புத்தாண்டு 2025: மாற்றத்தை காணப்போகும் மகர ராசி.. என்னென்ன நற்பலன்களை தரப் போகிறது?
புத்தாண்டு பலன் 2025: கடந்த எட்டு ஆண்டுகளாக பல்வேறு துன்பங்களைச் சந்தித்து வந்த மகர ராசிக்காரர்களோ வரும் புத்தாண்டு மாற்றத்தை தரும் ஆண்டாக அமையப் போகிறது. அந்த வகையில், 2025 புத்தாண்டு மகர ராசிக்காரர்களுக்கு என்னென்ன நற்பலன்களைத் தரப்போகிறது. எந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.. (New year rasi palan for Magaram)
ஏழரை நாட்டு சனி ஆரம்பித்ததில் இருந்தே பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வந்த மகர ராசிக்காரர்கள், எல்லாவற்றையும் இழந்துவிட்டேன் இனி இழப்பதற்கு ஒன்றுமே என்னிடம் இல்லை எனும் நிலையில் தான் இருப்பீர்கள். உடல் அளவிலும், மனதளவிலும் பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள். சொந்த பந்தங்களுடன் பிரச்னை ஏற்பட்டு வந்திருக்கும். வரும் 2025 ஆண்டு உங்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தைக் கொடுக்கப் போகிறது. விடைதெரியாத கேள்விகளுக்கும் பதிலைத் தரும் அற்புதமான ஆண்டாக அமையும். (Puthandu palan for Magaram)

உடலளவில், மனதளவில் இருந்து வந்த அனைத்துப் பிரச்னைகளும் தீரும். எண்ணம், சிந்தனை தெளிவடையும். புதியதொரு தைரியத்தை இந்தப் புத்தாண்டு உங்களுக்கு கொடுக்கும். குறிப்பாக, குடும்ப வாழ்க்கையே இல்லை என்று நினைத்து வருத்தப்பட்டவர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் நிம்மதியும், சந்தோஷமும் ஏற்படும். வாக்கில் இருந்த தடுமாற்றங்கள் மாறும்.
பணம் சார்ந்து இருந்து வந்த அனைத்து நெருக்கடிகளும் சரியாகும். கடன்களை கட்டி முடிப்பீர்கள். 2025 இல் தேவைக்கு மிஞ்சிய பணத்தை கையில் வைத்திருப்பீர்கள். மாணவர்களுக்கு மிகப்பெரிய மாற்றத்தை தரக்கூடிய ஆண்டாக அமையும். குடும்ப உறவுகளுக்குள் இருந்து வந்த பிரிவுகள், பிரச்னைகள், சுணக்கங்கள் சரியாகும். (2025 magara rasi palan)
மூன்றாம் இடத்தில் சனி பகவான் ஏழரை நாட்டு சனியாகப் பெயர்ச்சியாகி கழிவுடையாக முடிவடைவதால், திருக்கணிதப் பஞ்சாங்கப்படி ஏழரை சனி மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. சனி முடியும்போது உங்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை ஏற்படுத்தும். மூன்றில் சனி குருவுடைய வீட்டில் வரும்போது நல்ல தன்னம்பிக்கையுடன் பல முயற்சிகளை எடுத்து வெற்றி பெறுவீர்கள்.
பிரிந்த உறவுகள் எல்லாம் தானாக தேடி வருவார்கள். நண்பர்களால் ஏற்பட்ட மன வருத்தங்கள் அனைத்தும் மாறுபடும். நம்மைப் புரிந்து கொண்டு அனைவரும் வழிநடத்தக்கூடிய காலம் வரும். 2025 இல் மகர ராசிக்காரர்களுக்கு மண் சேர்க்கை உண்டு. வீடு, மனை, தொழில் தொடங்கும் யோகம் உண்டு. புதிய கார், இருசக்கர வாகனம் வாங்கும் யோகங்கள் கூடிவரும்.
தாய்ப்பாசத்தில் மிஞ்சியவர்கள் மகர ராசிக்காரர்கள். இதுவரை உங்களை நினைத்து கவலையடைந்து வந்த தாய் நிம்மதி அடைவார்கள். தொழில் சார்ந்த விஷயங்களில் புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். ஏழரை வருடமாகவே சுய சிந்தனையுடன் எந்தவொரு வேலையையும் செய்திருக்க மாட்டீர்கள். அந்த வலிகள் அனைத்தும் மாறும்.
