கருணாநிதி போல அரசியலில் ஜொலிப்பாரா உதயநிதி - ஜாதகம் சொல்வதென்ன

சென்னை மேயராக உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்பமனுக்கள் குவிந்து வருகின்றன. உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. திமுகவில் கருணாநிதிக்குப் பின்னர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் களம் களைகட்டியுள்ளது. அதிமுக, திமுக என இரண்டு கட்சியினரும் விருப்பமனுக்களை கொடுத்து வருகின்றனர். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மேயராக வேண்டும் என்று விருப்பமனுக்கள் குவிந்து வருகின்றன. திமுகவில் கருணாநிதிக்குப் பின்னர் ஸ்டாலின், அவருக்குப் பின்னர் உதயநிதி ஸ்டாலின் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாகவே உதயநிதியை உள்ளாட்சி தேர்தல் களத்தில் மேயராக களமிறக்க திமுக தலைமை தயாராகி வருகிறது. இந்த சூழ்நிலையில் உதயநிதியின் ஜாதகமும் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

உதயநிதி ஸ்டாலின் ஜாதகத்தில் தலைவராகும் தகுதி இருக்கிறது என்பது ஜோதிடர்களின் கருத்து. உதயநிதி ஜாதகத்தில் கிரகமாலிகா என்ற யோக அமைப்பு இருப்பதால் அரசியலில் வெற்றிகள் தேடி வரும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் மாலை போன்ற அமைப்பில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து அமைந்திருப்பது கிரக மாலிகா யோகம் என்று சொல்லப்படுகிறது.

நவ கிரகங்களும் தனித்தன்மையானவை. ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்துவமான இயல்புகள் இருக்கின்றன. கிரகங்கள் அனைத்தும் மற்றவற்றுடன் இணையாமல், சுயத் தன்மையுடன் செயல்படும்போது, கூட்டுபலன்கள் எதுவுமின்றி அந்த ஜாதகமே ஒரு உயரிய தனித்தன்மையுடன் இயங்க ஆரம்பிக்கும். இது கிரகமாலிகா யோகத்தில் மட்டுமே சாத்தியமாகும். ராகு, கேதுவைத் தவிர மற்ற ஏழு கிரகங்களும் வரிசையாக ஏழு வீடுகளில் இருந்தால் அது கிரகமாலிகா யோகம் எனப்படும். இந்த யோக அமைப்பில் பிறந்தவர்களுக்குப் நாற்பது வயதிற்கு மேல் பேரும் புகழும் வசதியும், உயர் அந்தஸ்தும் பெருகும்.

ஜாதக அமைப்பு

ஜாதக அமைப்பு

உதயநிதி ஸ்டாலின் 1977ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி பிறந்திருந்திருக்கிறார். மேஷ லக்னம் ரிஷப ராசி. மேஷம் லக்னம் ரிஷபம் முதல் தனுசு வரை எட்டு கிரகங்கள் வரிசையாக அமர்ந்துள்ளன. இந்த யோகம் ஒரு கோடியில் ஒருவருக்குத்தான் இருக்கும். ரிஷபம் சந்திரன், மிதுனம் குரு கடகம் செவ்வாய் சிம்மத்தில் சனி கன்னியில் ராகு துலாமில் ஆட்சி பெற்ற சுக்கிரன் விருச்சிகத்தில் சூரியன் தனுசு ராசி புதன் என கிரகங்கள் ராசிகளில் வரிசையாக அமர்ந்துள்ளன.

திமுக தலைமை ஆதரவு

திமுக தலைமை ஆதரவு

உதயநிதி அவரது தாத்தா கருணாநிதியைப் போல அரசியலில் சிறந்த தலைவராக வெற்றி பெறுவார் என்று அவரது ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர்கள் கூறியுள்ளனர். எனவேதான் சினிமாவில் ஓராளவு ஜெயித்த பின்னர் அரசியலில் அடி எடுத்து வைத்திருக்கிறார் உதயநிதி. நாற்பது வயதிற்கு மேல் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணி செயலாளர் பதவி கிடைத்துள்ளது. இப்போது மேயராக வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவடைந்து வருகிறது.

சனி தசை

சனி தசை

உதயநிதி ஸ்டாலினுக்கு சனி மகாதிசை தற்போது நடைபெறுகிறது. திமுகவிற்கு தலைவராகும் தகுதி உதயநிதி ஸ்டாலினுக்கு இருக்கிறது. ஸ்டாலினை விட உதயநிதி சிறப்பாகவே கட்சியை வழிநடத்தி செல்வார். அனைவரையும் அரவணைத்துச் செல்வார் என்றும் ஜோதிடர்கள் கூறியுள்ளனர். திமுகவில் பெரிய தலைவர்கள் பலரும் இருக்கின்றனர். உதயநிதியின் வயதை விட அனுபவசாலி தலைவர்கள் திமுகவில் இருக்கின்றனர். எனவேதான் நிதானமாக காய் நகர்த்தி 41 வயது வயதில் சனி மகா திசையில் புதன் புத்தியில் பதவியை அளித்துள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலில் உதயநிதி

உள்ளாட்சி தேர்தலில் உதயநிதி

ஒருவரின் ஜாதகம் எத்தனை யோகமானதாக இருந்தாலும் அவருக்கு தசா புத்தி சரியானதாக இருக்க வேண்டும். ரிஷப ராசியில் பிறந்த உதயநிதிக்கு தற்போது அஷ்டமத்து சனி காலம் நடைபெறுகிறது. ஜனவரி மாதம் சனி பெயர்ச்சியாகி ஒன்பதாம் வீட்டிற்கு செல்கிறார். குரு எட்டாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். இது அவருக்கு விபரீத ராஜயோகமாக அமைந்துள்ளது. சட்டசபை இடைத்தேர்தலில் உதயநிதி போட்டியிட கோரி பலரும் கடந்த பல மாதங்களாகவே விருப்பமனு கொடுத்தனர். இப்போது மேயர் வேட்பாளராகவும் விரும்பி விருப்ப மனு கொடுத்துள்ளனர். சனி தசையில் சனி பகவான் நன்மையே செய்வார் என்பதால் இளைஞரணி செயலாளர் பதவியை கொடுத்த திமுக தலைமை இப்போது உள்ளாட்சி தேர்தலில் களமிறக்கி உதயநிதியின் பலத்தை நோட்டம் பார்க்க திட்டமிட்டுள்ளது திமுக தலைமை என தகவல் வெளியாகி வருகிறது.

மக்கள் ஆதரவு கிடைக்குமா

மக்கள் ஆதரவு கிடைக்குமா

சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சந்திரன், புதன், சனி ஆகிய கிரகங்களை அரசு கிரகங்கள் என்பார்கள். இந்த கிரகங்கள் அனைத்தும் ஜாதகத்தில் முழுமையான பலம் பெற்று இருந்தால், உலகம் போற்றும் உத்தமத் தலைவன் என்ற பெயர் எடுத்து ஆட்சி அதிகாரத்தைப் பெற முடியும்.நாலாம் பாவம் நாலாம் அதிபதி குரு சூரியன் செவ்வாய் பதவி பற்றி சொல்லும். ஜாதகத்தில் நாலாம் பாவத்தில் சூரியன் இருந்தால் 40 வயதுக்கு மேல் ஜாதகர் நல்ல வளர்ச்சி அடைவார் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். உதயநிதி ஸ்டாலினுக்கு குடும்பத்தினர் ஆதரவு இருப்பதைப் போல மக்கள் ஆதரவும் இருந்தால்தான் வெற்றி பெற முடியும். தாத்தா கருணாநிதியைப் போல கட்சித்தொண்டர்களையும் மக்களையும் உதயநிதி வசீகரிப்பாரா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+