கரை சேராத இந்தியா கூட்டணி.. அன்றே கணித்த எண் கணித நிபுணர்.. லோக்சபா தேர்தலில் மகுடம் யாருக்கு?
சென்னை: 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்லுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளது. எதிர்கட்சிகள் வலுவான கூட்டணி அமைத்தால் மட்டுமே ஆளும் பாஜக அரசை வீழ்த்த முடியும். ஆனால் காணும் திசை எங்கும் வலிமையான எதிரிகளை காணவில்லை என்று பாஜக கூறி வருகிறது. இந்தியா கூட்டணி உருவான வேகத்தில் சிதறும் என்று கணித்திருந்தார் பிரபல எண் கணித நிபுணர் ஜெ.என்.எஸ் செல்வன். அது போலவே தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பிரதமர் கனவு: இந்தியாவில் ஒன்றுகூடி 2024 லோக்சபா தேர்தலில் பிரதமர் பதவியை பிடித்து விடலாம் என்ற நினைப்பில் நிதிஷ்குமார் முதல் ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி வரை இரவும் பகலும் கனவு கண்டு கொண்டே இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் யாரும் வெற்றி பெற முடியாத நிலையில்தான் உள்ளது அது ஏன் என்பதை காண்போம்.

ஜாதகம் முடிவு செய்யும்: அந்த காலத்தில் பெரியவர்கள் ஆள் செய்யாததை நாள் செய்யும் என்று சொன்னார்கள். ஜெயலலிதா என்ற ஒரு மாபெரும் சக்தி பல ஆண்டுகளாக மிகப்பெரும் அவருடன் இருந்ததற்கு காரணம் எம்எல்ஏ சீட்டோ அல்லது எம்பி சீட்டோ மாவட்ட செயலாளர் பதவி யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை அவருடைய முழுமையான ஜாதகத்தை வாங்கி சென்று அலசி ஆராய்ந்துதான் சீட் கொடுப்பார்கள். அதுவே வெற்றிக்கு வழி வகுத்தது.
கரை சேராத கூட்டணி: பாஜகவிற்கு எதிராக இந்தியா கூட்டணியை தொடங்கிய நாளில் இருந்தே மேட்டுக்கும் கரைக்கும் இழுத்துக்கொண்டுதான் இருக்கிறார். இப்போது ஆள் ஆளுக்கு தனித்து போட்டி என்று அறிவித்து வருகிறார்கள். ஒருபக்கம் ஆம் ஆத்மி ஒதுங்கிக்கொள்ள மேற்கு வங்காளத்தில் மமதா பானர்ஜி தனித்து போட்டி என்று அறிவித்து விட்டார்.
மம்தா பானர்ஜி: மம்தா பானர்ஜி சொல்வதை நிதிஷ்குமாரோ, சோனியா காந்தியோ, ஸ்டாலினோ கேட்க மாட்டார்கள், அதற்கடுத்து சோனியா சொல்வதை நிதிஷ்குமாரோ,மம்தா பானர்ஜியோ, சந்திரசேகர் ராவ்வோ கேட்க மாட்டார்கள் இது இயல்பான எண்களின் விதி ஆகும் ,ஒரு எண்ணுக்கு எல்லா எண்களும் இணக்கமாக இருக்க முடியாது, இதே மாதிரி பிரதமர் நரேந்திர மோடியுடன் நிதிஷ்குமார் ஒத்துப்போக முடியாமல் இருப்பதற்கு காரணமும் இந்த விதிதான்.
நரேந்திரமோடி: பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடைய பிறந்த நாள் 17 .9 . 1950 நிதிஷ்குமார் பிறந்த நாள் 1.3 1953 இயல்பாகவே நியூமராலஜியின் தத்துவப்படி ஒன்றாம் என்னுடன் அறவே ஒத்துப் போகாத எண் 6 மற்றும் 8ம் எண் ஆகும், பிரதமர் 17என்ற 8ஆம் எண்ணில் உள்ளதாலும் நிதிஷ்குமார் ஒன்றாம் எண்ணில் உள்ளதாலும் தான் இந்த நிலை.
உதவி கிடைக்காது: நிதிஷ்குமார் தன்னை பிரதமராக்க பெரிதும் உதவுவார்கள் என்று நினைத்த மம்தா பானர்ஜி 5.1. 1955 பிறந்துள்ளார், இவர் விதி எண் 8, இதனால் இவருக்கு நிதிஷ்குமாரின் கொள்கை அறவே பிடிக்காது அதனால் நிச்சயமாக நிதிஷ் குமாருக்கு மம்தாவின் உதவி கிடைக்காது.
நிதிஷ்குமார்: பீகாரில் கடந்த 40 வருடங்களாக ஒரு தனித்துவமான அரசியல் தலைவராக வலம் வருபவர் தான் இன்றைய முதல்வராக இருக்கும் நிதிஷ்குமார் மத்திய அமைச்சராகவும் வாஜ்பாய் அவர்கள் காலத்தில் இருந்துள்ளார். பீகாரில் லல்லு ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட பல அவலங்களை மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டுக் காட்டினார் இதனால் அந்த காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் முழுமையாக இவர் பக்கம் சாய்ந்தனர்.
நிதிஷ்குமார் வெற்றிக்கு காரணம்: மக்களின் செல்வாக்கு கிடைத்ததால் மிக எளிதாக தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பொழுது வரை முதலமைச்சராக இருந்து கொண்டு இருக்கிறார். அதே நேரத்தில் தற்பொழுது அரசியல் தளத்தில் தள்ளாடிக் கொண்டு உள்ளார் என்பதையும் அறிய வேண்டும் யாரை எதிர்த்து தொடர்ந்து முதல்வர் ஆனாரோ அவர்களிடமே சரண்டர் ஆனது (தேஜஸ்வி யாதவ்) பீகார் மக்களின் மனதில் இருந்து மெல்ல மெல்ல விலகி போய்விட்டார் என்பது தெளிவாகிறது.
நிதிஷ்குமார் யார்: நிதிஷ் குமார் என்ஐடியில் படித்து பட்டம் பெற்ற ஒரு நல்ல கல்வியாளர் பல புரட்சிகளை செய்தவர் லல்லுவிடம் பகைத்து கொண்டு பாஜகவின் அனுசரணையில் பலகாலம் தனது பதவியைத் தக்கவைத்துக் கொண்டார் இடையில் பாஜகவை பகைத்துக்கொண்டு பழைய பகைவன் ஆகிய லல்லு விடம் சேர்ந்து இப்பொழுது ஆட்சியில் ஒட்டிக் கொண்டுள்ளது பீகாரில் உள்ளவர்களுக்கு சரியாகப் படவில்லை என்றே தோன்றுகிறது. பொதுவாக பார்ட்னர்ஷிப் என்பது பல பேருக்கு ஒத்து வரவில்லை.
உடையும் நட்பு: உலகம் முழுக்க பல நிறுவனங்கள் பல பங்குதாரர்களை கொண்டு முதலில் ஆரம்பமாகும் தடாலடியாக திடீரென்று அவர்களுக்குள் நட்பு முறிந்து நீ பெரியவனா நான் பெரியவனா என்பதில் போய் முடிந்து அவர்கள் தங்களுடைய பார்ட்னர்ஷிப்பை துண்டித்து கொள்வார்கள் இதை நாம் பல பேரிடம் பார்க்கிறோம். இதே நிலைதான் நிதீஷ் குமாருக்கும் ஏற்படப்போகிறது.
ஒட்டாத கூட்டணி: நிதிஷ்குமார் நினைப்பதுபோல முக்கிய எதிர்க் கட்சிகளை இவர் ஒன்றினைக்க முடியாது, ஏனெனில் இவருக்கு சார்பில்லாத பல தலைவர்களின் பிறந்த தினங்கள் தான் இதற்கு காரணம், பொதுவாக தங்கத்துடன் இரும்பை ஒட்ட வைக்க இயலாது என்பது விஞ்ஞான விதியாகும், இதுபோல நிதிஷ்குமார் சொல்வதை மம்தா பானர்ஜியோ, சோனியா காந்தியோ, சந்திரசேகர் ராவோ தேஜஸ்வியோ கேட்க மாட்டார்கள், ஏனெனில் அவர்கள் பிறந்த தேதி இவருக்கு எதிர்ப்பை அளிக்கும் தேதியாகும்.
மோடி உடன் மமதா கூட்டணி?: மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடியுடன் 2024 லோக்சபா நேரத்தில் ஒன்று சேர்ந்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை, ஏனெனில் அவர்கள் இருவருமே 8ம் எண் ஆதிக்கத்தில் உள்ளார்கள் ,நரேந்திர மோடி அவர்களும் மம்தா பானர்ஜியும் எட்டாம் எண் ஆதிக்கத்தில் உள்ளதால் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆக வாய்ப்பு உள்ளது.
கை விட்ட சோனியா: சோனியா காந்தி கண்டிப்பாக நிதிஷ்க்கு ஆதரவளிக்க துணிய மாட்டார் ஏனெனில் சோனியாவின் பிறந்தநாளான 9 .12.1946 அதாவது 9ம் எண் கொஞ்சம் கூட ஒட்ட விடாது நிதிஷ் உடன் அதனால் காங்கிரஸ் கதவும் நிரந்தரமாக அடைக்கப்பட்டு போகலாம். பிகாரின் துணை முதல்வர் தேஜஸ்வியால் விரைவில் நிதீஷ் குமார் முதலமைச்சர் பதவியை இழக்க வேண்டியது வரலாம் ஏனெனில் சோனியாவை போன்றே தேஜஸ்வி யும் 9 ஆம் தேதியில் பிறந்துள்ளதால் நிச்சயம் அந்த எண் அதன் வேலையை காட்ட ஆரம்பிப்பது உறுதி.
நிதிஷ்குமார் நிலை என்ன: சரி நிதிஷ்குமார் நிலைதான் என்ன? அப்படி என்று நீங்க மனதுக்குள்ளே நினைப்பது தெரிகிறது. நிச்சயமாக தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் நிதிஷ்குமாருக்கு உதவலாம் ஏனெனில் இவர் பிறந்த தேதியும் அவர் பிறந்த தேதியும் இணக்கமானது. சீதாராம் எச்சூரி, பிரகாஷ் காரத் உதவலாம் ஏனெனில் அவர்கள் இரண்டு பேரின் பிறந்தநாளும் அவருக்கு சாதகமாக உள்ளது, இது எப்படி இருக்குன்னா மாட்டு வண்டியில் போகும்போது அதுல ஏற்பட்ட கோளாறுக்கு காரில் வந்தவர் அவருடைய டயரை கழட்டி கொடுத்தது போல்தான்.
நிதிஷ்குமார் மனநிலை: இப்போது உள்ள சூழ்நிலையில் நிதிஷ்குமாரை பலரும் கை விட்டு விட்டனர். இதனால் கையறு நிலையில் இருக்கிறார் நிதிஷ்குமார். மீண்டும் பழையபடியே பாஜக கூட்டணியில் இணைந்து விடலாமா என்று யோசித்துக்கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. அப்படி நடந்தால் இந்தியா கூட்டணி அக்கு அக்காக சிதறி பாஜகவிற்கு எதிரான வலிமையான கூட்டணி ஏற்பட வாய்ப்பு இல்லாமலேயே போய் விடுத்.
யார் பிரதமர்: அப்படியானால் 2024 லோக்சபா தேர்தலில் யார் பிரதமராக வாய்ப்பு உள்ளது என்பதை நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள், 8ஆம் எண் காரருக்கே வெற்றி வழங்கப்படும் எந்த சிரமமுமின்றி, 351 சீட்டுக்கு மேல் எம்பி சீட் பிடித்து வெற்றியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வார் இந்த 17ம் தேதி பிறந்தவர் ,வரும் 2024 கூட்டு எண் 8 ஆகும், எனவே 17ஆம் தேதி பிறந்த இவருக்கு தேசம் முழுக்க வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது என நியூமராலஜியின் கணிப்புப்படி உறுதியாக தெரிகிறது என்று கூறியுள்ளார் எண் கணித நிபுணர் ஜெ.என்.எஸ் செல்வன்.
-
Annamalai: தமிழக சட்டசபை தேர்தல்.. ஒரு வழியாக பாஜகவின் "அந்த" பட்டியலில் இடம்பெற்ற அண்ணாமலை பெயர்! -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
நம்மதான் ஜெயிக்கிறோம்.. கோவையில் செந்தில் பாலாஜி மாஸ் திட்டம்.. கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை -
எச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவி? சென்னையில் உறுதி கொடுத்த பிரதமர் மோடி.. பாஜக மேலிடம் எடுத்த முடிவு! -
"அண்ணாமலை சட்டசபைக்குள் வரக்கூடாது என பிளான் போட்ட முக்கிய தலைகள்”.. போட்டு உடைத்த திருச்சி சூர்யா! -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
காலம் இருக்கு.. காட்சிகள் மாறும்! தேர்தலில் போட்டியிடாதது ஏன்? அண்ணாமலை கொடுத்த புது விளக்கம் -
அண்ணாமலைக்கு இந்த பவர்ஃபுல் போஸ்ட்டிங் தர்றாரா மோடி.. கோவை பிடிவாதம் உடைந்ததா? லாபமா? நஷ்டமா -
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஒரு சோர்ந்துபோன கூட்டணி.. புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்! -
Sellur Raju: பாஜகவுடன்தானே? பாகிஸ்தானுடனா கூட்டணி வைத்தோம்? ஆவேசமான செல்லூர் ராஜு! -
விஜய் மனதில் பாஜக இருக்கிறது.. அடித்து சொல்லும் குஷ்பூ.. காரணம் தெரியுமா? -
தேர்தல் பரப்புரையில்.. துரந்தர், கேரளா ஸ்டோரி, காஷ்மீர் ஃபைல்ஸ் பற்றி பேசிய மோடி! கேரளாவில் சலசலப்பு












Click it and Unblock the Notifications