New Year Rasi Palan: 2026ல் மீனம் ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. குருவின் அருளால் அதிர்ஷ்டம் கொட்டும்
புத்தாண்டு பலன்: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறக்கப் போகிறது. வரப்போகின்ற புத்தாண்டு புதுமையைத் தருவதாக அமைய வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குமே இருக்கும். அந்த வகையில், இந்தப் புத்தாண்டில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
2026 புத்தாண்டின் ஆரம்பத்திலேயே குரு பகவான் வக்ர நிவர்த்தியில் மிதுனத்தில் இருக்கிறார். பிப்ரவரி மாதம் வரைக்குமே குரு பகவான் வக்ரத்துடன் தான் இருக்கிறார். குரு வக்கிரமடைந்து ராகுவுடன் இணையும் போது பொதுவாகவே அந்த அளவுக்கு பிரம்மாண்டமான துவக்கமாக இந்த ஆண்டு இருக்காது. மார்ச் மாதம் வரைக்குமே எல்லோருக்கும் ஒரு சுமாரான காலகட்டமாகவே இருக்கும்.

மார்ச் மாதத்திற்குப் பிறகும் நல்ல மாற்றம் ஏற்படும். ஜூன் மாதத்திற்குப் பிறகு முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தும். குரு பகவான் உச்சம் பெற்று புஷ்ய யோகத்துக்கு வருகிறார். குரு பூசம் நட்சத்திரத்திற்கு வரும்போது நாடே நன்றாக இருக்கும். அந்த அளவுக்கு செல்வம் வளரும். தங்கம் விலை அபரிமிதான விலை உயர்வை அடையும். இந்தப் புத்தாண்டில் மீனம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
மீனம் புத்தாண்டு பலன்
மீனம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு அற்புதமான புத்தாண்டாக இருக்கும். இந்தப் புத்தாண்டில் 4 வதாக ஜாக்பாட் அடிக்கும் ராசி என்றால் அது நீங்கள். எப்போதும் சோகம், அழுகை, வேதனை என்று இருந்த காலம், கவலை எல்லாம் நீங்கும். திரிகோணத்தில் குரு வரப்போவதால் ஜூன் மாதத்திற்குப் பிறகு முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துகள் கைக்கு வரும்.
திடீர் பணவரவு
திடீர் பண வரவு உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டில் பேரக் குழந்தைகள் பிறக்கும் யோகம் உண்டாகும். காதல், திருமணம் கைகூடும். பல பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பஞ்சம ஸ்தானம் வலிமையாக இருக்கும்போது விருதுகள், அங்கீகாரம் கிடைக்கும். நிரந்தரமான வேலை கிடைக்கும். அரசியல்வாதி, அரசியல்வாதிகள் தொடர்புகளில் இருப்பவர்களுக்கு ஆட்சியமைக்கும் யோகம் ஏற்படும்.
தேர்தலில் வெற்றி
தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு மீனத்திற்கு உள்ளது. வேலை, வியாபாரம், தொழிலில் அற்புதமான ஏற்றம் ஏற்படும். எதிர்பாராத வேதனை, அவமானம், துக்கம், அசிங்கம், ஆபத்து, ஜெயில் போன்றவை இனி உங்களை அண்டவே அண்டாது. அஷ்டமத்தில் குரு பார்ப்பதால் அற்புதமான காலகட்டமாக இருக்கும். பல நல்ல விஷயங்கள் நடக்கும். எதிர்பார்க்காத அத்தனை நன்மைகள் ஏற்படும். முழு தெய்வ அனுக்கிரகம் உண்டாகும்.
வழிபாடு
பாக்கிய ஸ்தானத்துக்கு நேரடியாக குரு இருப்பதால் வாழ்க்கையே மாறும். பெரிய பெரிய விஷயங்கள் எளிமையாக நடக்கும். திருப்தியும், வெற்றியும் கொடுக்கும். பெண்களுக்கு சூப்பரான காலகட்டமாக இருக்கும். பிரச்சனைகளில் இருந்து வெளியில் வருவீர்கள். சொந்த ஊருக்குச் செல்லும் யோகம் ஏற்படும். ஸ்ரீரங்கநாத பெருமாளை மனதார வணக்குவது உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். மஞ்சள், குங்குமம் வாங்கி சுவாமிக்கு கொடுப்பது மிகப்பெரிய ஏற்றத்தை தரும்.












Click it and Unblock the Notifications