புரட்டாசி சனிக்கிழமை விரதம்.. தடைகள் நீக்கும் தளிகை வழிபாடு.. பெருமாளை தரிசிக்க குவிந்த பக்தர்கள்
சென்னை: புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு பெருமாளை வழிபட்டனர். துளசி தீர்த்தம் அருந்தி பலரும் பெருமாளை வழிபட்டு சென்றனர்.
புரட்டாசி மாதம் என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது பெருமாளுக்கான விரதம் தான். பெருமாளுக்கு உரிய மாதமாக புரட்டாசி மாதம் சொல்லப்படுகிறது. காக்கும் கடவுளான திருமாலுக்கு உரிய மாதமாக புரட்டாசியை சொல்வதால் அந்த மாதத்தில் விரதம் இருந்தால் பெருமாளின் அருள் மட்டுமல்ல அனைத்து தெய்வங்களின் அருளையும் பெற்று விடலாம்.

புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து மாவிளக்கு ஏற்றி வழிபட்டால் வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. சனிபகவானால் ஏற்பட்டும் சிக்கல்கள் நீங்கும் என்பதால் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். விரதம் இருந்து தளிகை போட்டு பெருமாளை வழிபட்டால் தடைகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையான இன்று காலை முதலே பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் அதிகாலை முதலே பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சென்னை திநகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான பெருமாள் கோவிலில் பக்தர்கள் நிண்ட நேரம் என்று சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் புரட்டாசி முதல் சனிக்கிழமையை ஒட்டி, திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது . நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயில், மாமல்லபுரம் ஸ்தல சமய பெருமாள் கோயில், சிங்கப்பெமாள் கோயில் பாடலாத்ரி நரசிம்மர் கோயில், திருநீர்மலை நீர் வண்ண பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோயில், திருமுல்லைவாயில் பொன்சாமி பெருமாள் கோயில், திருவள்ளூர் வைத்திய வீரராகவபெருமாள் கோயில், ஸ்ரீபெரும்புத்தூர் ஆதிகேசவ பெருமாள் கோயில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் பக்தர்கள் காலை முதலே சாமி தரிசனம் செய்தனர். திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர் கோவிந்தா முழக்கமிட்டு வழிபாடு செய்தனர்.
திருச்சி மாவட்டம் உறையூர் அழகிய மணவாள பெருமாள் திருக்கோயில், உத்தமர்கோயில் புருஷோத்தம பெருமாள் திருக்கோயில், குணசீலம் பிரசன்ன வெங்கடாசல பெருமாள் திருக்கோயில், தான்தோன்றி மலை கல்யாண வெங்கடராம பெருமாள் திருக்கோயில்களிலும், திருகண்டியூர் சாபவிமோச்சன பெருமாள் திருக்கோயில், கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் திருக்கோயில், திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் பெருமாள் திருக்கோயில், நாச்சியார் கோயில் சீனிவாச பெருமாள் திருக்கோயில், திருச்சேறை சாரநாத பெருமாள் திருக்கோயில், மன்னார்குடி இராஜகோபால சுவாமி திருக்கோயில், வடுவூர் கோதண்டராம சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட கோவில்களிலும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் கள்ளழகர் திருக்கோயில், ஒத்தகடை யோக நரசிம்ம பெருமாள் திருக்கோயில், திருமோகூர் காளமேக பெருமாள் திருக்கோயில், திருகோஷ்டியூர் சௌம்ய நாராயண பெருமாள் திருக்கோயில், கூடலழகர் பெருமாள் திருக்கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில், திருத்தங்கல் திருநின்ற நாராயண பெருமாள் கோவில், விருதுநகர் மாவட்டம் திருவண்ணாமலை பெருமாள் கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் எழுப்பிய கோவிந்தா முழக்கம் விண்ணை எட்டியது.
புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்தால் பெருமாளின் ஆசியால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். சனியின் பார்வையும் பலவீனமடையும். சனி திசை நடப்பில் இருப்பவர்கள், ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டக சனி என்று சனியின் பிடியில் இருப்பவர்கள் புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை தரிசித்து பிரார்த்தனை செய்தால் தடைகள் நீங்கும். சுபயோகம் கூடிவரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். புனர்ப்பு தோஷத்தினால் திருமண தடை ஏற்பட்டுள்ளவர்கள் சனிக்கிழமைகளில் விரதமிருந்து பெருமாளுக்கு படையல் போட்டு வழிபடலாம். திருமணம் நடைபெறுவதில் ஏற்பட்ட தடைகள் நீங்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications