இனி அமோகம்.. தொட்டதெல்லாம் தூள் பறக்கும் காலம்! கும்ப ராசிக்கு குரு தரப்போகும் 6 லக்கான விஷயங்கள்
சென்னை: குரு பகவானின் வக்ர பெயர்ச்சி காரணமாக கும்ப ராசிக்கு என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.. கும்ப ராசிக்கு 6 முக்கியமான விஷயங்கள் நடக்க போகின்றன. அவை என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.
குருவின் ஒவ்வொரு பயணமும் உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். ரிஷப ராசியில் ரோகிணி, கார்த்திகை நட்சத்திரங்களில் குரு வக்ரம் அடைகிறார். அந்த வகையில் கும்ப ராசிக்கான பலன்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன. அக்டோபர் 9ம் தேதி குரு பகவான் ரிஷப ராசியில் வக்ர பயணம் மேற்கொள்ள உள்ளார். பிப்ரவரி மாதம் 4ம் தேதி வரை இந்த பயணம் நீடிக்கும். குரு பார்த்தால் கோடி நன்மை என்பார்கள்.

சிலருக்கு குரு வக்ர பெயர்ச்சி வாழ்க்கையின் போக்கையே கூட மாற்றம். குருவின் பெயர்ச்சியால் வாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள்.. அப்படியே வீழ்ந்தவர்களும் இருக்கிறார்கள். எல்லாம் குரு இருக்கும் இடம்.. பார்க்கும் இடம்.. நகரும் இடத்தை பொறுத்தது. குரு ஒருவரை மேலே தூக்கி வைக்கும்.. சிலரை கீழே இறக்கியும் வைக்கும்.
குரு பெயர்ச்சி மற்றும் அதன் வக்ர பெயர்ச்சி பொதுவாக பல விதமான மாற்றங்களை பல ராசிகாரர்களுக்கு ஏற்படுத்தும். சிலருக்கு வாழ்க்கையை அடியோடு மாற்றும் குணம் கொண்டது குரு பெயர்ச்சி.
கும்ப ராசிக்கு நடக்க போகும் 6 விஷயங்கள்:
1. செல்வாக்கு உயரும்: உங்களின் செல்வாக்கு உயரும். அதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் பலரிடம் பிரபலம் ஆகும் வாய்ப்புகள் உள்ளன. இதுவரை வெளியே தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருந்த நீங்கள் இனிமேல்.. உலகிற்கே தெரியும் அளவிற்கு பெரிய ஆளாக மாறும் காலம் வந்துவிட்டது.
2. குரு இருந்தால் நல்லதே நடக்கும்.. நன்றாக நடக்கும்.. நினைத்ததே நடக்கும் என்பார்கள். அப்படிதான் உங்களுக்கு நடக்க போகிறது. உங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். புரமோசனுடன் கூடிய சம்பள உயர்வு கிடைக்கும். நீங்கள் தொடங்கும் தொழில் வெற்றி அடையும். இத்தனை காலம் வேலையில்தான் பிரச்சனை நிலவியது. இனி அந்த பிரச்சனை இருக்காது.
3. எல்லாத்திலும் வெற்றி - பயன்படுத்திக்கொள்ளுங்கள்: நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். கெட்டதெல்லாம் விலகும். முதலீடு செய்தால் வெற்றிபெறுவீர்கள். நிலம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.
4. இரண்டாவது, மூன்றாவது குழந்தைக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால் குழந்தை பிறப்பில் சிக்கல்கள் ஏற்படலாம். அரசியலில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். உங்கள் பதவிகள் காலியாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
5. இனி உங்களுக்கு பொருளாதாரம் உயரும். பணம் கொட்டும். பிஸ்னஸ் தொடங்கினால் வெற்றி நிச்சயம், வீடு, நிலம் கிடைக்கும் வாய்ப்பு வரும். பெரிய மனிதர்கள் ஆசிர்வாதம் உறவு கிடைக்கும். சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும்.
6. உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். மன ஆரோக்கியம் சரியாகும். ஆனாலும் முன்பு மோசமாக இருந்த மன ஆரோக்கியம் காரணமாக.. ஏற்பட்ட உடல் பாதிப்புகள் தொடரும். அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.
பரிகாரம்: நாகர்கோவில் நாகநாத சுவாமி கோவிலுக்கு சென்று வழிபடுவது நல்ல பலனை தரும்.












Click it and Unblock the Notifications