Purattasi matha palan: துலாம் ராசியை சுத்து போடும் பிரச்சனைகள்.. குருவின் அருளால் வரும் மாற்றம்
புரட்டாசி மாத பலன்: ஆவணி மாதம் நிறைவடைந்து புரட்டாசி மாதம் தொடங்கவுள்ளது. இந்த புரட்டாசி மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. கன்னி ராசிக்கு சூரியன் செல்லக்கூடிய மாதமான இந்த புரட்டாசி மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும். இந்த பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். ஆவணி மாதம் முடிந்து புரட்டாசி மாதம் தொடங்கவுள்ளது. கன்னி ராசியில் சூரியன் வரக்கூடிய மாதமே புரட்டாசி மாதம். செப்டம்பர் 17 ஆம் தேதி இந்த பிரவேஷம் நடக்கிறது.

சூரியனும் புதனும் இணைந்து இந்த புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் அமர்கின்றனர். சுக்கிரன், கேது பஞ்சம ஸ்தானம் எனும் சிம்ம ராசியில் அமர்ந்திருக்கின்றனர். சனி வக்கிரம் பெற்று சனி வக்கிரப் பார்வையால் சூரியனும், புதனும் மாட்டிக் கொள்ளும் சூழல் உள்ளது. சூரியனால் சனி பாதிக்கப்படும் நிலை உள்ளது. குரு மிதுனத்திலும், ராகு கும்பத்திலும் அமர்ந்திருக்கின்றனர்.
புதன் என்றால் பெருமாள். புரட்டாசி மாதத்தில் பசு மாடுகளுக்கு, மீன்களுக்கு அன்னதானம் கொடுப்பது அற்புதமான பலன்களைத் தரும். சனிக்கிழமை தோறும் விரதம் இருப்பது நன்மை பயக்கும். இந்த புரட்டாசி மாதத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசி அல்லது லக்கினக்காரர்களுக்கு பாக்கிய ஸ்தானத்தில் குரு இருப்பதால் எல்லா விதமான பாதிப்பில் இருந்து தப்பிக்கும் யோகம் உண்டாகும். பெரிய விதமான பிரச்சனைகள் இல்லாமல் சமாளிப்பீர்கள். மீனத்தில் சனி வக்கிரமாக அமர்ந்திருப்பதாலும், விரையத்தில் சூரியன் அமர்ந்திருப்பதாலும் எலும்பு வலி, மறைமுகப் பிரச்சனைகள், ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படும்.
கடன் பிரச்சனை
கடனால் பயங்கரமான அவதிக்குள்ளாவீர்கள். சிலருக்கு மறைமுக பிரச்சனைகள் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியே இல்லாமல் சண்டை, சச்சரவுகள், தூக்கமின்மை, எதிரி தொல்லை போன்றவை உண்டாகும். முடிந்த சண்டைகளால் கூட மீண்டும் பிரச்சனை உண்டாகும் சூழல் உள்ளது. எதிரிகளால் சூழ்ச்சி ஏற்படும் வாய்ப்புள்ளது.
குருவின் அருள்
துலாம் ராசிக்காரர்களுக்கு பாக்கிய ஸ்தானத்தில் குரு இருப்பதால் பெரிய ஆபத்துகள் வராது. ஆனால், ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. பயணங்களில் மிகுந்த கவனம் தேவை. பாஸ்போர்ட், விசா, பத்திரங்கள், ஆவணங்கள், சான்றிதழ்கள் போன்றவற்றை தொலைப்பது போன்ற நிலை ஏற்படும். தலைசுற்றல், மயக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
கவனம்
பண விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். டெப்பாசிட், நல்ல வட்டி போன்றவற்றில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. சுக்கிரன், கேது இணைவதால் கூடா நட்பால் கேடு விளைவிக்கும். நண்பர்களுடைய சகவாசத்தை துண்டிப்பது நல்லது. நண்பராக தான் பேசினேன் என்று கூறுபவர்களுக்கு பெயர் கெடும் வாய்ப்புள்ளது.
வழிபாடு
துலாம் ராசியினர் கவனமாக இருக்கும் நேரமாக இந்த புரட்டாசி மாதம் அமைந்திருக்கும். சந்தோஷம் ரீதியாகவும், பொருளாதாரம் ரீதியாகவும் 80 சதவீத நன்மைகளைப் பெறுவீர்கள். அனைத்து விதமான பிரச்சனைகளில் இருந்தும், பாதிப்புகளில் இருந்தும் குருவின் பார்வையால் தப்பிக்கும் யோகம் உண்டாகும். லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்வது உங்களுக்கு நல்ல ஏற்றத்தையும், மாற்றத்தையும் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications