விகாரி தமிழ் வருட பலன்கள் 2019-20: கும்பம் ராசிக்காரர்களுக்கு நலமான ஆண்டு
Recommended Video
மதுரை: விகாரி தமிழ் புத்தாண்டு கும்பம் ராசிக்காரர்களுக்கு திடீர் யோகங்களையும் அதிக பணவரவையும் தரப்போகிறது. நலமான ஆண்டு பிறந்துள்ளது. ராசியில் சுக்கிரன் அமர்ந்திருக்கும் நேரத்தில் ஆண்டு பிறந்துள்ளதால் அதிக பணம் கிடைக்கும். கடன்கள் தீரும்.
திருக்கணிதப்பஞ்சாங்கப்படி தமிழ் புத்தாண்டு தினத்தன்று கடக லக்னம் லக்னத்தில் சந்திரன், மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் செவ்வாய் மிதுனத்தில் ராகு தனுசு ராசியில் குரு, சனி, கேது கும்ப ராசியில் சுக்கிரன், மீனம் ராசியில் புதன் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. விகாரி ஆண்டில் திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஐப்பசி 18ஆம் தேதி நவம்பர் 4ஆம் நாள் குருப்பெயர்ச்சி நிகழ்கிறது. குருபகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்கிறார். வாக்கியப்பஞ்சாங்கப்படி குரு பகவான் அக்டோபர் 28ஆம் தேதி தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு செல்கிறார்.
திருக்கணிதப் பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டில் நிகழ்கிறது. வாக்கியப்பஞ்சாங்கப்படி மார்ச் 27,2020ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை நிகழ்கிறது. கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பொறுத்து கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த விகாரி வருடத்தின் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

அரசு பதவிகள் தேடி வரும்
செல்வம் செல்வாக்கு குவியும். சுக்கிரபகவான் சஞ்சாரத்தினால் பெண்களுக்கு மேன்மை தரும் ஆண்டாக அமைந்துள்ளது. கலைத்துறையினருக்கு உயர்வுகள் தேடி வரும். வருட ஆரம்பத்தில் சூரியன் மூன்றாம் வீட்டில் உச்சமடைந்து அமர்ந்துள்ளதால் அரசு பதவிகள் தேடி வரும். மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும்.

ஆரோக்கியத்தில் அக்கறை தேவை
லக்னம் சந்திரன் ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் கடன் பற்றிய எண்ணம் வந்து செல்லும். குருபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவு அதி அற்புதமாக இருக்கும். கடன் தொல்லைகள் நீங்கும். வேலைப்பளு அதிகரிக்கும். உடல் அசதி ஏற்படும். சத்தான உணவுகளை சாப்பிடுங்கள்.
அவ்வப்போது உடல் நலம் படுத்தி எடுக்கும். கண்ணாத்தாளை வழிபட கண் நோய் தொடர்பான நோய்கள் நீங்கும்.

வீடு வாகனம் அமையும்
ராகுவின் சஞ்சாரத்தினால் தொழில் செய்பவர்களுக்கு செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குல தெய்வ வழிபாட்டினால் மிகப்பெரிய நன்மைகளும் வளர்ச்சியும் ஏற்படும். குல தெய்வத்தை வழிபட்டு விட்டு செழிப்பான சூழ்நிலை அமையும். தடைகள் விலகும். புதிய சொத்து சேர்க்கைகள் அமையும். கேது லாப ஸ்தானத்தில் அமைந்திருப்பதால் உடன் பிறந்தவர்களினால் நன்மைகள் ஏற்படும்.

கணவன் மனைவி ஒற்றுமை
அடிப்படை வசதிகள் அதிகரிக்கும். சுப காரியங்கள் கை கூடி வரும். வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். பெண் குழந்தைகளுக்கு தேவையான நகைகள் வாங்குவீர்கள். கணவன் மனைவி இடையேயான உறவுகள் உற்சாகமாக இருக்கும். களத்திர ஸ்தானத்தினை குரு பார்ப்பதால் நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை துணைக்கு முன்னேற்றம் ஏற்படும். தொழில் நன்றாக அமையும்.

சனி கேது சேர்க்கை
ஆண்டு முழுவதும் சனி பகவானும் கேதுவும் இணைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஆன்மீக பயணம் அதிகரிக்கும். பணவரவும், தொழில் வியாபாரமும் நன்றாக அமையும். குருபகவான் பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கும் சமயத்தில் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம்.












Click it and Unblock the Notifications