ஏழரை சனி எப்போது நன்மை செய்யும்? எப்போது முடியும்? வகைகள் என்ன? முழு விவரம்
சென்னை: ஏழரை சனி என்பது ஜோதிடத்தில் ஒரு முக்கியமான காலகட்டமாக கருதப்படுகிறது. இது ஒருவரின் ஜாதகத்தில் சனி கிரகம் அவரது ராசிக்கு பின்னான ராசியில் நுழைந்து அதாவது 12வது இடத்தில் காலடி எடுத்து வைத்து பிறகு அந்த மனிதரின் ராசி, அதன்பிறகு அவரின் ராசிக்கு அடுத்த ராசி என ஒவ்வொரு ராசியிலும் தலா இரண்டரை வருடங்கள் பயணிக்கும் கால கட்டம் ஆகும்.
ஆக மொத்தம் இந்த மூன்று ராசிகளில் ஏழரை வருடங்கள் வரை பயணிக்கும் காலகட்டமாகும். இந்த காலகட்டம் மூன்று முக்கிய கட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது: விரய சனி, ஜென்ம சனி மற்றும் பாத சனி.

விரய சனி: இந்த காலகட்டத்தில், சனி கிரகம் ராசிக்கு முந்தைய ராசியில் நுழைகிறது. கடக ராசிக்காரர்களுக்கு மிதுனம் 12வது இடமாகும். அங்கு சனி காலடி எடுத்து வைக்கும்போது, கடக ராசிக்கு அது விரய சனி என்று எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த காலத்தில், பொருள் ஈட்டினாலும் அது விரயமாகிப் போகும். அதிக செலவு, இழப்புகள், மற்றும் திட்டமிடாத செலவுகள் போன்றவை ஏற்படலாம்.
ஜென்ம சனி: இந்த காலகட்டத்தில், சனி கிரகம் ஒருவரின் சொந்த ராசியில் நுழைகிறது. உதாரணத்திற்கு கடக ராசியில் சனி காலடி எடுத்து வைக்கும்போது அது கடக ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி காலகட்டமாகும். இது மிகவும் கடினமான காலகட்டமாக கருதப்படுகிறது. இந்த காலத்தில், பலவிதமான சவால்கள் மற்றும் பிரச்சனைகள் எதிர் கொள்ள நேரிடும். வேலை இழப்பு, தொழில் நஷ்டம், குடும்ப பிரச்சனைகள், உடல்நலப் பிரச்சனைகள் போன்றவை ஏற்படலாம். செய்த பாவங்கள் அதிகமாக இருந்தாலோ, மற்றும் உங்கள் குல தெய்வத்தின் பலம் குறைவாக இருந்தால் மிக மிக மோசமான பிரச்சினைகளை, ஏழரை சனி காலத்தின், ஜென்ம சனி காலகட்டத்தில் ஒரு மனிதன் எதிர்கொள்ளும் நிலை இருக்கும்.
பாத சனி: இந்த காலகட்டத்தில், சனி கிரகம் ராசிக்கு இரண்டாவது ராசியில் நுழைகிறது. அதாவது கடகம் ராசி என்ற உதாரணத்தையே வைத்துக்கொண்டால், சனி கிரகம் சிம்ம ராசியில் காலடி எடுத்து வைக்கிறது என்று அர்த்தம். இந்த காலத்தில், சில சிரமங்கள் இருந்தாலும், படிப்படியாக முன்னேற்றம் காணலாம். குறிப்பாக, குடும்ப வாழ்க்கை, நிதி நிலைமை, மற்றும் உறவுகளில் சில சவால்கள் இருக்கலாம். பட்டபாடுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை ஆண்டவா என்று நினைக்க வைக்கும் காலகட்டம் பாத சனி காலகட்டம்.
மங்கு, பொங்கு, போக்கு சனி: ஏழரை சனி ஒவ்வொரு மனிதனுக்கும் சராசரியாக, அவனது ஆயுட்காலத்தில், மூன்று முறை நிகழ்கிறது: மங்கு சனி, பொங்கு சனி மற்றும் மரண சனி என்று இதை வகைப்படுத்துகிறார்கள்.
- மங்கு சனி: இது முதல் முறையாக நிகழும் ஏழரை சனி. இது பொதுவாக இளம் வயதில் நிகழ்ந்து, பல சவால்கள் மற்றும் கஷ்டங்களை கொடுக்கிறது. இந்த காலகட்டத்தில், தவறுகளைச் செய்வதன் மூலம் மனிதன் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.