தொழில், குடும்பம், வேலை, தாய் என அனைத்துப் பிரச்னையில் இருந்தும் விடுபட்டு நிம்மதியாக இனி தூங்குவீர்கள். குழந்தை பாக்கியத்துக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். தீர்க்க முடியாத கடன் சுமைகளில் இருந்து மீண்டு வருவீர்கள். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.
கடந்த எட்டு வருடமாக தடைபட்டு வந்த திருமணங்கள் நடக்கும். புதிய காதல் கைகூடும், பிரிந்து வாழ்ந்து வந்த கணவன், மனைவி சேர்ந்து வாழ்வீர்கள், அப்பாவுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். கொடுக்கல், வாங்கல்கள் சிக்கல்கள் தீரும். பூர்வீகத்தில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். குறிப்பாக, புதிய பட்டம், பதவி, பெயர், புகழ் உங்களைத் தேடி வரும். ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு நல்ல பொறுப்பு வரும்.
11 இடம் லாபத்தில் வருவதால் பண வரவு மிகுதியாகவே இருக்கும். கடந்த ஏழரை ஆண்டுகளாக பூஜை, வழிபாடு நடத்தி வந்த எல்லா பிரார்த்தனைகளும் 2025 முதல் நிறைவேறும்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: ஏழரை சனி முடிவடைவந்தாலும், ராகு கேது பெயர்ச்சி சாதகமாக இல்லை. 2 ஆம் இடத்தில் ராகுவும், ராசிக்கு எட்டில் கேதுவும் வருவதால் கோச்சார அடிப்படையில் நாக தோஷத்தை ஏற்படுத்தும். எனவே, பேசுகின்ற வார்த்தையில் கவனமாக இருக்க வேண்டும். பண வரவுகள் இருந்தாலும் அதனை சுப விரயங்களாகச் செய்வது நல்லது. பணம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
எட்டாம் இடத்தில் கேது இருப்பதால் புதிய காதல் மலரும். புதிய உறவுகள் தானாக தேடி வரும். மாற்று பாலினம் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க கூடாது. கொடுக்கல், வாங்கலில் நிதானம் தேவை.
தொழில்: மகர ராசிக்காரர்களைப பொருத்தவரை கலைத் துறை, சினிமா, பட்டு நூல், வழக்கறிஞர்கள், அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் தரும்.
மாணவர்கள்: மாணவர்களுக்கு வாக்கு ஸ்தானத்தில் இருந்து வந்த சனி விலகுகிறது. மார்ச் மாதத்திற்குப் பிறகு கல்வியில் இருந்த சுணக்கங்கள் தீரும். ஆன்சைட் வாய்ப்புகள் வரும். அரியர் வைத்திருந்தவர்கள் அதில் தேர்ச்சி பெறுவார்கள். மாணவர்களுக்கு நல்ல ஆண்டாக இருக்கும். விரும்பிய துறைகள் கிடைக்கும்.
பெண்கள்: உங்கள் கருணை மனதைக் கொஞ்சம் கட்டுப்படுத்தி வைத்தாலே பல பிரச்னைகளில் இருந்து நீங்கள் விடுபட்டு விடுவீர்கள். தொழில், சினிமா துறை சார்ந்து இருக்கும் பெண்களுக்கு சிறந்த வருடமாக அமையும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல் துறையில் இருக்கும் பெண்களுக்கு உயர் பொறுப்பு, உயர் பதவியைப் பெற்றுத் தரும். நீதித் துறை சார்ந்த பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தேர்வில் வெற்றி பெறுவீர்கள். பெண்களுக்கு எட்டு வருட கனவுகள் நிறைவாகும்.
பரிகாரங்கள்: செவ்வாய்க்கிழமை தோறும் முருகப் பெருமானை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். நவக்கிரகத்தை நினைத்து விளக்குப் போடுவது நல்லது. செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி வழிபாடு நல்ல பலன்களைத் தரும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications