திருப்பதிக்கு போறீங்களா? செப்டம்பர் மாத விரைவு தரிசன டிக்கெட் நாளை ரிலீஸ்.. புக் பண்ண மறக்காதீங்க
: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மாதத்துக்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் நாளை வெளியிடப்படுகிறது.
திருப்பதி: ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மாதத்துக்கான ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணி அளவில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. கோடை விடுமுறை முடிந்த பின்னரும் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பல மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். தினசரியும் பல கோடி ரூபாய் உண்டியல் வருமானம் கிடைக்கிறது.
கொரோனா தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டது. இதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களில் தீர்ந்து போனதால் பக்தர்கள் பலர் அவதிப்பட்டனர். அத்துடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தெரியாத பக்தர்களும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் மீண்டும் திருப்பதியில் இலவச தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை மக்களுக்கு நேரடியாக வழங்க தேவஸ்தானம் முடிவு செய்து அதன்படி மாதந்தோறும் வழங்கி வருகிறது.
கோடை விடுமுறை முடிந்த பின்னரும் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பல மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். தினசரியும் பல கோடி ரூபாய் உண்டியல் வருமானம் கிடைக்கிறது.
இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள பிரம்மோற்சவ விழாவில் கோவிலின் 4 மாட வீதிகளில் வாகன சேவை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அக்டோபர் மாதம் 1ஆம்தேதி கருட சேவை, 2ஆம் தேதி தங்க தேரோட்டம், 4ஆம் தேதி தேரோட்டம், 5ஆம் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வருடாந்திர பிரமோற்சவ விழாவில் பக்தர்களுக்கு அனுமதியின்றி கோவில் உள்ளே நடந்தது. இந்த முறை அதிகளவில் பக்தர்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அதற்கு ஏற்ப பிரமாண்ட ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாட வீதிகளில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வலம் வரும் மலையப்பசுவாமியைக் காண தினசரியும் பல லட்சம் பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருட சேவை புரட்டாசி மாதம் 3வது சனிக்கிழமை நடப்பதால் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் பங்கேற்பார்கள். சாதாரண பக்தர்கள் அதிக நேரம் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். வி.ஐ.பி பிரேக் தரிசனம் அனைத்தும் ரத்து செய்யப்படும். முக்கியமான வி.ஐ.பி.களுக்கு மட்டும் பிரேக் தரிசனம் வழங்கப்படும். பிரம்மோற்சவ விழா நாட்களில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மாதத்துக்கான ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணி அளவில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications