விநாயகர் சதுர்த்தி, திருவோணம், மகாளய அமாவாசை - செப்டம்பர் மாத விரத நாட்கள்
செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி தொடங்கி மகாளய அமாவாசை வரை பல முக்கிய விஷேச நாட்கள் வருகின்றன. நவராத்திரி கொலு பூஜையும் தொடங்குகிறது. செப்டம்பரில் இன்னும் என்னென்ன விஷேசம் நடைபெறுகிறது என்று பார்க்
சென்னை: செப்டம்பர் மாதம் பல முக்கிய பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன. விநாயகர் சதுர்த்தி, திருவோணம், ஸ்ரீஹயக்ரீவ ஜெயந்தி, மகாளய அமாவாசை போன்ற முக்கிய விரத தினங்கள் கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில்தான் ரிஷி பஞ்சமி, ஸ்ரீஹயக்ரீவர் ஜெயந்தி, குரு ஜெயந்தி, சுக்கிர ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. மகாவிஷ்ணு என்ற நெடிய உயர்ந்த தெய்வம், வாமனன் என்ற குட்டையான வடிவு கொண்டு பூமியை தன் காலடியால் அளக்க அவதரித்தது இந்த ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில்தான். இது செப்டம்பர் 11ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

முக்கிய விரத தினங்கள்:
செப்டம்பர் 2: விநாயகர் சதுர்த்தி. கணபதியை பூஜை செய்து வழிபட நன்மைகள் நடைபெறும். முழு முதற்கடவுளான விநாயகரை வழிபடலாம்.
செப்டம்பர் 3 : ரிஷி பஞ்சமி : சப்த ரிஷிகளை வணங்கலாம். விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் வரும் பஞ்சமி திதியை ரிஷி பஞ்சமி என்று அழைக்கிறார்கள். அன்றைய தினம் சப்த ரிஷிகளை வணங்கி வழிபாடு செய்பவர்களின் இல்லங்களில் வளம் பெருகும் என்பது ஐதீகம். இந்த விரதத்தின் மூலம் வேண்டிய வரங்களைப் பெற முடியும். பெண்களின் சவுபாக்கியம் அதிகரிக்க வேண்டிச் செய்யப்படும் விரதம் இதுவாகும்.
செப்டம்பர் 8 : ஆவணி மூலம்: ஆவணி மூலம் நட்சத்திர நாள், சீதோஷ்ணத்தை நிர்ணயிக்கும் முக்கியமான நாள். அன்று காலையில் சூரியன் உதயமாகும் போதே ஆக்ரோஷமாக வெப்பத்தைச் சிந்தினால், அந்த ஆண்டு முழுவதுமே வெயில் கடுமையாக இருக்கும். மேகமூட்டத்துடன் வெப்பம் குறைவாக இருந்தால், சிறப்பான சீதோஷ்ணம் காணப்படும். சூரியன் உள்ளிட்ட கிரகங்கள் என்ன தான் தங்கள் பணியைச் செய்தாலும், இறைவனுக்கு அவை பணியாளர்கள் தான். அவையனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டவை. கிரகங்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, இறைவனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து.நல்ல சீதோஷ்ணம் வேண்டுமென வேண்டிக் கொள்கிறோம். மதுரையில் சொக்கநாதர் ஆட்சி தொடங்குகிறது.
செப்டம்பர் 11 : திருவோணம். வாமன ஜெயந்தி. மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்த நாள். மகாபலி சக்ரவர்த்தியிடம் மூன்றடி நிலம் கேட்டு மூவுலகையும் தன் பாதங்களால் அளந்து பாதாள லோகத்திற்கு அதிபதியாக மாற்றிய தினம் திருவோணப்பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
செப்டம்பர் 14: மஹாளய பட்சம் ஆரம்பம். முன்னோர்கள் பித்ரு லோகத்தில் இருந்து இந்த பூவுலகிற்கு வந்து நம்முடன் வசிக்கும் நாட்கள். அவர்களை மகிழ்வுடன் கவனிக்க வேண்டும்.
செப்டம்பர் 18 : மஹா பரணி.
செப்டம்பர் 22: மத்யாஷ்டமி
செப்டம்பர் 25: ஸ்ரீ சுக்கிர ஜெயந்தி. நவகிரகங்களில் சுக்கிரபகவானை வணங்க நன்மைகள் நடக்கும்.
செப்டம்பர் 28: மஹாளய அமாவாசை: 14 நாட்கள் நம்முடன் இருந்த முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்து வணங்கலாம். பல தலைமுறைக்கும் புண்ணியம் சேரும்.
செப்டம்பர் 29: நவராத்திரி பூஜை ஆரம்பம்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications