• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சனிபகவான் படத்தை வீட்டில் வைத்து வழிபடக்கூடாது ஏன் தெரியுமா?

|

சென்னை: நவகிரகங்களில் மக்கள் அதிகம் அச்சப்படும் சனீஸ்வரன் நீதிமான். அவரது பார்வையில் இருந்து யாரும் தப்ப முடியாது. சனிபகவான் படத்தை வீட்டில் வைத்து வணங்கக்கூடாது என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

நவகிரகங்கள் என்பவர்கள் கடவுள் கூறிய பணியை செய்யும் வேலையாட்கள். அதனால் ஆலயத்தில் கூட நவகிரகங்களை பரிவார தேவதைகளாகத் தான் பிரதிஷ்டை செய்கிறார்கள். எனவே சனீஸ்வரர் மட்டுமல்ல ராகு, கேது, குரு, சுக்கிரன் உள்பட எந்தக் கோள்களையும் வீட்டில் வைத்து வணங்கக் கூடாது.

Unknown Facts About Shani Dev

சனி பார்வைக்கு தப்ப முடியாது நீதிமான் சனிபகவான் நேர்மையாக இருப்பவர்களுக்கு நல்லதை கொடுப்பார். கெடுதல் செய்பவர்களுக்கு தண்டனை கொடுப்பார் எனவேதான் சனீஸ்வர பட்டம் பெற்றுள்ளார். அவர் ஈஸ்வர பட்டம் பெற்றது பற்றி புராண கதை உள்ளது.

சிவ ஆலயங்களில் நவகிரகங்களின் நாயகனாக சூரியன் இருக்க சனி பகவானை தனியாக வணங்குவார்கள். மக்கள் தங்களின் வீடுகளில் எத்தனையோ கடவுளின் படத்தை வைத்து வழிபட்டாலும் வீட்டில் சனீஸ்வரனின் படத்தை வைத்து வழிபாடு செய்யக் கூடாது. ஏனெனில் நவகிரகங்களில் ஒருவர் தான் சனைச்சரன் அதாவது சனீஸ்வரர்.

சனீஸ்வரரின் நேரடிப் பார்வையின் உக்கிரத்தை யாராலும் தாங்க முடியாது என்பதால் கருப்புத் துணியால் தன்னுடைய கண்களை மூடிக் கொண்டுள்ளார்.

சனி பகவான் நீதிமான். இவர் எப்போதும் தேவர், மனிதர் உள்ளிட்ட அனைத்து உயிர்களையும் எப்போதும் கவனித்தவாறு நன்கு பார்த்துக்கொண்டே இருப்பார். தவறு என்று தெரிந்தே பாவங்கள் செய்பவர்களையும், அகந்தை மற்றும் அகங்காரத்துடன் நடப்பவர்களையும் தண்டிக்காமல் விடமாட்டார்.

அத்தகைய சிறப்பு பெற்ற சனீஸ்வரனின் படம் மற்றும் சிலையை வீட்டில் வைத்து வணங்கக்கூடாது. இதற்குக் காரணம் நவகிரகங்களில் ஒருவர் தான் சனைச்சரன் எனப்படும் சனீஸ்வரன். சனைச்சரன் என்றால் மெதுவாக நகர்பவன் என்று அர்த்தம்.

நவகிரகங்களின் ஒன்றான சனீஸ்வரனின் படம் மற்றும் சிலைகளை வீட்டில் வைத்து வழிபாடு செய்தால், அது நமக்கு நற்பலன்களைக் கொடுக்காது என்று சாஸ்திரம் கூறுகிறது.

நவகிரகங்கள் என்பவர்கள் கடவுள் கூறிய பணியை செய்யும் வேலையாட்கள். அதனால் ஆலயத்தில் கூட நவகிரகங்களை பரிவார தேவதைகளாகத் தான் பிரதிஷ்டை செய்கிறார்கள். எனவே சனீஸ்வரர் மட்டுமல்ல ராகு, கேது, குரு, சுக்கிரன் உள்பட எந்தக் கோள்களையும் வீட்டில் வைத்து வணங்கக் கூடாது.

சனீஸ்வரன் பட்டம் பெற்றது எப்படி?

சூரியனுக்கு உஷாதேவி சாயாதேவி என்று இரண்டு மனைவிகள். சாயாதேவிக்கு பிறந்த கிருதவர்மா என்ற மகன்தான் பின்னாளில் சனீஸ்வரபகவானாக மாறினார். கருமை நிறம் கொண்ட சனீஸ்வரனுக்கும் ஒளியாக மின்னும் சூரியனுக்கும் பகை உணர்வு ஏற்பட்டது.

சிவனுக்கு நிகரான நிலையை அடைய வேண்டும் என்று விரும்பிய சனிபகவான் காசிக்கு சென்று லிங்கம் ஒன்றை நிறுவி கடும் தவம் செய்தார். அவரது பக்தியை கண்டு மனம் இரங்கிய சிவபெருமான் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.

வரம் கேட்ட சனி

அதற்கு சனி, எனக்கு என் தந்தை சூரியனை விட அதிக பலமும் பார்வையும் வேண்டும். என் பார்வையில் இருந்து யாரும் தப்பக்கூடாது. என் பார்வைபட்டால் மற்றவர்கள் தங்கள் பலத்தை இழந்து விட வேண்டும். நவக்கிரகங்களில் எனக்கு மட்டுமே அதிக பலம் வேண்டும்.

சுருக்கமாக சொல்லவேண்டுமானால் தங்களுக்கு அடுத்த இடத்தை எனக்கு தர வேண்டும் என்றார்.

பட்டம் கொடுத்த காசி விஸ்வநாதர்

சனியின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமான் உனக்கும் ஈஸ்வரன் என்ற பட்டம் தருகிறேன். இன்றுமுதல் நீ சனீஸ்வரன் என்று அழைக்கப்படுவாய் என்றார். சனி பகவானுக்கு ஈஸ்வர அந்தஸ்து கிடைக்க காரணமாக காசியில் காசி விஸ்வநாதரை வழிபட்டால் சனி தோசத்துக்கு சிறந்த பரிகாரமாக அமையும். கடுமையாக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கறுப்பு நிற பசுவை தானம் செய்வது சிறந்த பரிகாரமாகும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

lok-sabha-home

 
 
 
English summary
Shani is the son of Surya and Chaya He is also the brother of Lord Yama . As an ardent devotee of Lord Shiva, Shani was given the authority to reward or punish people for their good and bad deeds. Shani is often dreaded in astrology since when Shani afflicts a horoscope, the individual suffers bad luck. Here are some unknown facts about Shani Dev.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more