பக்தர்களின் துயர்துடைக்க சமயபுரத்தாள் தேரில் பவனி!

Posted By: ASTRO SUNDARA RAJAN
Subscribe to Oneindia Tamil

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: மாரியம்மன் என்றவுடன் நம் மனக்கண் முன் விருபவள் சமயபுரம் மாரியம்மன் தான். திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. சித்திரை மாதம் பிறந்து வரும் முதல் செவ்வாய் கிழமையன்று சமயபுரம் அருள்மிகு மாரியம்மனுக்கு தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதனை தொடர்ந்து இன்று ஸ்ரீ விளம்பி ஆண்டின் சித்திரை 4ம் நாள் முதல் செவ்வாய் கிழமை மாதவன் தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு தேரோட்டம் நடைப்பெற்றது.

சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவதால் இக்கோவிலுக்கு தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவது உண்டு. கோவிலில் நடைபெறும் பூச்சொரிதல் விழா, சித்திரை தேரோட்டம் பிரசித்தி பெற்றதாகும்.

todayis car festival in samayapuram mariyamman temple in tiruchirapalli district

தேரோட்டம்:

தேரோட்டம் என்பது பல மதங்களிலும் பல தெய்வங்களின் சிலைகளையோ சிலையையோ சின்னங்களையோ இதற்காக உருவாக்கப்பட்ட தேரில் வைத்துப் பலர் சேர்ந்து ஊர்வலமாக இழுத்து வரும் ஒரு விழாவாகும். இந்தியாவிலும், இலங்கையிலும இந்துக் கோயில்களில் இடம்பெறும் ஆண்டுத் திருவிழாக்களில் மிக முக்கியமான திருவிழாவாக இது அமைகின்றது. கோயில்களைப் பொறுத்துப் 10 நாட்கள் முதல் 25 நாட்கள் வரை பல நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெறும் இத்தகைய திருவிழாக்களில் இறுதியான தீர்த்தத் திருவிழாவுக்கு முதல் நாள் தேரோட்டத் திருவிழா இடம்பெறுவது வழக்கம். இத்திருவிழாவில் ஒன்று, மூன்று அல்லது ஐந்து தேர்கள் இடம்பெறுவது உண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட தேர்கள் இடம்பெறும் போது கோயிலின் தலைமைக் கடவுளுக்குப் பெரிய தேரும், பிற கடவுளருக்கு முக்கியத்துவத்தில் அடிப்படையில் சிறிய தேர்களும் இருக்கும்.

todayis car festival in samayapuram mariyamman temple in tiruchirapalli district

தத்துவம்:

கொடியேற்றம் முதல் தீர்த்தத் திருவிழா வரை கோயில்களில் ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் திருவிழாக்களின் தத்துவங்கள் குறித்துச் சைவ நூல்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன. இத் திருவிழாக்கள், படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய இறைவனின் ஐந்தொழில்களைக் குறிக்கின்றன என்பது இந்நூல்களின் கருத்து. இதன்படி தேர்த்திருவிழா அழித்தல் தொழிலைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது. தேரின் பல்வேறு உறுப்புக்களும் அண்டத்திலும், இவ்வுலகத்திலும் உள்ள பல்வேறு அம்சங்களைக் குறிப்பதாகவும் கொள்ளப்படுகிறது. இத்தகைய தேரில் எறிச் சென்றே தேவர்களைக் காப்பதற்காகச் சிவன் அசுரர்களின் மூன்று நகரங்களை அழித்தான் என்னும் தொன்மக் கதையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

todayis car festival in samayapuram mariyamman temple in tiruchirapalli district

பச்சை பட்டினி விரதம்:

அனைத்து உயிரினங்களும் நன்றாக வாழ்வதற்காக இறைவியே அதாவது ஆதிபராசக்தியே விரதம் இருப்பது சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மட்டும் தான். அனைத்து உயிரினங்களும் நன்றாக வாழ்வதற்காக இறைவியே அதாவது ஆதிபராசக்தியே விரதம் இருப்பது சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மட்டும் தான்.


இந்த அடிப்படையில் தான் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை அம்பாள் பச்சை பட்டினி விரதம் இருந்து உலக ஜீவன்களை ரட்சித்து வருகிறார். இந்த 28 நாட்களும் அம்பாளுக்கு நைவேத்யம் படைப்பது கிடையாது. இளநீர், பானகம், நீர் மோர், கரும்பு சாறு உள்ளிட்ட பானங்களே ஆகாரம். இதற்கு பச்சை பட்டினி விரதம் என பெயர். பச்சை பட்டினி விரதம் முடிந்ததும் அம்பாள் பூச்சொரிதல் கண்டருள்வார்.

todayis car festival in samayapuram mariyamman temple in tiruchirapalli district

பிள்ளை நலமில்லாத போது தாய் தானே நோன்பு நோற்பாள், அது போல் அகில உலகத்தின் தாயான மாரியம்மன் தன் குழந்தைகள் நலத்துக்கு விரதம் இருப்பது,அவளின்தாய் உள்ளத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது. தற்போது அம்பாள் அந்த விரதத்தை நடத்தி கொண்டிருக்கிறாள்.