- பொங்கு சனி: இது இரண்டாவது முறையாக நிகழும் ஏழரை சனி. இது பொதுவாக நடுத்தர வயதில் நிகழ்ந்து, பல சோதனைகளையும், அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு நன்மைகளையும் கொடுக்கிறது. இந்த காலகட்டத்தில், கடந்த கால பாடங்களிலிருந்து கற்றுக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேறலாம்.
- மரண சனி: இது மூன்றாவது முறையாக நிகழும் ஏழரை சனி. இது பொதுவாக முதுமை வயதில் நிகழ்ந்து, உடல்நலம் மற்றும் ஆயுளை பாதிக்கலாம். இந்த காலகட்டத்தில், ஆன்மிகப் பயிற்சிகளில் ஈடுபட்டு, மன அமைதியைப் பெறலாம். பொதுவாக இது வயதான காலத்தில் ஏற்படக்கூடியது என்பதால் இதற்கு மரண சனி என்று பெயரிட்டுள்ளனர். ஆனால் போக்கு சனி என்றும் பாசிட்டிவாக இதை அழைக்கிறார்கள்.
ஒருவர் பிறந்து 30 வயதுக்குள் முதன் முறையாக வரும் ஏழரை சனி காலம் மங்கு சனி எனப்படும். சனி பகவான், முதல் 30 வருடத்துக்குள் ஒருமுறை, 60 வருடத்துக்குள் இரண்டாவது முறை, 90 வருடத்துக்குள் மூன்றாவது முறை வலம் வருகிறார். முதல் வலத்தை மங்கு சனி, அடுத்ததை பொங்கு சனி, மூன்றாவதைப் போக்கு சனி என்பார்கள்
இதை சில உதாரணம் மூலம் விளக்கலாம். 10 வயதில் ஒரு ராசிக்காரருக்கு ஏழரை சனி முதல் முறையாக வந்தால் பிறகு 33 வயதில் அடுத்த சுற்று ஏழரை சனி வரும். அதாவது முதல் சுற்றில் வந்தது மங்கு சனி, 33 வயதில் வந்தது பொங்கு சனி. வயதான பிறகு மூன்றாவது சுற்றில் ஏழரை சனி நிகழ்ந்தால் அது போக்கு சனி என்று கூறப்படுகிறது. ஆனால், பண்டிதர்கள் வேறு வகை கருத்தையும் சொல்கிறார்கள். ரொம்ப சிறு வயதில் வரும் ஏழரை சனி காலகட்டத்தை கருத்தில் எடுக்க கூடாது. விவரம் தெரிந்த பிறகு நிகழும் இரண்டாவது ஏழரை சனி காலகட்டத்தைதான் மங்கு சனி என கருத வேண்டும். 50களுக்கு மேலே வருவதை பொங்கு சனி என கருத வேண்டும் என்றும் ஜோதிடர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதற்கு காரணம், மங்கு சனி காலகட்டத்தில்தான் மனிதன் பல விஷயங்களை படிக்கிறான். கெட்டது செய்ய கூடாது, கடவுள் பக்தி தேவை என்பவற்றை புரிந்துகொள்கிறான். சிறு வயதில் மனிதனுக்கு எதுவும் புரியாது. இதை வைத்து இப்படித்தான் கணக்கீடை செய்துகொள்ளுங்கள் என்கிறார் பிரபல ஜோதிடர் குருஜி.
எனவே பாத சனி முடிந்ததும் ஏழரை சனி காலத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சனி பகவான் நன்மைகளை வழங்கத் தொடங்குவார். அவர் விரய சனி, ஜென்ம சனி, பாத சனி ராசிகளில் வாசம் செய்யும்போது கொடுத்த சோதனைகளை புரிந்துகொள்ள மங்கு சனி காலகட்டம்தான் வெகு பொருத்தம். எனவே நடுத்தர வயதில் ஏற்படும் ஏழரை சனியை மங்கு சனி என்று சொல்வது சரியாக இருக்கும்.
ஒவ்வொரு ராசிகளுக்கும் ஏழரை சனி எப்போது நன்மை செய்வார், மூன்றுவகை ஏழரை சனி என்றால் என்ன என்பது இதன் மூலம் தெளிவாகியிருக்கும் என்று நம்புகிறோம் (elarai sani details in tamil).
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications