ஆட்டத்தை ஆரம்பிக்கும் சிம்ம ராசி.. இழந்ததை மீட்டு, வாழ்க்கையில் உயரும் நேரம்

Subscribe to Oneindia Tamil

ராகு கேது பெயர்ச்சி: நிழல் கிரகங்களான ராகு, கேதுவின் பெயர்ச்சி டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த கிரகங்களின் பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி, சிம்ம ராசியினருக்கு என்ன விதமான பலன்களை கொடுக்கப் போகிறது, முன்னேற்றத்தை ஏற்படுத்துமா, கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி ராகு கேது பெயர்ச்சி என்பது மிகவும் முக்கியமான பெயர்ச்சிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது, ஒவ்வொரு ராசியிலும் சுமார் ஒன்றரை ஆண்டுகள் பயணித்து வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது.

rahu-ketu-peyarchi-2026-massive-changes-ahead-for-simmam-rasi-people-in-this-rahu-ketu-peyarchi

சிம்ம ராசியில் இருந்த கேது பகவான் கடக ராசிக்குள் வருகிறார். கும்ப ராசியில் இருந்த ராகு பகவான் மகரம் ராசிக்குள் வருகிறார். இது உலக அளவிலும், தனிமனித வாழ்க்கையிலும் ஏராளமான மாற்றங்களை உருவாக்கும். இந்த ராகு கேது பெயர்ச்சியால் சிம்ம ராசியினருக்கு தொழில், குடும்பம், வேலை, ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசியினருக்கு ராசியில் இருந்த கேது பகவான் 12 ஆம் இடத்துக்குப் போகிறார். 7 ஆம் இடத்தில் இருந்த ராகு பகவான் ராசிக்குள் வருகிறார். அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய சந்தோஷமான மாற்றங்கள் வரக்கூடிய நல்ல காலகட்டம். ராசியில் கேது, அஷ்டம சனி இருந்ததால் பல இழப்புகளை சந்தித்திருப்பீர்கள். வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் இருந்தவர்கள் கூட தாழ்ந்த நிலைக்கு வந்திருப்பீர்கள்.

யோகம்

வம்பு, வழக்குகள், அதிரடி இறக்கங்கள், குடும்ப வாழ்க்கையில் குழப்பம் இருந்திருக்கும். இப்போது ராசியில் இருந்த கேது பகவான் விலகியுள்ளதே பெரிய யோகத்தைத் தரும். இதுநாள் வரை இருந்து தடைகள் அனைத்தும் நீங்கும். 6 ஆம் இடம் என்பது உங்களுக்கு உபஜெய ஸ்தானம். எதிரிகளை வீழ்த்தக்கூடிய அற்புதமான காலகட்டம். நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

எதிரிகள் தொல்லை நீங்கும்

எதிரிகளைக் கண்டு பயப்பட்ட காலங்கள் எல்லாம் நீங்கி, எதிரிகளை வெல்வீர்கள். தொழில், குடும்ப உறவில் இருந்த எதிரிகள் தொல்லைகள் தீரும். 2027 ஜூன் மாதத்திற்குப் பிறகு பெரிய பெரிய மாற்றங்கள் உங்களுக்கு நிச்சயம் ஏற்படும். குரு பகவானும் 2027 இரண்டாம் பகுதியில் உங்கள் ராசியில் வந்து அமர்ந்த பிறகு பிள்ளைகளின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

திருமண தடை நீங்கும்

நிதி சார்ந்த விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நீங்கும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு செயற்கை கருத்தரித்தல் மூலமாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். கேது 12 ஆம் இடத்திற்குப் போகும்போது ஆன்மீகப் பயணங்கள் அதிகரிக்கும். மன அழுத்தம், மனதில் இருந்து வந்த சங்கடங்கள் தீரும்.

சொந்த தொழில்

சேவைத் துறையில் இருப்பவர்களுக்கு பெரிய வளர்ச்சி ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான யோகம் உண்டாகும். நல்ல பணியாளர்கள் கிடைப்பார்கள். பிற மொழிகள் பேசும் பணியாளர்கள் கிடைப்பார்கள். உங்களை விட்டு பிரிந்து சென்ற நண்பர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். மீண்டும் வந்து உங்களிடம் இணைவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

வேலைவாய்ப்பு

இழந்த மதிப்பு, மரியாதையை மீண்டும் பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். புதிய தொழில்நுட்பங்களை தொழில் பயன்படுத்துவது நன்மை பயக்கும். உடல் ரீதியாக இருந்து வந்த பாதிப்புகளுக்கு உரிய மருத்துவ ஆலோசனை கிடைக்கும்.

குடும்பத்தில் மூன்றாம் நபர்கள் தலையீடு விலகும். நிம்மதி பிறக்கும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் பிறக்கும். மோதல், சண்டைகள் எல்லாம் நிவர்த்தியாகும். வாழ்க்கையில் மீண்டும் உயர்நிலையைப் பெறுவீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+