பூச்சொரிதல் முடிந்த நிலையில் சித்திரை திருவிழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி மூலஸ்தானத்தில் இருந்து அம்மன் புறப்பாடாகி திருத்தேரில் எழுந்தருளினார். இன்று காலை திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில் லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

ஜோதிடத்தில் தேரோட்டம்:

ஜோதிடத்தில் சொகுசான வாகனங்களுக்கு காரகன் சுக்கிரன் ஆவார். தேரில் அலங்காரமும் சேர்ந்து இருப்பதால் சுக்கிரன் பொருத்தமானதாகும். சுக்கிரன் என்றாலே அழகு என்பதால்தான் "திருவாரூர் தேரழகு" என்கிறார்கள் போலும்.

todayis car festival in samayapuram mariyamman temple in tiruchirapalli district

சாதாரணமாக ராஜாகளும், ஆட்சி செய்பவர்பவர்களும் செல்லும் தேர் என்றால் சுக்கிரனோடு நிறுத்திவிடலாம். ஆனால் தெய்வதிருத்தேர் என்றால் மேலும் சில கிரகங்கள் காரகமாகின்றனர்.

உயரமான கோபுரம், கொடிமரம், திருத்தேர் போன்றவற்றின் காரகன் சூரியன் ஆகும். மேலும் நவக்கிரகங்களில் ஒற்றை சக்கரம் கொண்ட தேரில் வேதங்களின் சப்த ஸ்வரஙகள் குதிரையாகவும் ஏழுநாட்களை குறிப்பதாகவும் 12 மாதங்களை குறிக்கும் 12 ராசிகள் சக்கரமாகவும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் தேருக்கு தெய்வீக தன்மையை தருபவர் குருவாகும். கோயில் கருவரை போன்ற தன்மை இறைவன் உறையும் இடத்தில் இருப்பதால் தேரின் மைய பகுதிக்கு குரு காரகன் ஆவார்.

மேலும் பயனத்தின் காரகர் சந்திரன் ஆவார். தேர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்க்கு நகர்ந்து செல்வதால் சந்திரனும் காரகம் பெற்றுவிடுகிறார்.

தேராட்டம் என்பது ஆக்கல் காத்தல் அழித்தல் எனும் தன்மைகளில் அழிக்கும் தன்மையை குறிப்பதாலும் தேர் மெதுவாக செல்லும் தன்மை கொண்டதாலும் சனைஸ்வர பகவானும் காரகனாகின்றனர்

செவ்வாயும் சமயபுரம் மாரியம்மனும்:

ஜோதிடத்தில் வீரத்தினை குறிக்கும் கிரகம் செவ்வாயாகும். மேலும் நெருப்பு, ஆயுதங்கள், ராணுவம், பாதுகாப்பு, போர் வீரர்கள், காவலர்கள், தீயணைப்பு துறை ஆகியவற்றின் காரகரும் செவ்வாய் ஆகும். சாகசம் செய்பவர்கள், சாதனையாளர்கள் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோதிடத்தில் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழும் செவ்வாய் கால புருஷனுக்கு லக்னாதிபதியாகவும் ஆயுள் பாவமான அஷ்டமாதிபதியாகவும் விளங்குகிறார். காலம், சமயம் இரண்டும் ஒரெ பொருள் என்பது அனைவரும் அறிந்ததே! காலபுருஷனும் சமயபுரம் மாரியம்மனும் ஒன்றே என்பதில் மாற்று கருத்து இருக்காது.

todayis car festival in samayapuram mariyamman temple in tiruchirapalli district

ஜோதிடத்தில் விதவையை குறிக்கும் கிரகம் செவ்வாயாகும். தர்மத்தை காக்க மாரியம்மன் விதவை கோலத்திலும் நின்றதால் மாரியம்மன் செவ்வாயின் ஆதிக்கம் நிறைந்தவர் என்பது புலனாகிறது.

செவ்வாயின் வீடான மேஷத்தில் சூரியன் உச்சமாகும் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்க்கு காரகர் செவ்வாய் ஆகும். அம்மை நோய் கண்டவர்கள் சமயபுரம் மாரியம்மனை வணங்கிவர அம்மை நோயிலிருந்து பரிபூரணமாக குணமாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பக்தர்களின் துயரினை அழித்து தர்மத்தை காப்பதற்காகவே பச்சை பட்டினி விரதமிருந்து சித்திரை தேரில் பவனிவரும் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மனை மனதார நினைத்தாலே வாழ்வில் வளம் சேரும் என்பது நிதர்சனம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chitrai Festival is being celebrated as Maha festival for 13 days. On the first Tuesday in the Month of Chitrai, ie., on 10 th day of festival, Goddess Mariamman is being taken in a decorated wooden car and pulled around the temple. This is called as chitrai ther festival. On Friday. ie., on 13 th day of festival the Goddess is being seated in a decorated float (Theppam) and pulled around the central Mandapam of Theppakulam. This is called floating Festival. During these festivals devotees gather in large numbers offering their Prarthanas such as taking Agni Chatti, Milk Pot and Kavadi and Tonsuring their heads etc.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற