பங்குனி மாத ராசி பலன்: கடனில் இருந்து தப்பிக்கும் ரிஷபம்.. சூரிய பகவானால் அதிர்ஷ்ட மழை கொட்ட போகுது
பங்குனி மாத ராசி பலன்: மாசி மாதம் முடிவடிடைந்து பங்குனி மாதம் தொடங்குகிறது. இந்த பங்குனி மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
பங்குனி மாதம் பிறந்தாச்சு. மாதங்களில் அற்புதமான மாதமாக பங்குனி மாதம் குறிப்பிடப்படுகிறது. அதாவது, சூரிய பகவான் தனது குருநாதர், பிரகஸ்பதியாகிய, குருவாகிய மீனத்தில் வந்து அமர்ந்து இதுவரை தான் கற்ற பாடங்களை எல்லாம் தனது குருநாதரிடம் சொல்லி மதிப்பெண்கள் பெற்று தேர்விலே தேர்ச்சி அடையக்கூடிய மாதம் இந்த மாதம் பங்குனி மாதம்.

அதனால் தான், பரவலாக தேர்வு நடைபெறும் மாதமாக இயற்கையாகவே இந்த மாதம் இருக்கிறது. இதுவரை சம்பாதித்த சம்பாத்தியம், அதற்கான வருமான வரிகள், செலவுகள், சேமிப்பு என்ன என்று கணக்குப் பார்க்கும் மாதமாக இந்தப் பங்குனி மாதம் அமைந்திருக்கிறது. 12 ஆவது மாதமாகிய பங்குனி மாதத்தில் கடைசி நட்சத்திரமாக வரக்கூடிய பங்குனி உத்திரப் பெருவிழா இந்த சிறப்பு மாதத்தில் தான் கொண்டாடப்படும்.
விஷேசமான மாதமாகிய இந்த பங்குனி மாதத்தில்தான் ராமநவமி கொண்டாடப்படும். வழிபாட்டு மாதம், வைபவ மாதம், கல்யாண மாதம், தெய்வ திருமணங்கள் கூடிவரும் மாதம், தெய்வ மாதம் என்று அழைக்கப்படுகிறது பங்குனி மாதம். ராமர் சீதா தேவியை மணந்த மாதம், இலைகள் உதிர்ந்து பச்சை இலைகள் துளிர்க்கும் மாதம், ஸ்ரீ தேவேந்திரன் இந்திராணியை மணந்து கொண்ட மாதம், சந்திரன் 27 நட்சத்திரங்களை மணந்து கொண்ட மாதம், திருமாலின் திருமார்பில் ஸ்ரீ மகாலட்சுமி இடம்பிடித்த அற்புதமான மாதமாக இந்த பங்குனி மாதம் திகழ்கிறது.
இந்த பங்குனி மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, எந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு 10 ஆம் இடத்தில் அமர்ந்திருந்த சூரியன் லாப ஸ்தானத்தில் வந்து அமருவதால் இந்த பங்குனி மாதம் முழுவதும் அதிர்ஷ்டகரமானதாக இருக்கும். திடீர் பண வரவு, செல்வாக்கு உண்டாகும். நீண்டநாட்களாக விற்காமல் இருந்து வந்த சொத்துகளை விற்று, பழைய கடன்களை அடைப்பீர்கள். இந்த மாதத்தில் நிம்மதி பெருமூச்சு விடும் காலகட்டமாக இருக்கும்.
நீண்டகாலமாக பிள்ளைகளுக்கு தள்ளிப்போன திருமணங்கள் நடக்கக்கூடிய அனுகூலமான காலகட்டமாக இருக்கும். கல்யாணம் கூடிவரும். வீட்டில் அடுத்தடுத்து அனைத்து சுப நிகழ்ச்சிகளும் நடக்கும். நீண்ட வருடங்களாக சென்று வர வேண்டும் என்று நினைத்த கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
உங்கள் ராசிநாதனான சுக்கிரன் இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் ஆளுமைத் தன்மை அதிகரிக்கும். நிர்வாகத் திறமை அதிகரிக்கும். உங்கள் கை இந்த மாதம் முழுவதும் ஓங்கி இருக்கும். குடும்பத்தில், வெளி வட்டாரத்தில் எல்லோராலும் இந்த மாதம் முழுவதும் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும். எதிர்பார்க்காத லாபங்கள் உண்டாகும்.
பங்குதாரர்கள், வேலையாட்கள் பிரச்சனை சரியாகி சுமூகமாக வியாபாரத்தில் லாபம் அதிகமாகும். உத்தியோக வகையில் நல்ல பெயர் கிடைக்கும். சிறு சிறு சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. புதிய உத்தியோகங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. கணவன், மனைவிக்கிடையே அன்பு அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் இருந்து வந்த சின்ன சின்ன மன கஷ்டங்கள், சங்கடங்கள் சரியாகி சகோதரர்களுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும்.
இந்த பங்குனி மாதத்தில் அனைத்து விஷயங்களிலும் வெற்றி மற்றும் முன்னேற்றத்தைப் பெற ஸ்ரீசிவபெருமானை மனதார வழிபடுவது நல்லது. ஏழை நோயாளிகளுக்கு மருத்துவ உதவி அளிப்பது நல்ல பலன்களைத் தரும். பேரீச்சம்பழங்களை தானமாக வழங்குவதால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications