அன்னையும் பிதாவும் குருவை முன்னறி தெய்வம்!

Subscribe to Oneindia Tamil

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: நீண்ட நாட்களாக குருபெயர்சியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில் தற்போது கன்னிராசியில் இருக்கும் குரு பகவான் துலாராசிக்கு வாக்கிய பஞ்சாங்கபடி இன்று ஆவனி பதினேழாம் தேதி (2-9-2017)யிலும் திருக்கணித பஞ்சாங்கபடி ஆவனி 27ம்தேதி (12-9-2017)யிலும் பெயர்சியாவதை முன்னிட்டு ஜோதிடர்களும் ஆன்மீகவாதிகளும் குருபெயர்ச்சி யாகங்களுக்கும் பரிகார பூஜைகளுக்கும் விமரிசையான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

Who Is Guru

குரு என்பவர் யார்?

குருர் ப்ரம்மா குருர் விஷ்ணு

குரு தேவோ மஹேஸ்வர:

குரு சாட்சாத் பரப்ரம்மா

தஸ்மை ஸ்ரீ குரவே நம:

குரவே நம:

குரவே ஸர்வ லோகானாம் பிஷஜே பவ ரோகிணாம்

நிதயே ஸர்வ வித்யானாம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே நம:

எவர் குருவோ அவரே பிரம்மா! அவரே விஷ்னு! அவரை சிவன்!

குருவைக் காட்டிலும் அதிகமான தத்துவம் இல்லை. குருவைக் காட்டிலும் அதிகமான தவம் இல்லை. குருவைக் காட்டிலும் அதிகமான ஞானம் இல்லை

குரு மந்திரத்திற்கு எதுவும் சமம் இல்லை குருவிற்கு சமமான தெய்வமும் இல்லை குருவிற்கு சமமான உயர்வுமில்லை.

சிருஸ்டி, இஸ்திதி, சம்ஹாரம், நிக்ரஹம், அனுக்ரஹம் இந்த ஐந்து வகையான செயல்கள்எப்பொழுதும் குருவிடம் பிரகாசித்து கொண்டேஇருக்கும் என சாஸ்திரங்கள் குருவை போற்றுகிறது.

மாதா பிதா குரு தெய்வம் என வேதம் போற்றுகிறது.

தெய்வத்தின் காரகர் ஆசார்யன் எனப்படும் குரு. தெய்வத்தை காண்பிப்பவர் குரு.

குருவை காண்பிப்பவர் யார்? பெற்றெடுத்த தந்தை. அறிவுலக குருவை அறிமுகம் செய்பவர் தந்தை! தந்தையை காண்பிப்பவர் தாய். அவரே ஆதி குரு.

ஜாதகத்தில் நாலாம் பாவம் மாத்ருஸ்தானம் எனப்படுகிறது. ஒன்பதாம் பாவம் பித்ருஸ்தானம் எனப்படுகிறது.

புத்திரம் உதிக்குமிடம் தாயின் கருவறையில். புத்திரகாரகன் உச்சமாகுமிடம் காலபுருஷனுக்கு நான்காம் பாவமான தாயினை மடியான கடகத்தில்.

ஜாதகத்தில் ஒன்பதாம் பாவம் பித்ரு ஸ்தானம். தனுசு ராசி காலபுருஷனுக்கு ஒன்பதாமிடம் குருவின் ஆட்சி மற்றும் மூல திரிகோண வீடு.

குருவின் மற்றொரு ஆட்சி வீடு மீனம். தாய் தந்தையரை வணங்கினால் தெய்வத்தின் அருள் எனும் மோக்ஷத்தை வழங்குமிடம். காலபுருஷனுக்கு அயன சயன போக மோக்ஷ ஸ்தானம்.

குருவிற்கு மட்டுமே தாயின் வீடாகிய கடகம் ஒரு திரிகோண வீடாகவும் தந்தையை குறிக்கும் சூரியனின் வீடாகிய சிம்மம் ஒரு திரிகோணமாகவும் அமைந்திருக்கிறது.

எனவே இந்த குருபெயர்ச்சி நன்னாளில் தாய்தந்தையை வணங்கி குருவருள் பெற்று தெய்வத்தை காண்போமாக!

இதைத்தான் ஔவையாரும் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என கூறியிருக்கிறார்.

நன்றி! வணக்கம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+