விருச்சிக ராசி மட்டும் ஏன் ஸ்பெஷலாக பார்க்கப்படுகிறது? அவர்கள் குணநலன்கள் என்ன தெரியுமா!
சென்னை: எந்த ஜோதிடர்களுமே தினமும் ஒருமுறையாவது, விருச்சிகம் ராசிக்காரர்கள் எப்படிப்பட்டவர்கள் என்ற கேள்வியை எதிர்கொண்டபடிதான் உள்ளார்களாம். ஏனெனில் பலாப்பழம் போல அவர்கள் முள்ளா, இனிப்பா என்று கண்டறிய முடியாத புதிருக்கு சொந்தக்காரர்கள். புலியின் பாய்ச்சல் போல எங்கிருந்து எப்படி பாய்கிறார்கள் என்பதை கணிக்க முடியாதவர்கள் என்பதால் இந்த கேள்வி ஜோதிடர்களுக்கு அன்றாட வாடிக்கையாகிவிட்டதாம்.
நட்சத்திர மண்டலத்தில் அமைந்துள்ள, விசாகம் 4-ம் பாதம் முதல், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் விருச்சிக ராசியில் வரும். இதில் நட்சத்திர ரீதியாகவும் பலன்கள் மாறுவது உண்டு. உதாரணத்திற்கு, கேட்டையில் பிறந்தவர்கள் கோட்டை கட்டி வாழ்வார்கள் என்பது ஜோதிட ரீதியான உண்மையாகும். இருப்பினும் ராசி என்று வந்துவிட்டால் பல குணாதிசியங்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

விருச்சிகம் ராசிக்கு ராசிநாதன் செவ்வாய் கிரகம் ஆகும். செவ்வாய் அதிபதி முருகன். எனவே விருச்சிக ராசிக்காரர்கள் முருகனை வழிபடுவது மிக மிக அவசியம். திருச்செந்தூர் உட்பட அறுபடை வீடுகள் எங்கு சென்று நீங்கள் வழிபட்டாலும் அதிருஷ்ட மழை கொட்டும். கர்நாடக மாநிலம் குக்கே நகரிலுள்ள சுப்பிரமணியன் சுவாமி கோயிலும் விருச்சிக ராசிக்காரர்கள் சென்று வழிபட வேண்டிய அற்புதமான தலமாகும்.
சரி விஷயத்திற்கு வருவோமே.. புதிர் புலிகளான விருச்சிக ராசிக்காரர்களின் குணநலன்களை இப்போது பார்ப்போம்.. விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் தீவிரமானவர்கள். அவர்கள் சென்சிட்டிவான உணர்ச்சிகளைக் கொண்டவர்கள். எனவே ஈஸியாக எதையும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள். ஈஸியாக யாருடனும் நெருங்க மாட்டார்கள். யோசித்து அனைத்து கோணங்களையும் பலிசீலித்த பிறகுதான் நெருங்குவார்கள். நெருங்கிய பிறகு மிகவும் உண்மையாக இருப்பார்கள்.
கோபம், அன்பு, வேலை, கலை என எதை எடுத்தாலும் அதில் மிக தீவிரமாக அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள். நண்பர்களிடம் மிகவும் விசுவாசமானவர்கள். இலக்குகளை அடைய கடினமாக உழைப்பவர்கள். தாங்கள் மனது வைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்று நம்புபவர்கள். விருச்சிக ராசிக்காரர்கள் நேர்மையை எதிர்பார்ப்பார்கள். இவர்களிடம் பொய்யான உறவுகளால் நீடிக்க முடியாது. உண்மையோடு நடப்பவர்களை இவர்கள் அன்பாக பார்த்துக்கொள்வார்கள்.
அதேநேரம், விருச்சிக ராசிக்காரர்கள் ரகசியமானவர்கள். தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை மற்றவர்களிடமிருந்து பாதுகாக்கிறார்கள். ஒரு சிலரை தவிர மற்றவர்களுக்கு இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அவ்வளவாக தெரியாது. எதிலுமே ஆழமானவர்கள் என்பதால் சிந்தனையிலும் அப்படித்தான். ஒரு விஷயத்தை எடுத்து சிந்திக்கத் தொடங்கினால், அதன் கரை காணாமல் திரும்ப மாட்டார்கள். ஆங்கிலத்தில் டீகோட் என்று சொல்வார்களே, அப்படி, அக்கு அக்காக அலசி ஆய்வு செய்துவிடுவார்கள். வாழ்க்கையின் எந்த ஒரு மர்மங்களையும் தத்துவார்த்த ரீதியிலும் ஆராய்வதில் ஆர்வமுள்ளவர்கள்
விருச்சிக ராசிக்காரர்கள் படைப்பாற்றல் மிக்கவர்கள். கலை, இசை அல்லது எழுத்து போன்ற படைப்பு முயற்சிகளில் சிறந்து விளங்குகிறார்கள். விருச்சிக ராசிக்காரர்களுக்கு தெய்வ பலம் உண்டு. எனவே, வலுவான உள்ளுணர்வைக் கொண்டவர்கள். மற்றவர்கள் புரிந்துகொள்ள தாமதமாகும் எதிரிகளின் செயல்பாடுகளை இவர்களால் முதலிலேயே கணிக்க முடியும்.
விருச்சிக ராசிக்காரர்கள் இயற்கையாகவே தலைவர்கள், மற்றும் மற்றவர்களை ஊக்குவிக்கவும் திறன் கொண்டவர்கள். எதையும் ஆழம் பார்ப்பவர்கள் என்பதால், தலைமை பதவி இவர்களுக்கு வரும்போது, அந்த நிறுவனம், டீம் அல்லது குடும்பம் அடுத்த கட்டத்திற்கு உயரும் வாய்ப்பு உள்ளது. மற்றொரு ஒற்றுமை, அவர்கள் மறுபிறவியில் நம்பிக்கை கொண்டவர்கள், மேலும் மனித வாழ்க்கை பல முறை வாழப்பட வேண்டிய ஒன்று என்பதால் ஒழுக்கமாக வாழ்வது அவசியம் என்று நம்புகிறார்கள்.
இவை விருச்சிக ராசியின் சில பொதுவான குணநலன்கள். அனைத்து விருச்சிக ராசிக்காரர்களும் இந்த குணநலன்களைக் கொண்டிருப்பார்கள் என்று சொல்ல முடியாதுதான். ஏனெனில் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள், அவர்களின் சொந்த தனிப்பட்ட குணாதிசயங்களைக் கொண்டுள்ளனர். வாழ்க்கைச் சூழ்நிலையும் குணங்களை மாற்றுகிறது. ஆனால், பெரும்பாலான விருச்சிக ராசிக்காரர்களுக்கு இதுவே பொதுவான குணநலனாகும். எனவேதான் விருச்சிக ராசிக்காரர்கள் விருச்சிக ராசிக்கார்களுடன் நெருக்கமாக இருப்பார்கள். அவர்களை அவர்களால்தான் எளிதில் புரிந்து கொள்ள முடியுமாம்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications