For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாஸ்து பகவான் நல்லவரா? கெட்டவரா? - வாஸ்து யாகம் கிடைக்கும் பலன்கள்

வாஸ்து நாளில் பூஜையும், யாகமும் செய்தால் தடைகள் இன்றி வீடு கட்டலாம் என்பது நம்பிக்கை.

Google Oneindia Tamil News

சென்னை: ஜோதிடத்தில் நம்பிக்கையுள்ள பலரும் அடுத்ததாக அதிகம் நம்புவது வாஸ்துதான். வீடு, அலுவலகம் என அனைத்திலும் வாஸ்து பார்க்கின்றனர் அரசியல் தலைவர்கள். ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் வருகிற 27.07.2018 வெள்ளிக்கிழமை பௌர்ணமி திதியன்று காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை வாஸ்து நாளை முன்னிட்டு வாஸ்து சாந்தி பரிகார ஹோமம் நடைபெற உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாஸ்து பார்த்தும், ஜோதிடர்களை ஆலோசனை செய்தும் பல காரியங்களை செய்து வந்தவர்.

சிறுதாவூர் மற்றும் போயஸ் கார்டன் பங்களாக்களை வாஸ்து முறைப்படி அலங்கார வேலைகள் செய்திருக்கிறார். சசிகலாவும் அதிமுக பொதுச்செயலாளராக தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கையெழுத்துப் போடுவதில் இருந்து, காரில் ஏறுவது வரை அனைத்திலுமே வாஸ்து வாஸ்து வாஸ்துதான். அதையும் ஜோதிடர் குறித்துக் கொடுத்த நேரத்தில்தான் செய்கிறார் நாராயணசாமி. நாராயணசாமி முதல்வராகப் பதவியேற்றதில் இருந்து, சட்டசபையில் இருந்து வெளியேறும் வழியாகவே உள்ளே சென்று, அதே வழியிலேயே வெளியேறுகிறார். கர்நாடக முதல்வர் குமாரசாமியின் அண்ணனும் அமைச்சருமான ரேவண்ணாவும் ஜோதிடம், தெய்வீக நம்பிக்கை மிக்கவர்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் ஜோதிடர்களின் அறிவுரையைக் கேட்டு தினந்தோறும் 350 கிலோ மீட்டர் பயணம் செய்து தனது அலுவலகத்துக்குச் சென்று வருகிறார் அமைச்சர் ரேவண்ணா.

வாஸ்து பகவான் கதை

வாஸ்து பகவான் கதை

அந்தகாசுரன் என்பவனை சிவன் வதம் செய்தார். அப்போது அவரது நெற்றியில் இருந்து வழிந்த வியர்வையில் இருந்து ஒரு பூதம் கிளம்பியது. அது தன் பசி நீங்க சிவனை எண்ணி தவமிருந்து பூமியை விழுங்கும் சக்தி பெற்றது. பிரம்மா உள்ளிட்ட தேவர்கள் பூமியை விழுங்க முயன்ற பூதத்தைக் குப்புறத் தள்ளி எழாதபடி அழுத்திப் பிடித்துக் கொண்டனர். பசியால் வாடிய பூதத்திடம், "இன்று முதல் நீ வாஸ்து புருஷன் என்று அழைக்கப்படுவாய். பூமியைத் தோண்டிக் கட்டிடம் கட்டும் போது செய்யும் பூஜையின் பலன் உனக்கு கிடைக்கும்," என்று கூறினர். மத்ஸ்ய புராணத்தில் இந்த வரலாறு கூறப்பட்டுள்ளது

வாஸ்து தோஷத்தின் விளைவுகள்

வாஸ்து தோஷத்தின் விளைவுகள்

நவகிரகங்களின் ஆட்சி ஒருபுறம் நடந்தாலும், தங்கியுள்ள வீட்டின் வாஸ்து சாஸ்திரமும் மனிதனை ஆட்டுவிக்கும். எனவே வீடு நன்றாக வாஸ்துப்படி அமைத்தால்தான் சிறப்பாக இருக்கும். ஆகவே, வாஸ்து இல்லாத இடத்தில் ஜீவகாருண்யம் இருக்காது. வாஸ்து இல்லாவிட்டால் அங்கு ஜீவராசிகள் வாழ முடியாது. வாஸ்து குறைபாடு உள்ள வீடுகளில் துர்தேவதைகள், கெட்ட சக்திகள் வளரும் என்பது மக்களின் நம்பிக்கை. வாஸ்து குறைபாடு காரணமாக குடும்பத்தின் சண்டை, வாரிசுகளை திட்டுவது, அடிப்பது, சாதாரண விஷயங்களுக்கும் தம்பதிகளுக்குள் சண்டை குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்ய குறைவு, பணம், நகை, உள்ளிட்ட பொருட்கள் களவு போகும்.

