பங்குனி மாத பலன்: மிதுனத்துக்கு தொட்டது எல்லாம் ஜெயம்.. சொத்துகள் வாங்கி குவிக்கும் யோகம்
பங்குனி மாத ராசி பலன்: மாசி மாதம் முடிவடிடைந்து பங்குனி மாதம் தொடங்குகிறது. இந்த பங்குனி மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
பங்குனி மாதம் பிறந்தாச்சு. மாதங்களில் அற்புதமான மாதமாக பங்குனி மாதம் குறிப்பிடப்படுகிறது. அதாவது, சூரிய பகவான் தனது குருநாதர், பிரகஸ்பதியாகிய, குருவாகிய மீனத்தில் வந்து அமர்ந்து இதுவரை தான் கற்ற பாடங்களை எல்லாம் தனது குருநாதரிடம் சொல்லி மதிப்பெண்கள் பெற்று தேர்விலே தேர்ச்சி அடையக்கூடிய மாதம் இந்த மாதம் பங்குனி மாதம்.

அதனால் தான், பரவலாக தேர்வு நடைபெறும் மாதமாக இயற்கையாகவே இந்த மாதம் இருக்கிறது. இதுவரை சம்பாதித்த சம்பாத்தியம், அதற்கான வருமான வரிகள், செலவுகள், சேமிப்பு என்ன என்று கணக்குப் பார்க்கும் மாதமாக இந்தப் பங்குனி மாதம் அமைந்திருக்கிறது. 12 ஆவது மாதமாகிய பங்குனி மாதத்தில் கடைசி நட்சத்திரமாக வரக்கூடிய பங்குனி உத்திரப் பெருவிழா இந்த சிறப்பு மாதத்தில் தான் கொண்டாடப்படும்.
விஷேசமான மாதமாகிய இந்த பங்குனி மாதத்தில்தான் ராமநவமி கொண்டாடப்படும். வழிபாட்டு மாதம், வைபவ மாதம், கல்யாண மாதம், தெய்வ திருமணங்கள் கூடிவரும் மாதம், தெய்வ மாதம் என்று அழைக்கப்படுகிறது பங்குனி மாதம். ராமர் சீதா தேவியை மணந்த மாதம், இலைகள் உதிர்ந்து பச்சை இலைகள் துளிர்க்கும் மாதம், ஸ்ரீ தேவேந்திரன் இந்திராணியை மணந்து கொண்ட மாதம், சந்திரன் 27 நட்சத்திரங்களை மணந்து கொண்ட மாதம், திருமாலின் திருமார்பில் ஸ்ரீ மகாலட்சுமி இடம்பிடித்த அற்புதமான மாதமாக இந்த பங்குனி மாதம் திகழ்கிறது.
இந்த பங்குனி மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன, எந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மிதுன ராசிக்காரர்களுக்கு கடந்த ஒரு மாதகாலமாக 9 ஆவது வீட்டில் அமர்ந்து பாடாய்படுத்தி, பெற்றோர்களுக்கு மருத்துவப் பிரச்சனைகளைக் கொடுத்து வந்த சூரிய பகவான் தற்போது 10 ஆவது வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கிறார். இந்த மாதம் முழுவதுமே குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். குடும்பத்தில் எதிர்பார்த்ததெல்லாம் விரைவில் நடக்கும். கணவன், மனைவிக்குள் இருந்து வந்த பனிப்போர் எல்லாம் சரியாகும். சந்தோஷமான சூழ்நிலை உண்டாகும்.
பூர்வ புண்ணியாதிபதியான சுக்கிரனும் இந்த மாதம் முழுவதும் சாதகமான வீடுகளில் பயணம் செய்வதால் பிள்ளைகளுடைய படிப்பு, ஆரோக்கியம், திருமணம் தொடர்பான கவலைகள் அனைத்தும் விலகி பிள்ளைகள் படிப்பில் முன்னேறுவார்கள். நல்ல அலுவலகத்தில் வேலை கிடைக்கும். வேலை செய்யும் பிள்ளைகளுக்கு திருமணம் கூடி வருவதற்கான வாய்ப்புள்ளது. பழைய இடங்களை கொடுத்துவிட்டு புதிய இடங்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு.
ராசிநாதன் புதன் சாதகமாக இருப்பதால் அனைத்து விஷயங்களிலும் வெற்றியைக் காண்பீர்கள். பங்குனி மாதத்தின் பிற்பகுதியில் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். பங்குனியின் பிற்பகலில் புதன் வக்கிரமாவதால் நிதானமாக இருப்பது நல்லது. சகோதரர் வகையில் உங்களுக்கு அனைத்துவிதமான உதவிகளும் கிடைக்கும்.
அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் வெற்றியைக் காண்பீர்கள். வியாபாரம் இந்த மாதம் முழுக்க லாபகரமாக இருக்கும். புதிய கிளை தொடங்குவது, புதிய ஏஜென்சி துவங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உத்தியோகத்தில் இந்த மாதம் முழுக்க உங்கள் கை ஓங்கியிருக்கும். எல்லா விதத்திலும் வெற்றியைக் காண்பீர்கள்.
இந்த பங்குனி மாதம் உங்களுக்கு வெற்றியைக் கொடுக்க வராஹி அம்மனை வழிபடுவது சிறந்த பலன்களைத் தரும். நடைபாதையில் வசிப்பவர்களுக்கு தயிர் சாதம், குடை, காலணிகளை தானமாக வழங்குவது அபரிமிதமான நற்பலன்களை அள்ளிக் கொடுக்கும்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications