அக்டோபர் மாத பலன் - 5 ராசிகளுக்கு கூரையை பிய்த்து கொண்டு கொட்ட போகும் அதிர்ஷ்டம்
அக்டோபர் பலன்: அக்டோபர் மாதம் பிறந்துவிட்டது. ஆயுத பூஜை, விஜய தசமி, தீபாவளி உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகள் இந்த மாதத்தில் உள்ளன. கொண்டாட்டங்கள் நிறைந்த அக்டோபர் மாதத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். கல்வி உள்ளிட்ட புதிய விஷயங்களை தொடங்குவார்கள். 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த மாதத்தில் பொருளாதாரம், உத்யோகம், தொழில், சுப காரியங்கள் ஆகியவற்றில் ஏற்றம் காணும் 5 ராசிகள் குறித்து காணலாம்.
2025 ஆம் ஆண்டின் பத்தாம் மாதமான அக்டோபர் மாதத்தில் அடி எடுத்து வைத்துள்ளோம். இந்த மாதத்தில் பல்வேறு முக்கிய மாற்றங்களை எதிர்நோக்கி காத்திருப்பார்கள். பொதுவாக பண்டிகைகள், கொண்டாட்டங்கள் அதிகம் நிறைந்தது அக்டோபர் மாதமாகும். அக்டோபர் 1 ஆம் தேதி ஆயுத பூஜை , 2 ஆம் தேதி விஜயதசமி, 20 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும். அக்டோபர் 22 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை சஷ்டி விரதம் கடைபிடிக்கப்படும். 27ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறும். 18 ஆம் தேதி சூரிய பகவான் அதிசாரமாக கடகம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

காதலில் வெற்றி
இதனால் மகரம், விருச்சிகம், மீனம், கடகம் ஆகிய 4 ராசியினருக்கு அடுத்த ஒரு மாதம் மிக சிறப்பான ஏற்றத்தை கொடுக்கும். மிதுனம், துலாம், கும்பம், கன்னி ராசியினருக்கு பண வரவு அற்புதமாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். உத்யோகம், தொழிலில் சிறப்பான பலன்களைதரும். மகரம், மீனம், விருச்சிகம் ராசியினருக்கு காதல் அமைப்பு கைக்கூடும். காதல் உறவு திருமணத்தில் நிறைவேறும்.
தொழிலில் ஜாக்பாட்
இந்த அனைத்து ராசிகளுக்கும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்யோகம், தொழிலில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. கன்னி, மகரம், விருச்சிகம், மீனம், கடகம் ஆகிய 5 ராசிகள் தொழிலில் பிரம்மாண்ட வெற்றியை காண்பார்கள். இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கும்.
திருப்புமுனை
எதிரிகள் பலவீனமாவார்கள். வழக்கு, சொத்து பிரச்சனை உள்ளிட்டவற்றில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். இமாச்சல்பிரதேசம், உத்தரகாண்ட், லடாக் உள்ளிட்ட மலை பிரதேசங்கள் பாதிக்கப்படும். துலாம், மேஷம் உள்ளிட்ட ராசியினருக்கு எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். அரசியல் கூட்டணிகளில் மாற்றம் ஏற்படும். சில கட்சிகள் அதிரடியான முடிவுகளை எடுப்பார்கள். அது தேர்தலில் திருப்பு முனையாக இருக்கும். அரசியல் களம் சூடுபிடிக்கப்படும்.
பரிகாரம்
அரசியல் கட்சி தலைவர்கள் பெரிய பதவிகளில் அமர்வார்ரகள். பீகார், அசாம், அருணாச்சல் பிரதேசம், நாகாலந்து, சிக்கிம் போன்ற பகுதிகளில் பாதிப்பு ஏற்படும். மலேசியா, ஜெர்மன், போலந்து நாடுகளில் மிகப்பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படும். சில பகுதிகளில் நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் பிரச்சனை ஏற்படும். முருகன் வழிபாடு சிறப்பான பலன்களை கொடுக்கும். மகாலட்சுமி பூஜை செய்வது, மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வது தடைகளை விலக்கி நற்பலன்களை அள்ளி கொடுக்கும்.












Click it and Unblock the Notifications