திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில் பங்குனித்திருவிழா - பக்தர்கள் தரிசனம்
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் தென்கயிலாயம் எனப் போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் இங்கு நடக்கும் தெப்பத்திருவிழா விஷேசமானது.
திருச்சி: மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயிலில் பங்குனி மாத தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. காலை மாலை இரண்டு நேரங்களிலும் தாயுமானவர் சுவாமியும் அம்பாள் மட்டுவார்குழலம்மை முக்கிய வீதிகள் உலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் வரும் 27ஆம் தேதி சனிக்கிழமை மாலை 7 மணிக்கு பிரம்ம தீர்த்தம் தெப்பக்குளத்தில் நடைபெற உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் வரும் 27ஆம் தேதி சனிக்கிழமை மாலை 7 மணிக்கு பிரம்ம தீர்த்தம் தெப்பக்குளத்தில் நடைபெற உள்ளது.
தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப் பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார்.

இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் 23, 24, 25 ஆகிய நாட்களில் தாயுமானசுவாமி மீது மாலை நேரத்தில் சூரிய ஒளி பட்டு பொன் வண்ணமாக பக்தர்களுக்குக் காட்சி அளிப்பதை பார்க்கலாம். இது சூரிய பூஜை ஆகும்.

தாயுமான சுவாமிக்கு மலைக்கோட்டை மேற்கில் பிரம்ம தீர்த்தம் என்ற சோம ரோகிணி தெப்பக்குளம் கி.பி. 1-ம் நூற்றாண்டில் கரிகால் சோழனால் வெட்டப்பட்டது. இந்த தெப்பக்குளத்தில் மட்டுவார் குழலம்மை சமேத தாயுமான சுவாமிக்கு தெப்பத்திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான தெப்பத் திருவிழா வெள்ளிக்கிழமையன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தினந்தோறுட் இரவு உபயதாரர்கள் சார்பில் அபிஷேகம் மற்றும் புறப்பாடும் நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் வரும் 27ஆம் தேதி சனிக்கிழமை மாலை 7 மணிக்கு மலைக்கோட்டைக்கு மேற்கில் உள்ள பிரம்ம தீர்த்தம் என்ற தெப்பக்குளத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோயில் உதவி ஆணையர் விஜயராணி, கோயில் ஊழியர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications