விருச்சிகம் ஏப்ரல் மாத ராசி பலன் 2021: புதிய வாய்ப்புகள் தேடி வந்து புத்துணர்ச்சியை தரும்
ஏப்ரல் மாதம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வந்து புத்துணர்ச்சியைச் தரப்போகிறது. வரப்போகும் வாய்ப்புகளை விருச்சிக ராசிக்காரர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
சென்னை: விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் புதிய வாய்ப்புகள் தேடி வந்து புத்துணர்ச்சி தரக்கூடிய மாதமாக அமையப்போகிறது. ஏப்ரல் மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் நவகிரகங்களின் நாயகன் சூரியன் மீன ராசியில் பயணிக்கிறார் உச்சம் பெற்ற சுக்கிரன், நீசம் பெற்ற புதன் ரிஷபத்தில் செவ்வாய் ராகு, விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, குரு, என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. ஏப்ரல் மாதம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் குழந்தைகளால் சந்தோஷம் நிறைந்த மாதமாக மாறப்போகிறது.
ஏப்ரல் மாதத்தில் கிரக பெயர்ச்சியைப் பார்த்தால் சூரியன் மீன ராசியில் இருந்து 14ஆம் தேதி மேஷ ராசிக்கு சென்று உச்சமடைகிறார். உச்சம் பெற்ற சூரியனின் பார்வை துலா ராசியின் மீது விழுகிறது. சுக்கிரனும் மேஷ ராசியில் பயணிக்கிறார். புதன் நீசம் பெற்று சஞ்சரிப்பார். 16ஆம் தேதி புதன் மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். 30ஆம் தேதி ரிஷப ராசிக்கு மாறுகிறார்.
குரு பகவான் ஏப்ரல் 5ஆம் தேதி மகர ராசியில் இருந்து அதிசார பெயர்ச்சியாகி கும்ப ராசிக்கு செல்கிறார். ராகு உடன் இணைந்துள்ள செவ்வாய் ரிஷப ராசியில் இருந்து 13ஆம் தேதி மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த மாதத்தில் கிரகங்களின் இடமாற்றம் அதிகம் உள்ளது. இந்த கிரகங்களின் சஞ்சாரம் மாற்றத்தின்படி விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு ஏப்ரல் மாதம் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

உற்சாகமான மாதம்
விருச்சிகம் செவ்வாய் பகவானை ராசி அதிபதிபயாகக் கொண்ட உங்களுக்கு ஏப்ரல் மாதத்தில் சந்தோஷ சம்பவங்கள் நடைபெறும். உங்கள் ராசிக்கு இந்த மாதத்தில் செவ்வாயின் பார்வை கிடைப்பதால் உற்சாகம் அதிகரிக்கும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மாத பிற்பகுதியில் ராசிநாதன் செவ்வாய் ஏழாம் வீட்டில் இருந்து எட்டாம் வீட்டிற்கு செல்வதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை.

புதிய வேலை கிடைக்கும்
அதிசாரமாக சென்ற குருவின் பார்வை உங்களுடைய ராசிக்கு சாதகமான இடங்களில் பதிகிறது. புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்யலாம். வெளியூர் வெளிநாடுகளில் இருந்து புதிய வாய்ப்புகள் தேடி வரும். வேலை தொழில் விசயங்களில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் லாபத்தை இரட்டிப்பாக கொடுக்கும். பணம் கடனாக கொடுக்கும் போது கவனம் தேவை. ஜாமீன் கையெழுத்து போட்டி மாட்டிக்கொள்ள வேண்டாம்.

நெருப்பு விசயத்தில் விழிப்புணர்வு தேவை
ஆறாம் வீட்டிற்கு சுக்கிரன் செல்வதால் பெண்களுக்கு நன்மைகள் நடைபெறும் என்றால் எட்டில் செவ்வாய் பயணிப்பதால் நெருப்பு விசயங்களில் கவனம் தேவை. மின்சாதனங்களை கையாளும் போதும் கவனம் அவசியம். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்லவும் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

குருவாயூரப்பன் கோவில்
குழந்தைகளால் குதூகலம் அதிகரிக்கும். பிள்ளைகள் மீது கண்காணிப்புடன் இருப்பது அவசியம். மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் போதும் இருசக்கர வானகங்களை பயன்படுத்தும் போதும் கவனம் தேவை. ஆன்லைன் வகுப்பில் படிப்பவர்கள் கல்வியில் கவனம் செலுத்தவும். விளையாட்டுத்தனமாக விட்டு விட வேண்டாம். இந்த மாதம் வியாழக்கிழமை குருவாயூரப்பன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வர பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications