புதிய வாகனம் வாங்கும் போது.. டயரின் கீழே எலுமிச்சை பழம் வைக்கப்படுவது.. ஏன் என்று தெரியுமா?
சென்னை: புதிய வாகனங்கள் வாங்கிய பின், புதிய பயணங்கள் மேற்கொள்ளும் முன் காரின் டயரின் கீழே எலுமிச்சை பழம் வைக்கப்படுவது ஏன் என்று தெரியுமா?
நாம் சில பழக்க வழக்கங்களை என்ன காரணம் என்றே தெரியாமல் பயன்படுத்துவது, செய்வது வழக்கம். பலரும் செய்து வந்தனர் என்பதற்காகவே நாமும் சில விஷயங்களை காலம் காலமாக செய்வது வழக்கம்.

அப்படித்தான் காரின் டயரின் கீழ் எலுமிச்சை பழம் வைப்பதும். புதிய பொருள் வாங்கும் போதெல்லாம் முதலில் பூஜை செய்து அதில் பச்சை மிளகாய் மற்றும் எலுமிச்சை பழம் கட்ட வேண்டும் என்பது ஜோதிட சாஸ்திரம். இது உங்கள் தீய சக்திகளை, கண்களைத் தடுக்க உதவும் என்று நம்பப்படுகிறது. இந்த பழக்கத்திற்கு பின் என்ன காரணம் இருக்கிறது என்று இங்கே பார்க்கலாம்.
ஜோதிடத்தில், எலுமிச்சை என்பது சுக்கிரன் மற்றும் சந்திரனுடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. எலுமிச்சையின் புளிப்பு சுக்கிரன் கிரகத்துடன் தொடர்புடையது என்றும் அதன் சாறு சந்திரனைக் குறிப்பதாக நம்பப்படுகிறது. ஜோதிடத்தில் எலுமிச்சை என்பது பல தீர்வுகளை வழங்கும் ஆன்மீக பொருளாகும். முக்கியமாக அவை எதிர்மறையை மிகவும் திறம்பட நீக்கும் என்று நம்பப்படுகிறது.
சாஸ்திரங்களின்படி, எந்த ஒரு புதிய பொருளை வாங்கினாலும் அதை சுற்றிலும் எதிர்மறை ஆற்றல் (Signs Of Negative Energy) அதிகமாக இருக்கும். எனவே, எதிர்மறை அதிர்வுகளிலிருந்து விடுபட அனைத்து புதிய பொருட்களின் அருகில் எலுமிச்சையை வைத்திருக்க வேண்டும் என்பதே ஐதீகம்.
இதன் மூலம் அந்த எதிர்மறை எண்ணங்களை அழிக்க முடியும். இந்த நடைமுறையைப் பின்பற்றுவது உங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் மற்றும் சந்திரனின் நிலையை வலுப்படுத்த உதவுகிறது.
நீங்கள் ஒரு புதிய வாகனத்தின் டயருக்கு அடியில் எலுமிச்சை பழத்தை வைக்கும்போது, குறிப்பாக புதிய பயணத்திற்கு செல்லும் முன், அது அந்த வாகனத்தையும் அதன் பயணிகளையும் கண் திருஷ்டி எனப்படும் தீய கண்கள் ஏற்படுத்தும் தீய விளைவுகளிலிருந்து பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது. இது உங்களுக்கு பாதுகாப்பான மற்றும் சிக்கல் இல்லாத பயணத்தை உறுதி செய்யும் விதமாக இந்த ஐதீகம் கடைபிடிக்கப்படுகிறது.
வேறு ஒரு காரணம்: கடந்த காலங்களில் அனைத்து மக்களும் விலங்குகளை சரக்கு போக்குவரத்துக்காகவோ அல்லது ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்கவோ பயன்படுத்தப்பட்டன, அந்த நேரத்தில் விலங்குகள் மண் மற்றும் கழிவு நீர் போன்ற அசுத்தமான பொருட்களுக்கு மேலே நடக்கின்றன. அந்த நேரத்தில் தொற்று ஏற்படும் சில பாக்டீரியாக்கள் விலங்குகளின் கால்களில் பட்டு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இதை தடுக்கவே எலுமிச்சை பயன்படுத்தப்படும். எலுமிச்சை அனைத்து பாக்டீரியாக்களுக்கும் மருந்து ஆகும், அதனால்தான் விலங்குகளின் கால்களுக்கு அடியில் எலுமிச்சையை நசுக்குவது வழக்கம் ஆனது. சிட்ரிக் அமிலம் அனைத்து வகையான பாக்டீரியாக்களையும் அழிக்க உதவுகிறது. அதுவே பிற்காலத்தில் வாகனங்களில் வைக்கும் வழக்கமாக மாறியது என்றும் நம்பப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications