New Year Rasi Palan: கும்ப ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்.. ரொம்ப கவனமும் தேவை

Subscribe to Oneindia Tamil

புத்தாண்டு பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறக்கப் போகிறது. வரப்போகின்ற புத்தாண்டு புதுமையைத் தருவதாக அமைய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குமே இருக்கும். அந்த வகையில், இந்தப் புத்தாண்டில் கும்பம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

2026 புத்தாண்டின் ஆரம்பத்திலேயே குரு பகவான் வக்ர நிவர்த்தியில் மிதுனத்தில் இருக்கிறார். பிப்ரவரி மாதம் வரைக்குமே குரு பகவான் வக்ரத்துடன் தான் இருக்கிறார். குரு வக்கிரமடைந்து ராகுவுடன் இணையும் போது பொதுவாகவே அந்த அளவுக்கு பிரம்மாண்டமான துவக்கமாக இந்த ஆண்டு இருக்காது. மார்ச் மாதம் வரைக்குமே எல்லோருக்கும் ஒரு சுமாரான காலகட்டமாகவே இருக்கும்.

puthandu-palan-kumbam-rasi-people-will-get-good-fortunes-and-lots-of-money-during-this-year

மார்ச் மாதத்திற்குப் பிறகும் நல்ல மாற்றம் ஏற்படும். ஜூன் மாதத்திற்குப் பிறகு முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தும். குரு பகவான் உச்சம் பெற்று புஷ்ய யோகத்துக்கு வருகிறார். குரு பூசம் நட்சத்திரத்திற்கு வரும்போது நாடே நன்றாக இருக்கும். அந்த அளவுக்கு செல்வம் வளரும். தங்கம் விலை அபரிமிதான விலை உயர்வை அடையும். இந்தப் புத்தாண்டில் கும்பம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.

கும்பம் புத்தாண்டு பலன்

கும்பம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு அருமையான புத்தாண்டாக இருக்கும். குடும்பத்துக்கு தேவையான காசு, பணம் முழுமையாக வரும். பிரம்மாண்டமான வீடு, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். கலைத் துறையில் சிறந்து விளங்குவீர்கள். நிறைய பேருக்கு கடனை அடைக்கும் யோகம் ஏற்படும். புதிதாக கடன்களை வாங்குவீர்கள்.

திருமண யோகம்

பிள்ளைகள் செட்டிலாகும் யோகம் ஏற்படும். மகன், மகளுக்கு திருமண யோகம் ஏற்படும். பிள்ளைகள் மூலம் வரும் பணமெல்லாம் வந்து சேரும். இதுவரை இருந்து வந்த பாதிப்புகள், கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். எதிர்பார்த்த விஷயங்கள் அனைத்தும் அடுத்தடுத்து நடக்கும். பஞ்சம் ஸ்தானத்தில் குரு இருக்கும்வரை எப்போதும் கண்டம் இருக்கும்.

ஆரோக்கியம்

வயதுக்கு மூத்தவர்களை காதலிப்பது, விபத்தில் சிக்குவது, ஆரோக்கியம் கெடுவது, வயதுக்கு மூத்த அநாகரிகமான விஷயங்களில் ஈடுபடுவது போன்ற நிலைமைகள் ஏற்படும் என்பதனால் கவனமாக இருப்பது நல்லது. உணவுக் குழாயில் பிரச்சனை, வயிறு, அஜீரண கோளாறு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். புதிய வேலை, நிரந்தரமான வேலை கிடைக்கும்.

ஜெயம்

எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். வேறு மொழி, வேறு இனம், வேறு மதம் பேசக்கூடிய நண்பர்கள் மூலமாக நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டம் வரக்கூடிய வாய்ப்புள்ளது. அதிக வட்டிக்கு வாங்கியிருக்கும் கடன்கள் தீரும். மருந்து மாத்திரைக்கான செலவு, வெளிநாட்டில் தனிமையில் இருப்பது போன்ற உணர்வு நீங்கும்.

பொறுப்புகள் கிடைக்கும்

தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் உங்களை நம்பி பல பொறுப்புகளைக் கொடுப்பார்கள். அரசு வேலைகள் கிடைக்கும். பணம், பொருளாதார ஏற்றத்துக்குப் பஞ்சம் இருக்காது. அதீத சிந்தனையைத் தவிர்ப்பது நல்லது.

நல்ல விஷயங்கள் நடக்கக்கூடிய அற்புதமான காலகட்டமாக இருக்கும். சந்தோஷம் 80 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 85 சதவீதமும் நன்றாக இருக்கும். தன்வந்தரி வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+