சோடசக்கலை பூஜை: மகாலட்சுமி உங்க வீட்டுக்கு வர இன்று மாலை பூஜை செய்யுங்க
அன்னை மகாலட்சுமி வீடு தேடி வரவேண்டுமா? சில விசயங்களை செய்தால் நம் வீட்டில் லட்சுமி தேவியின் அருள் நிரந்தரமாக இருக்கும். சில விசயங்களை செய்யாமல் இருந்தாலும் லட்சுமி தேவியின் அருள் கிடைக்கும். என்ன செய்
சென்னை: மகாலட்சுமியை ஆராதனை செய்தால் வீட்டில் செல்வம் பெருகும். 16 செல்வங்களும் லட்சுமிகளும் ஒன்று சேரும் சோடசக்கலை நேரத்தில் மகாலட்சுமியை வணங்கினால் நன்மைகள் அதிகம் நடைபெறும். வடக்கு திசை பார்த்து அமர்ந்து நினைத்த காரியம் நிறைவேற வணங்கலாம். இன்று பவுர்ணமி. இன்றைய தினம் மாலை சோடச கலை நேரம் இன்று 4.59 மணி முதல் 6.59 வரை உள்ளது.
அமாவாசை ஆண்களையும், பவுர்ணமி பெண்களையும் பாதிக்கிறது. சந்திரன் ஸ்தூல உடலையும், சூரியன் சூட்சும உடலையும் பாதிக்கிறது. இந்த நாளில் இறைவனை நாடிச்செல்வது பாதிப்பில் இருந்து விடுபடத்தான். அமாவாசை முடிந்து பிரதமை தொடங்கும் முன்பாகவும், பவுர்ணமி முடிந்து பிரதமை தொடங்கும் முன்பாகவும் 16வதாக வரும் சோடசக்கலை நேரம் அற்புதமான நேரம் உள்ளது. இந்த நேரத்தில் தியானம் இருந்தால் நினைத்தது நிறைவேறும். பவுர்ணமி தினமான இன்று சோடசக்கலை தியான நேரம் இன்று 4.59 மணி முதல் 6.59 வரை உள்ளது இந்த நேரத்தில் பூஜை அறையில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும். நினைத்தது நிறைவேறும்.

மாலையில் பூஜை அறையில் நெய் தீபம் ஏற்றி 5 ஊதி பத்தி ஏற்ற வேண்டும். வடக்கு நோக்கி அமர்ந்து மனம் உருகி வேண்டவேண்டும். அகத்திய பெருமான் அருளிய சோடச மாலையை படிக்க வேண்டும்.
அமாவாசைத் திதி
அம்மாவசி தானான அரூபித் தாயே
அகண்டபரி பூரணியே யமலை சக்தி
நம்மாலே பாடரிது நினது பேரை
நாவிலே வந்தருள்செய் நாயே னுக்குத்
தம்மாலே சோடசதோத் திரம் விளங்கத்
தயவுசெய்து நின்பதத்தில் தரிப்பாய் தேவி!
சும்மா நீ இருக்காதே கண்பார்த் தாள்வாய்
சோதியே மனோன்மணியே சுழினை வாழ்வே!
பிரதமை திதி - ஸ்ரீகாமேஸ்வரிதேவி
பிரதமையில் பிரவிடையாய்ந் கலைவே றாகிப்
பின்கலைவிட் டிடகலையில் பிறந்த கன்னி
உறவாகி ரவியைவிட் டகலா நின்ற
உமையவளே என்பிறவி ஒழியச் செய்வாய்
இறவாத வரத்துடனே ஏமம் வாமம்
எட்டெட்டுஞ் சிந்திக்க எனக்குத் தந்து
சுருதியிலே வந்தருள்செய் அடியே னுக்குச்
சோதியே மனோன்மணியே சுழினை வாழ்வே!
படிக்க வேண்டிய மந்திரம்
ஓம் காமேஸ்வர்யை வித்மஹே
நித்யக்லின்னாயை தீமஹி
தன்னோ நித்யா ப்ரசோதயாத்.
வழிபட வேண்டிய திதிகள்:
சுக்ல பக்ஷ பிரதமை, அமாவாசை.
இந்த பூஜை செய்வதன் மூலம் குடும்பத்தில் ஆனந்தம், தனவரவு, மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கை அமையும். எல்லாம் வல்ல அன்னை அபிராமி ஒவ்வொரு திதியிலும் ஒவ்வொரு தேவியாகத் தோற்றமளித்து, தன்னை நாடும் பக்தர்களுக்கு அருளாசி புரிகின்றாள்.
ஏழையாக பிறப்பது தவறு இல்லை. ஏழையாக இறப்பதுதான் தவறு. பணக்காரனாகவேண்டும், ஏன் கோடீஸ்வரனாகவேண்டும் என்று கூட பலருக்கும் ஆசை இருக்கும், அந்த ஆசை எப்படி நிறைவேறும். நன்றாக படித்து வேலைக்கு போய் கை நிறைய சம்பாதித்து சிக்கனமாக செலவு செய்து சேமித்து வைத்தால் பணம் கையில் சேரும். வீடு, கார் பங்களா என்று செட்டில் ஆகலாம். நினைத்ததை வாங்கலாம். இல்லை எனில் ஏழை, நடுத்தர மக்களாகவே வாழ்ந்து விட்டு போக வேண்டியதுதான். சேட்டுகள், மார்வாடிகள் எல்லோரும் தலைமுறை தலைமுறையாகவே செல்வந்தர்களாக திகழ காரணம் அவர்களின் நடைமுறை வாழ்க்கைதான். பணத்தை எப்படி உபயோகிக்கிறார்கள் என்பதில்தான் இருக்கிறது.

மாதம் தோறும் சம்பாதிக்கும் பணத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை அன்னதானத்திற்காக ஒதுக்கி வையுங்கள். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் செய்யும் அன்னதானத்திற்கு அதிக பலன் உண்டு. முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். நல்லவை அதிகம் நடக்கும். பணம் வீட்டில் அதிகம் சேரும். வளர்பிறை திதி 15 தேய்பிறை திதி 15 இதனை கலை என்றும் சொல்லலாம். இதில் பதினாறாவதாக உள்ள திதிதான் சோடசக்கலை. இது 5 சொடக்கு போடும் நேரமே இருக்குமாம். இந்த நேரம் திருமூர்த்தியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இந்த நேரத்தில் தியானம் இருந்தால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. இன்று சோடசக்கலை நேரத்தில் தியானம் செய்து பாருங்கள் செல்வமும், மகாலட்சுமியின் அருளும் தானாக தேடி வரும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications