உங்க ராசியை சொல்லுங்க உங்க காதல் ஜெயிக்குமான்னு நாங்க சொல்றோம் #LoveAstrology
காதலர் தினம் வருடா வருடம் வந்தாலும் இந்த வருடமாவது நமக்கு காதல் பூக்குமா என்று ஏங்கித்தவிக்கும் சிங்கிள்ஸ் இருக்கத்தான் செய்கிறார்கள். எந்த ராசியில் பிறந்தவர்களுக்கு காதல் பூக்கும், யாருடைய காதல் ஜெயிக்கும் என்று பார்க்க
சென்னை: காதல் எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் வந்து விடாது. அது வர வேண்டிய நேரத்தில் வந்தே தீரும் அந்த காதல் வரும் போது அதை ரசித்து அனுபவிப்பவர்கள் மட்டுமே வாழ்க்கை முழுவதும் ஜெயித்துக்கொண்டிருப்பார்கள். சிலருக்கு 13 வயதில் காதல் பூக்கும் சிலருக்கோ 50 வயதிலும் காதல் மலர்ந்து மணம் வீசும். எந்த ராசிக்காரர்களுக்கு காதல் மலரும் ஜாதகத்தில் எந்த கிரகங்கள் எப்படி இருந்தால் காதல் ஜெயிக்கும் என்று பார்க்கலாம்.
காதல் தோன்றுவதற்கு மனம் முக்கிய பங்குவகிக்கிறது. மனதின் காரகர், உடல் காரகர், சஞ்சலத்தை தருபவர் சந்திரன். குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய 5 கிரகங்கள் இருக்கும் இடங்கள், பார்வை ஆகியவையே ஒருவரது காதல் ஜெயிக்குமா? பாதியிலேயே விலகி பிரியுமா என்பதை தீர்மானிக்கின்றன.
காதலில் துணிவான முடிவெடுக்க உதவுபவர், தைரியத்துக்கு காரகர் செவ்வாய். காதல் வெற்றி பெற உதவி தோவை. காதலுக்கு இணம் புறியாத பாசத்திற்கும், இன்பத்திற்கும்.ஆடம்பரம் அழகு, எதிர்பாலினத்தை ஈர்க்கும் சக்தியை தருபவர், வசீகரத்தின் காரகர் சுக்கிரன். சனி அவமானத்தையும், முறையற்ற காதலையும், தாமதத்தையும் தருவார். ராகு ஒரு தலைக்காதல் காரகன். மதம் மாறிய குலம் மாறிய வழக்கத்துக்கு மாறான அனைத்து திருமணங்களுக்கு காரகர் ராகு. புதன் -ராகு காதல் தடை ஏற்படுத்தும். ஒரு தலைக்காதல். சட்டரீதியாக திருமணம், பதிவு திருமணம், காதல் உருவாக்குவது, உணர்ச்சி பூர்வமாக மாற்றும் கேது காரகர்.

ஜென்ம பந்தம்
ஒருவருடன் திடீரென காதல் வந்து விடாது. பூர்வ ஜென்ம பந்தம் இருந்தால்தான் அவருடன் தொடர்பு ஏற்படும். காதல் என்ற பாக்கியம் கிடைக்க ஒன்பதாம் பாவம் எனப்படும் பாக்ய ஸ்தானத்துடனும் தொடர்பு எற்பட வேண்டும்.
ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படும் ஐந்தாம் அதிபதியும் களத்திர ஸ்தானம் எனப்படும் ஏழாம் அதிபதியும் இணைந்திருப்பது காதலை ஏற்படுத்தும்.

கை கூடி வரும் காதல்
ஜாதகத்தில் ஏழாம் அதிபதி ஐந்தாம் இடத்தில் இருப்பது அல்லது ஏழாம் அதிபதிக்கும் ஐந்தாம் அதிபதி பார்வை பெறுவது அல்லது ஏழாம் அதிபதியின் நட்சத்திரத்தில் ஐந்தாம் அதிபதி இருப்பது, ஐந்தாம் அதிபதியின் நட்சத்திரத்தில் ஏழாம் அதிபதி இருப்பது போன்ற அமைப்புகளால் காதல் திருமணம் அமையும். ஒன்பதாம் அதிபதிக்கும், ஒன்பதாம் வீட்டிற்கும் ஐந்தாம் அதிபதிக்கும் தொடர்பு ஏற்பட்டால் காதல் கை கூடும்.

காதல் மலரும் காலம்
சுக்கிரன் செவ்வாய் 5பாவகத்துடன் தொடர்பு ஏற்பட்டால் காதல் கனியும். ஏழாம் அதிபதியுடன் செவ்வாய், சுக்கிரன் தொடர்பு ஏற்பட்டால் காதல் திருமணம் அமையும். களத்திரக்காரனாகிய சுக்கிரன், ஏழாம் அதிபதிகளை சனி பார்த்தால்,சுக்கிரன், சனி ஏழாம் இணைந்திருந்தால் காதல் திருமணம் நடைபெறும்.

சுக்கிரன் செவ்வாய்
லக்கினத்திற்கு 1 5 9ல் சுக்கிரன் இருப்பதும். சந்திரன், சுக்கிரன் இணைந்து இருந்தாலும் காதல் திருமணம் நடைபெறும். பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் உள்ள ராசியும், ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் உள்ள ராசியும் ஒரே ராசியானால் கண்டதும் காதல் ஏற்படும்.

காதல் ராசிக்காரர்கள்
காதலுக்கான ராசிகள் ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், மீனம் ராசிகள் ஒன்றுக்கொன்று சம்பந்தம் பெற்றால் காதல் கை கூடும். துலாமில் சுக்கிரன் அமைந்து மற்ற ராசிகளும் கை கொடுக்குமானால் காதல் கை கூடும் என்கிறது காதல் ஜோதிடம். பொதுவாக எந்த ராசிகளுக்கும் 5 மற்றும் 9ஆம் ராசியாகி அமைபவருடன், காதல் ஏற்படும். ஒரு ராசிக்கு ஏழாவது ராசிக்காரருடன் காதல் மலர வாய்ப்புண்டு. நீங்க இந்த ராசியா? உங்க ஜாதகத்தில் கிரகங்கள் நாங்க சொன்னது போல உள்ளதா என்று பாருங்க நாளைக்கு ரோஜாப்பூவை கையில எடுங்க மக்களே.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications