள ஓசை ஒலிக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி இங்கே சிறப்பு ஹோமங்கள் நடைபெறுகின்றன. நாளைய தினம் பவுர்ணமியை முன்னிட்டு சுயம்வரகலா பார்வதி யாகமும் கந்தர்வ ராஜ ஹோமமும், சந்தானகோபால யாகமும் நடைபெற உள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications