நல்ல வேலை வேண்டுமா? உங்க கையெழுத்தை சரி பண்ணுங்க.. அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வீடு தேடி வரும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: படித்து நல்ல மார்க் வாங்கியும் வேலை கிடைக்கவில்லையே என்று பலரும் வருத்தப்படுகின்றனர். வேலை கிடைக்காதலும் நல்ல சம்பளம் இல்லையே என்று கலங்குகின்றனர். கையெழுத்து சரியாக இருந்தால் தலையெழுத்து சரியாக அமையும். அரசாங்க வேலை கிடைக்கவும் கை நிறைய சம்பளத்தில் கௌரவமான வேலை கிடைக்கவும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

அரசாங்க வேலையே ஆசைப்பட்ட வேலையோ கிடைக்க நாம் முழுமுதற்கடவுள் விநாயகரை வழிபட வேண்டும். நீங்கள் பார்க்கும் வேலையில் இருக்கும் விநாயகர் வழிபாடு வினைகளை தீர்க்கும் தடைகளை உடைக்கும். தினசரியும் விநாயகரை வழிபட முடியாதவர்கள் வியாழக்கிழமை வியாழன் ஓரையில் விநாயகருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.

Velai kidaika parikaram: How to get good Job Spirituality remedies

சிலருக்கு வேலை கிடைத்தாலும் அதில் பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும் உயரதிகாரிகளால் தொந்தரவு இருக்கும். சிலர் திருப்தி இல்லாமல் வேலைக்கு போய்க்கொண்டிருப்பார்கள். பார்க்கும் வேலையில் உள்ள பிரச்சினை தீர விநாயகருக்கு 9 செவ்வாழை பழங்களை மாலையாக கட்டி போடலாம். அதுவும் இந்த பரிகாரத்தை புதன்கிழமைதான் செய்ய வேண்டும்.

செவ்வாழை வாங்கி மாலை கட்டி போட முடியாதவர்கள் கற்பூரவள்ளியை மாலையாக கட்டி போடலாம். 9 கற்பூரவள்ளி இலைகளை மாலையாக கட்டி பிள்ளையாருக்கு அணிவிக்கலாம். கற்பூரவள்ளி இலையில் பிள்ளையாரின் ஸ்வரூபம் இருக்கிறது. எனவே புதன்கிழமைகளில் கற்பூரவள்ளி இலைகளை மாலையாக அணிவிக்க நல்ல பலன் கிடைக்கும். விநாயகப் பெருமானுக்கு12 புதன்கிழமைகளில் மாலையாக போட்டு வழிபட்டு வர வேண்டும். தொடர்ந்து 12 வாரங்கள் வழிபட்ட பின்பு சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் படைத்து வழிபாட்டை முடித்துக் கொள்ள வேண்டும்.

சிலருக்கு வெளிநாடு சென்று வேலை செய்ய வேண்டும் என்கிற கனவும், லட்சியமும் இருக்கும். அதற்காக விசா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருப்பார்கள். இப்படி முயன்று கொண்டிருக்கும் வேலையில் ஏதாவது தடைகள், தடங்கல்கள் வந்தாலும் நீங்கள் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையில் பிள்ளையாருக்கு கற்பூரவள்ளி மாலையோ செவ்வாழைப்பழ மாலையை சாற்றி வழிபட வேண்டும். 12வாரத்திற்குள் உங்களுக்கு கை நிறைய சம்பளத்தில் நினைத்த வேலை கிடைக்கும். வேலை கிடைக்க வேண்டும் என்று விரதம் இருப்பவர்கள் அசைவ உணவு சாப்பிடக்கூடாது.

அரசு வேலைக்காக முயற்சி செய்பவர்கள் வியாழக்கிழமைகளில் நாம் பசுவிற்கு மஞ்சள் வாழைப்பழம் வாங்கிக்கொடுக்க வேண்டும். பசு மகாலட்சுமியின் அம்சம். மஞ்சள் வாழைப்பழம் குரு பகவானின் அம்சமாகும். குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்வார்கள் எனவே நம்முடைய வீட்டின் அருகே உள்ள பசுமாட்டிற்கு மஞ்சள் வாழைப்பழங்களை வியாழக்கிழமை கொடுத்தால் நல்ல வேலை கிடைக்கும். அரசு வேலைக்காக தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

வேலைக்காக நேர்முக தேர்வுக்கு செல்லும் போது அனுமன் குங்குமத்தை வைத்துக்கொண்டு செல்வது நல்லது. அதே போல சிவப்பு நிற துணியை கூடவே பர்ஸில் எடுத்துச்செல்வது நல்லது. அதேபோல கையெழுத்து போடும் போது உங்களுடைய கையெழுத்து மேல்நோக்கி செல்வது போல இருக்க வேண்டும். கீழே நோக்கி செல்வது போல கையெழுத்து இருந்தால் அது வாழ்க்கையை கீழ் நோக்கி கொண்டு சென்று விடும். எப்போதுமே நாம் கையெழுத்து போட்டு விட்டு முற்றுப்புள்ளி வைக்கக்கூடாது. அப்படி முற்றுப்புள்ளி வைத்தால் அது நம்முடைய முயற்சிக்கும் வெற்றிக்கும் தடையை ஏற்படுத்தும்.

எதையும் நம்பிக்கையோடு செய்ய வேண்டும். சில வாரங்கள் மட்டுமே செய்து விட்டு நம்பிக்கை இழக்கக் கூடாது. முயற்சி செய்யுங்கள் விநாயகர் அருளினால் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு வீடு தேடி வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+