பங்குனி மாத ராசி பலன்: திடீர் பண வரவு, அதிர்ஷ்டம் பெறும் மேஷம் ராசியினர்.. ஆரோக்கியத்தில் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

பங்குனி மாத ராசி பலன்: மாசி மாதம் முடிவடைந்து பங்குனி மாதம் தொடங்குகிறது. இந்த பங்குனி மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

பங்குனி மாதம் பிறந்தாச்சு. மாதங்களில் அற்புதமான மாதமாக பங்குனி மாதம் குறிப்பிடப்படுகிறது. அதாவது, சூரிய பகவான் தனது குருநாதர், பிரகஸ்பதியாகிய, குருவாகிய மீனத்தில் வந்து அமர்ந்து இதுவரை தான் கற்ற பாடங்களை எல்லாம் தனது குருநாதரிடம் சொல்லி மதிப்பெண்கள் பெற்று தேர்விலே தேர்ச்சி அடையக்கூடிய மாதம் இந்த மாதம் பங்குனி மாதம்.

Panuguni month rasi palan Astrology Mesham

அதனால் தான், பரவலாக தேர்வு நடைபெறும் மாதமாக இயற்கையாகவே இந்த மாதம் இருக்கிறது. இதுவரை சம்பாதித்த சம்பாத்தியம், அதற்கான வருமான வரிகள், செலவுகள், சேமிப்பு என்ன என்று கணக்குப் பார்க்கும் மாதமாக இந்தப் பங்குனி மாதம் அமைந்திருக்கிறது. 12 ஆவது மாதமாகிய பங்குனி மாதத்தில் கடைசி நட்சத்திரமாக வரக்கூடிய பங்குனி உத்திரப் பெருவிழா இந்த சிறப்பு மாதத்தில் தான் கொண்டாடப்படும்.

விஷேசமான மாதமாகிய இந்த பங்குனி மாதத்தில்தான் ராமநவமி கொண்டாடப்படும். வழிபாட்டு மாதம், வைபவ மாதம், கல்யாண மாதம், தெய்வ திருமணங்கள் கூடிவரும் மாதம், தெய்வ மாதம் என்று அழைக்கப்படுகிறது பங்குனி மாதம். ராமர் சீதா தேவியை மணந்த மாதம், இலைகள் உதிர்ந்து பச்சை இலைகள் துளிர்க்கும் மாதம், ஸ்ரீ தேவேந்திரன் இந்திராணியை மணந்து கொண்ட மாதம், சந்திரன் 27 நட்சத்திரங்களை மணந்து கொண்ட மாதம், திருமாலின் திருமார்பில் ஸ்ரீ மகாலட்சுமி இடம்பிடித்த அற்புதமான மாதமாக இந்த பங்குனி மாதம் திகழ்கிறது.

இந்த பங்குனி மாதத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, எந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் உங்களுக்கு சாதகமாக இந்த பங்குனி மாதம் முழுவதுமாக அமர்ந்திருக்கிறார். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் நடக்கும். திடீர் வெளியூர் பயணங்கள் உண்டாகும். பிள்ளைகள் போக வேண்டும் என நினைத்த இடங்களுக்குச் சென்று வருவீர்கள். ராசிநாதனாகிய செவ்வாய் 11 ஆம் இடத்தில் அமருவதால் திடீர் பணவரவு, செல்வாக்கு உண்டாகும். விலையுயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.

செவ்வாய் சனி பகவானுடன் சேர்வதால் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. மேஷ ராசிக்காரர்கள் அபிராமி அந்தாதி கேட்பது நல்ல பலன்களைத் தரும், 49, 50, 75 ஆவது பாட்டை படிப்பது நல்ல பலன்களைத் தரும். பிள்ளைகள் விஷயங்களில் கோபதாபம் இல்லாமல் நடந்துகொள்வது நல்லது. பிள்ளைகளிடம் மனம் விட்டுப் பேச வேண்டும். பிள்ளைகளுக்கு தேவையான விஷயங்களை செய்து கொடுப்பது நல்லது. எதிரிகள் விஷயத்தில் இருந்து வந்த பதட்டங்கள் முழுமையாக குறையும்.

வழக்கு போன்ற விஷயங்களில் ஜெயிக்கும் யோகம் உண்டு. திடீர் யோகங்கள், அதிர்ஷ்டம் உண்டாகும். தேக ஆரோக்கியத்தில் முதுகு தொடர்பான பிரச்சனைகள், சளி பிரச்சனைகள் ஏற்படும். உள்ளூர், வெளியூர், தொலைதூரப் பயணங்கள், குடும்பத்தில் நல்ல காரியங்கள், அனுகூலங்கள், சுப விரைய பிராப்தம், வீடு கட்டுவது போன்றவற்றை செய்வீர்கள்.

உத்தியோகத்தில் அற்புதமான ஏற்றத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படும். அனுகூலமான காலகட்டமாக இருக்கும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவில் மேன்மையைக் காண்பீர்கள். எதிர்பார்க்காத இடங்களில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இதுவரை இருந்து வந்த அனைத்து பதட்டங்களில் இருந்தும் விடுதலை அடைவீர்கள். பெரிய மகான்களை சந்திப்பது, குருமார்களை சந்திப்பது, தெய்வ காரியத்தில் ஈடுபடுவது, தொழிலில் தள்ளிக் கொண்டு போன காரியங்ளை செய்து முடிப்பீர்கள்.

நல்ல வேலை ஆட்கள் உங்களுக்கு கிடைப்பார்கள். வேலைகளைப் பிரித்து வழங்கி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். சனி மாறுவதால் உடற்பயிற்சி செய்வது நல்லது. குலதெய்வத்தை கண்டிப்பாக வழிபட்டு வருவது நல்லது. நல்ல விஷயங்கள் ஏற்படும். பெருமாள் வழிபாடு வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+