பூமி பூஜை ஏற்ற நாள்

பூமி பூஜை ஏற்ற நாள்

வீட்டு மனை வாங்கியவர்கள் என்றைக்கு பூமி பூஜை போட்டு வீடு கட்டத்தொடங்க வேண்டுமென்பதை நம் முன்னோர்கள் தெளிவாகக் கூறிச் சென்றிருக்கிறார்கள். கட்டடம் கட்டுவதற்கும் பஞ்சபூத சக்திகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. அதன்படி பூமியின் இலகுத்தன்மையைக் கணக்கெடுத்து வைத்துள்ளனர். பூமியின் இலகுத்தன்மையைப் பயன்படுத்தி, அந்த நாளில் வாஸ்து வழிபாடு செய்தால், கட்டடம் கட்டும்பணி எந்தவிதத் தடையுமில்லாமல், நல்லமுறையில் கட்டடம் வளர்ச்சி பெறும். இந்த வகையில் சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் பூமி பூஜை செய்யலாம்.

 ஸ்ரீதன்வந்திரி பீடம்

ஸ்ரீதன்வந்திரி பீடம்

வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் வாஸ்து பகவான் 6 அடி விட்டத்தில் ஈசான்ய மூலையில், பஞ்ச பூதங்கள், அஷ்டதிக்பாலகர்களுடன் தலை பாகத்தில் சிவபெருமான் தீர்த்த கமண்டலத்துடனும், வயிற்று பாகத்தில் பிரம்மாவுடனும், திருவடி விஷ்ணு ரூபமாகவும், ஆகாயத்தை நோக்கிபடுத்த வண்ணம் அருள்பாலித்து கொண்டிருக்கும் திருக்காட்சி இந்தியாவில் வேறெங்கும் இல்லாத வகையில் புதுமையாக அமைக்கப்பட்டுள்ளது.

வாஸ்து நாள் ஹோமம்

வாஸ்து நாள் ஹோமம்

வெற்றிகரமான வாழ்க்கை வாழவும், குடும்பத்தில் உள்ள உறவுகளை மேம்படுத்தவும், பல்வேறு வகையான பிரச்சனைகளில் இருந்து மீள்வதற்கும், பணப்புழக்கத்தை அதிகரிக்கவும், சுகாதார பிரச்சினைகள் குறைக்கவும் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும் வருகிற 27.07.2018 வெள்ளிக்கிழமை பௌர்ணமி திதியன்று காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை வாஸ்து நாளை முன்னிட்டு வாஸ்து சாந்தி பரிகார ஹோமம் நடைபெற உள்ளது. தொடர்ந்து வாஸ்து பகவானுக்கு தயிர்சாதம், வெண் பொங்கல், புளியோதரை என விதவிதமான சாதங்கள், சேனைக்கிழங்கு, உருளை, கேரட், பீட்ரூட், முள்ளங்கி, வேர்க்கடலை போன்ற பூமிக்கடியில் விளையும் பொருட்களை நைவேத்யம் செய்து வாஸ்து ஹோம பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளது.

வாஸ்து நாள் யாகம்

வாஸ்து நாள் யாகம்

ஒவ்வொரு வாஸ்து நாட்களிலும், வளர்பிறை பஞ்சமி நாட்களிலும் தன்வந்திரி பீடத்தில் வாஸ்து சாந்தி ஹோமமும், நிவர்த்தி பூஜையும் செய்து ஹோமத்தில் வைக்கப்பட்ட செங்கல், வாஸ்து யந்திரம், மச்சயந்திரம், வாஸ்து மண் மற்றும் வாஸ்து நிவர்த்தி பொருட்களை விரும்பும் பக்தர்கள் பிரசாதமாக பெற்று செல்கின்றனர். இந்த யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி யாகத்தில் பங்கேற்க தன்வந்திரி குடும்பத்தினர் அழைக்கின்றனர். தொடர்புக்கு 04172 - 230033, செல் - 9443330203.

English summary
Vastu bahavan gives all blessing to the people who are flow the vastu days.Tamil vastu days Helps to opening new house or shifting House to new house. Business people launch a new shop using these dates. Vastu bahavan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X